Nitrogen

மஞ்சளில் தழைச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • அறிகுறிகள் முதலில் முதிர்ந்த இலைகளில் தோன்றும். முதிர்ந்த இலைகள் மங்களான அல்லது மஞ்சள் நிறமாகக் காணப்படும்
  • இலை விளிம்புகளில் சிவப்பு நிறம் தோன்றி பின் படிப்படியாக பரவி இலை நரம்புகள் வரை பரவிவிடும்
  • இலைகள் சிறியதாக இருக்கும்
  • முழு வளர்ச்சியும் முற்றிலுமாக குறைந்துவிடும்
  • பற்றாக்குறையினால் கிழங்கு சாகுபடியைக் குறைக்கின்றது

நிவர்த்தி

யூரியா, 140 கிலோ / ஹெக் ஐந்து பிரிவுகளாக பிரித்து, பயிரிட்ட 30, 60, 90, 120 வது நாட்களில், மணிச்சத்து 60 கிலோ கலந்து அளிக்க வேண்டும். (அ) டி.ஏ.பி. 2% (அ) 1% யூரியாவை தழை வழி தெளிப்பாக ஒரு வாரம் இடைவெளி விட்டு இரண்டு முறை தெளிக்க வேண்டும்.