Agriculture
தாவர ஊட்டச்சத்து :: சர்க்கரைப் பயிர் :: கரும்பு

 

கரும்பில் இரும்புச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • இளம் இலைகளில் வெளிர்ந்த கோடுகளுடன், சொற்ப பச்சையம் இலையின் இணைகோடுகளுக்கு இடையிலும் காணப்படும்.
  • இலைகளில் நரம்புகள் மற்றும் நடு நரம்புகள் முழுதும் வெள்ளையாகின்றது.
  •   கணுவிடைப் பகுதி சுருங்கி, கரும்பு குட்டையாக வளர்ச்சி குன்றிக் காணப்படும்.
  • வேர் வளர்ச்சி தடைப்பட்டு விடும்.

நிவர்த்தி :

  • ஹெக்டேருக்கு 100 கி.கி ஃபெர்ரஸ் சல்பேட் உரத்தினை 12.5 டன்கள் தொழு உரத்துடன் கலந்து இடலாம்.

  • மாற்றாக 5 கி.கி பெர்ரஸ் சல்ஃபேட் உரத்தினை 2.5 கி.கி யூரியாவுடன் கலந்து, 500 லி தண்ணீரில் கரைத்து ஒரு ஹெக்டேருக்கு தெளிக்கலாம்.
  • குறைபாடு அதிக அளவில் இருந்தால் இத்தெளிப்பினை 7-10 நாட்கள் இடைவெளியில் மீண்டும் தெளிக்கலாம்.
  • எக்டருக்கு 25 கிலோ பெர்ரஸ் சல்பேட்டை மண்வழி இடலாம்  அல்லது 0.5% பெர்ரஸ் சல்பேட்டை 90, 105 மற்றும் 120 நாட்களுக்கு பிறகு இலைமூலம் செலுத்தலாம்.
 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015

Fodder Cholam