|
சூரியகாந்தியில் கார்மச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள் :
- செடியின் இளம் மற்றும் நடு இலைகளில் சிறிய மஞ்சள் நிறத்திட்டுகள் உருவாகும்
- மஞ்சள் நிறத் திட்டுக்கள் அதிகமாகி பின் இளம் இலைகளில் காய்ந்த பகுதிகள் செம்மஞ்சள் நிறத்தில் காணப்படும்
- செடிகளின் உள்ள தண்டின் மேல் பகுதிகள் காய்ந்தும், வளர்ச்சியை நிறுத்திவிடும்
- இளம் இலைகள் சுருண்டும், வடிவம் சிதைந்தும் காணப்படும்
- இது அருகில் உள்ள கிளைகளில் உள்ள சிறு இலைகளை தாங்கி நிற்கும். ஒரே சீராக இளம் இலைகள் காய்ந்து விடும்
நிவர்த்தி :
- மலர்ப்பிரிவு ஏற்படும் காலத்தில் போராக்ஸ் (0.2%) தெளிப்பானை தெளித்ததால் விதை எண்ணிக்கை, மகசூல் மற்றும் எண்ணெய் உட்பொருள் அதிகமாக இருக்கும்
|