| |||||||||||||||||||||||||||||||||||||||
வேளாண்மை ::
உளுந்து |
|||||||||||||||||||||||||||||||||||||||
விதையின் அளவு
பயிர் மேலாண்மை நிலம் தயாரித்தல்
விதையும் விதைப்பும் விதை நேர்த்தி ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனஸ் 10 கிராம் கொண்டு விதைநேர்த்தி செய்யவும் அல்லது கார்பென்டாசிம் (அ) திரம் 2 கிராம் ஒரு கிலோ விதையுடன் கலந்து 24 மணிநேரம் கழித்து விதைக்கவும். பயனுள்ள ரைசோபியம் பாக்டீரியாக்களை பூசண மருந்து கலந்துவிதையுடன் கலக்கக் கூடாது. ட்ரைக்கோடெர்மா அல்லது கூடமோனாஸ் கலந்த விதையுடன் பயனுள்ள பாக்டீரியாக்களை கலந்து விதைக்கலாம்.
பாக்டீரியா ராசியுடன் விதைநேர்த்தி தமிழ் நாடு வேளாண்மை பல்கழைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட ரைசோபியம் சி ஆர்.யு -7, 3 பாக்கேட் (600 கிராம், எக்) மற்றும் தாவர வளர்ச்சி ஊக்கிவிக்கும் பாக்டீரியாக்கள் 3 பாக்கெட் (600 கிராம், எக்) மற்றும் பாஸ்போபாக்டீரியா 3 பாக்கெட் (600 கிராம், எக்) உடன் கஞ்சி கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும் விதைநேர்த்தி செய்யாவிட்டால், 10 பாக்கெட் ரைசசோபியம் (2000 கிராம், எக்) ரூ.10 பாக்கெட் தாவர வளர்ச்சி ஊக்குவிக்கும் பாக்டீரியாக்கள் (2000 கிராம், எக்) மற்றும் 10 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா (2000 கிராம், எக்) உடன் 25 கி.கி தொழு உரம் மற்றும் 25 கி.கி.மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன்னால் இடவேண்டும். விதைப்பு விதைகளை 30 ஒ 10 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். நெல் தரிசில் பயிரிடுவதாக இருந்தால், அறுவடைக்கு 5 முதல் 10 நாட்கள் இருக்கும் போது விதைகளை மண்ணில் தூவவேண்டும். தூவும் போது மண்ணில் ஈரப்பதம் சரியாக இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம் வரப்பு ஒரங்களில் பயிரிடுவதாக இருந்தால் 30 செ.மீ. இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும். ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை உரமிடுதல் விதைப்பதற்கு முன் அடியுரமாக மானாவாரிப் பயிராக இருந்தால் எக்டருக்கு 12.5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து 12.5 கிலோ சாம்பல் சத்து மற்றும் 10 கிலோ கந்தகச்சத்து இடவேண்டும். இறவைப் பயிராக இருந்தால் எக்டருக்கு 25 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து 50 சாம்பல் சத்து மற்றும் 20 கிலோ கந்தகச்சத்து இடவேண்டும். நெல் தரிசில் பயிரிடுவதாக இருந்தால் எக்டருக்கு 2 சதவீதம் டை அம்மோனியம் பாஸ்பேட்டை பூக்கும் தருணத்தில் மற்றும் 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும். மானாவாரி மற்றும் இறவை பயிர்களுக்கு டை அம்மோனியம் பாஸ்பேட் 2 சதவீதம் அல்லது யூரியா 2 சதவீதம் பூக்கும் தருணத்திலும் பின்பு 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும்.
குறிப்பு: மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் உரம் மூலம் இடவில்லை எனில் ஜிப்சம் மூலமாக கந்தகத்தை இடவும். நீர் நிர்வாகம் விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பிறகு உயிர்த்தண்ணீர், மூன்றாவது நாளிலும் பாய்ச்ச வேண்டும். காலநிலை மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ப 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கட்ட வேண்டும். பயிரின் எல்லா நிலைளிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். துளிர்க்கும் பருவத்தில் வறட்சி இருந்தால் 0.5 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலை இலைகளில் தெளிக்க வேண்டும்.
இலைவழி நுண்ணூட்டம் டிஏபி அல்லது யூரியா, என்ஏஏ மற்றம் சலிசலிக் அமிலக் கரைசல் தெளித்தல் இலை வழி நுண்ணூட்டமாக ஒரு லிட்டர் தண்ணீரில் என்ஏஏ 40 மில்லி கிராம் மற்றும் சலிசலிக் அமிலம் 100 மில்லி கிராம் கலந்து பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாட்கள் கழித்தும் தெளிக்கவேண்டும் களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி எக்டருக்கு பெண்டிமெத்திலின் 20 லிட்டர் கைத்தெளிப்பான் மூலம் 500 லிட்டர் தண்ணீருடன் விதைத்த மூன்றாவது நாள் தெளிக்கவேண்டும். இதன் மூலம் விதைத்திலிருந்து 30 நாட்களுக்குள் களைகளைக்கட்டுப்படுத்தலாம். விதைத்த 30 நாட்களுக்குப் பின்னர் கைகளை ஒரு முறை கைகளை மூலம் அப்புறப்படுத்த வேண்டும். |
தாவர ஊட்டச்சத்து | ||||||||||||||||||||||||||||||||||||||
வறட்சி வெள்ளம் களர்/உவர் தன்மை வெப்பநிலை | |||||||||||||||||||||||||||||||||||||||
விவசாயிகளின் கூட்டமைப்பு வெளியீடுகள் கேள்வி பதில் கலைச்சொற்கள் முக்கிய வலைதளங்கள் புகைப்படங்கள் |
|||||||||||||||||||||||||||||||||||||||
© All Rights Reserved. TNAU-2008. | |||||||||||||||||||||||||||||||||||||||