Nitrogen

கரும்பில் தழைச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • அனைத்து இலைகளும் மஞ்சள் நிறமாகக் காணப்படும். இளம் இலைகள் பச்சை நிறமாகவே இருக்கும்
  • வளர்ச்சியில் பொதுவாக வேகம் குறைந்தே காணப்படும்
  • தண்டின் கலவைப்பிரிவு சிறியதாக இருக்கும்
  • முதிர்ந்த இலைகள் இறந்துவிடும். முதிரா நிலையில் உள்ள வேர்கள் மிக நீளமாக வளரும்
  • இலைகள் முதிராத நிலையில் நுனிகளும், விளிம்புகளும் காய்ந்துவிடும்
  • முதிர்ந்த இலைகள் சிவப்பு ஊதா நிறத்திலும், இலைகள் குறுக்கேயும், தண்டுகள் மெல்லியதாகவும் இருக்கும்

நிவர்த்தி

  • தழைச்சத்து உரத்தை மண்ணில் கலந்து இடவும்
  • யூரியா 1 – 2 % இரண்டு முறை ஒரு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்