|
சூரியகாந்தியில் சாம்பல்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள் :
- முதிர்ந்த இலைகளில் பற்றாக்குறையின் அறிகுறிகள் தென்படும். அதேசமயம் இளம் இலைகள் பச்சை நிறத்திலும், திடமாகவும் இருக்கும்
- பசுமை சோகை முதிர்ந்த இலைகளில் தோன்றும் (முன் பருவம்)
- இலையின் விளிம்புகளில் மஞ்சள் கலந்த மங்களான பச்சை நிறங்களில் தோன்றும். முதிர்ந்த இலைகள் காய்ந்தும், சுருங்கியும், நரம்பிடைகளில் காய்ந்தும் காணப்படும்
- தண்டுகள் தடித்தும், தண்டுகளின் வளர்ச்சி குன்றியும் காணப்படும்
- இலை நுனிகள் அல்லது இலை விளிம்புகள் மேல் நோக்கி சுருங்கியும், கீழே வளைந்து இருக்கும்
- முதிர்ச்சியடைந்த சிறிய தலைப்பகுதிகளில் முன்பைவிடக் குறைவான விதைகள், மங்களான பழுப்பு நிறங்களில் காய்ந்து சிதைவுற்று காணப்படும்
நிவர்த்தி :
- சாம்புர பாசிதை 20 கிலோ/ ஹெக் மண்ணில் கலந்து இடவும்
- பொட்டாசியம் க்ளோரைட் 1% ஐ தழை தெளிப்பாக தெளிக்கவும்
|