| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வேளாண்மை :: துவரை |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பயிர் மேலாண்மை விதையும் விதைப்பும்
விதை நேர்த்தி: விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஒருகிலோ விதைக்கு கார்பென்டாசிம் திரம் 2 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். அல்லது ஒரு கிலோ விதைக்கு ட்ரைக்கோ டெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனஸ் புளுரசன்ஸ் 10 கிிராம் கொண்டு விதை நேர்த்தி செய்யவும். பாக்டீரியா ராசியடன் விதை நேர்த்தி: பூச்சிக் கொல்லியுடன் நேர்த்தி செய்யப்பட்ட விதைகள் அதன் பிறகு ரைசோபியம்பாக்டீரியா ஊசுசு 6 உடன் நேர்த்தி செய்ய வெண்டும். இந்த இரண்டு நேர்த்திக்கும் இடையே 24 மணி நேரம் இடைவேளை ணே்டும். செம்மண்ணிற்கு ரைசோபியம் விபிஆர் 1 உகந்ததாகும். தமிழ் நாடு வேளாண்மை பல்கழைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட ரைசோபியம் சி.ஆர்,ஆர்-6 3 பாக்கெட் (600 கிராம், எக்) மற்றும் பாஸ்போபாக்டீரியா 3 பாக்கெட் (600 கிராம், எக்) உடன் கஞ்சி கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும. விதைநேர்த்தி செய்யாவிட்டால், 10 பாக்கெட் ரைசோபியம் (2000 கிராம், எக்) மற்றும் 10 பாக்கெட் (2000 கிராம், எக்) பாஸ்போபாக்டீரியா உடன் 25 கி.கி. தொழு உரம் மற்றும் 25 கி.கி. மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன்னால் இடவேண்டும். விதைத்தல் கீழ்க்கண்ட இடைவெளியில் விதைகளை நிலத்தில் ஊன்ற வேண்டும்
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
குறிப்பு: மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் உரம் மூலம் இடவில்லை எனில் ஜிப்சம் மூலமாக கந்தகச் சத்தை இடவும் நீர் நிர்வாகம்: விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பிறகு உயிர்த்தண்ணீர் மூன்றாவது நாளிலும், பூ பிடிக்கும் பருவத்திலும் 50 சதவிகித பூ பூக்கும் பருவத்திலும் காய் வளர்ச்சிப் பருவத்திலும் நீர் பாய்ச்ச வேண்டும். நீர் தேங்கி நிற்பதை தவிர்த்திட வேண்டும். இலைவழி நுண்ணூட்டம்: டிஏபி அல்லது யூரியா, என்ஏஏ மற்றும் சலிசலிக் அமிலக் கரைசல் தெளித்தல் இலை வழி நுண்ணூட்டமாக ஒரு லிட்டர் தண்ணீரில் என்ஏஏ 40 மில்லி கிராம் மற்றும் சலிசலிக் அமிலம் 100 மில்லி கிராம் கலந்து பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாட்கள் கழித்தும் தெளிக்கவேண்டும் களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி ஒரு எக்டருக்கு பெண்டிமித்திலின் 2 லிட்டர் உடன் 500 லிட்டர் தண்ணீர் கலந்து விதைத்த பின் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கவேண்டும். பிறகு வயலில் நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்து 30-35 நாட்களுக்குப் பின்னர் ககைளை ஒரு முறை எடுத்து நீர்ப்பாய்ச்சவேண்டும். அறுவடை காய்கள் 80 சதம் முதிர்ச்சி அடைந்தவுடன் செடிகளை அறுத்துகட்டி வைத்து பின்பு வெய்யிலில் காய வைத்து,கையினால் எட்டி, மணிகளைப் பிரிக்க வேண்டும். |
தாவர ஊட்டச்சத்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வறட்சி வெள்ளம் களர்/உவர் தன்மை வெப்பநிலை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
விவசாயிகளின் கூட்டமைப்பு வெளியீடுகள் கேள்வி பதில் கலைச்சொற்கள் முக்கிய வலைதளங்கள் புகைப்படங்கள் |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
© All Rights Reserved. TNAU-2008. | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||