Copper

சூரியகாந்தியில் தாமிரச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • நரம்பிடை சோகை முதிர்ந்த இலைகளின் மேலிருந்து பாதியில் ஆரம்பித்து இலையின் நுனி வரை காணப்படும்.
  • இலைப்பரப்பின் மேற்பாதியில் பசுமை சோகை தடைசெய்யப்பட்டு காணப்படும்
  • பசுமை சோகை ஏற்பட்ட பகுதிகள் வளர்ந்து ஆழ்ந்த பழுப்பு நிறத்தில் இலைகள் காய்ந்து கருகி விடும்
  • பின் பசுமை சோகை விளிம்புகளுக்கு பரவி இலையின் அடி வரை பரவி விடும்
  • இலைப்பரப்பு உலர்ந்தும், சருகு போன்றும் காணப்படும்.
  • இலையின் விளிம்புகள் கருகி, பழுப்பு நிற காய்ந்த புள்ளிகள் இலை நடு நரம்புகளில் காணப்படும்

நிவர்த்தி

இரண்டு அல்லது மூன்று முறை 0.2% காப்பர் சல்பேட் கரைசலை ஒரு வார கால இடைவெளியில் தெளிக்கவும்