சோயா மொச்சையில் போரான் சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
இலைகள் மஞ்சள் நிறமாகிவிடும்.
இலை நுனி மற்றும் ஒரங்கள் காய்ந்துவிடும். வளரும் நுனி அழுகிவிடும்.
வெளிர்தல் ஏற்பட்ட இலைகள் பழுப்பு நிறமாகி உதிர்ந்துவிடும்.
குறைந்த எண்ணிக்கையில் காய்கள் உருவாகி முதிர்ச்சி அடைவது தாமதமாகும்.
நிவர்த்தி
போராக்ஸ் (3 கிராம் /லிட்டர்) கரைசலை 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை அறிகுறிகள் மறையும் வரை இலை வழியாகத் தெளிக்க வேண்டும்.
போராக்ஸ் (5 கிராம் /எக்டர்) விதைப்புக்கு முன் நிலத்தில் இடலாம்.