| | |  |  |  |

வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை:: வேளாண் பதப்படுத்துதல்

சர்வதேச நிறுவனங்கள்
தேசிய நிறுவனங்கள்

இந்திய அரசு
தமிழ்நாடு

வேளாண் பதப்படுத்துதல் (Agro Processing)

வேளாண் பதப்படுத்துதல் என்பது வேளாண்மை பொருட்களின் பாதுகாப்பு மற்றும் கையாளுதல் மற்றும் மேலாண்மை பொருட்களை, உணவு, நார், எரிபொருள் அல்லது தொழிற்சாலைகளின் மூலம் பொருட்கள் போன்றவையாக மாற்றுவது ஆகும். வேளாண் பதப்படுத்துதல் தொழிலானது, அறுவடை நிலையில் இருந்து பொருள்களின் தொகுப்பு,அளவு, தரம் மற்றும் விலையை உள்ளடக்கிய கடைசி நிலையை அடைந்து வாங்குவோர்கள் பயன்படும் வகையில் அனைத்து செய்பணிச் செயலையும் கையாளுவது ஆகும். பண்டைய காலத்தின் வேதபுத்தகங்களின் கூறப்பட்டுள்ள அறுவுடைக்கு பிந்திய மற்றும் பதப்படுத்துதலின் தெளிவாக செய்முறைகளைக் கொண்டு உணவைப் பதப்படுத்துவது மற்றும் வேளாண்மை பொருட்களை உணவு மற்றும் மருத்துவ குணமுள்ள பொருட்களாக மாற்றுகிறது.

கடந்த காலத்தில் வேளாண் பதப்படுத்துதலில் போதிய கவனிப்பு இல்லாததால், உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் பயன்பெறாமலும், இந்தியாவின் பொருளாதாரம் பாதிப்பு அடைந்தும் இருந்தது. ஆனால் இப்பொழுது அதிக தரமுடைய வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் வருமான மேம்பாட்டினை உடைய சமூக பொருளாதாரத்தின் தாக்கம் போன்றவற்றின் மூலம இந்தியப் பொருளாதாரம் ஆனது சூரியோதயமாக உள்ளது. வளர்ந்த நாடுகளில் 14 சதவிகித பணியாட்கள் வேளாண் பதப்படுத்தும் பிரிவில் நேரிடையாகவும் (அ) மறைமுகமாகவும் உள்ளனர். ஆனால் இந்தியாவில் 3 சதவிகித பணியாட்கள் மட்டுமே வேளாண் பதப்படுத்துதலின் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் இந்தியாவானது வளரும் நாடாகவே உள்ளது மற்றும் இந்தியாவானது வேலை வாய்ப்பினை விரயம் செய்கிறது. இந்தியாவின் வேளாண் பதப்படுத்துவதனை சரியான முறையில் மேம்படுத்துவதன் மூலம், உலக அளவில் உணவுப் பொருட்களின் வியாபாரம் மற்றும் விநியோகமும், மற்ற தாவரம் மற்றும் விலங்குப் பொருட்களின் அதிக வளர்ச்சியும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

வரலாற்று தோற்றம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் இந்தியாவில், வேளாண் பதப்படுத்துதலான அரிசி, நீர் மூலம் செயல்படும் மாவு ஆலை, மாடு மூலம் செயல்படும் எண்ணெய் ஆலை, மாடு மூலம் செயல்படும் கரும்பு ஆலை, காகித தாள் உருவாக்க பிரிவு, சர்க்கரம் மற்றும் கையினால் செயல்படும் நெசவு பிரிவு போன்ற பல்வேறு தொழில்களானது கைத்தொழில் பிரிவாகவே இருந்தது.

ஆங்கிலேயர் இந்திய காலத்தில் 1863 ஆம் ஆண்டு சென்னை ஆளுநராக இருந்த சர் வில்லியம் டெனின், சென்னையில் வேளாண்மை மற்றும் வேளாண் பதப்படுத்துதலில் புதிய தாக்கத்தினைக் கொண்டு வந்தார். (அரசு ஆணைக்குழு, 1928) இதன் மூலம் இங்கிலாந்தில் இருந்து மேம்பாடுடைய இயந்திர சாதனங்களை வாங்கி செய்முறை விளக்கம் அளித்து, பயன்படுத்த வழிவகுத்தார். இதனுடன் கதரடித்தல் இயந்திர சாதனம், தூற்றுவான், வெட்டுவான் கருவி, கலப்பைகள், பலுகு சாதனம், கட்டி உடைக்கும் கருவி, கொத்துக்கலப்பை, துளையிடும் இயந்திரம்  மற்றும் கொத்து / மண்வெட்டி போன்றவையும் அடங்கும். இந்த விளக்க முறையானது 1871 வரை சென்னையின் சைதாப்பேட்டையில் குறைந்த வருமானத்துடன்  தொடர்ந்தது.

1870ல் வங்காளத்தில் பஞ்சத்தால் ஏற்பட்ட பாதிப்பால் முதல் முறையாக வேளாண் பதப்படுத்துதலின் முக்கியத்துவத்தினை உணர்ந்து, பதிவேடு செய்யப்பட்டது. இதனால் ஆங்கிலேய அரசாங்கமானது ஒரு ஆணைக்குழுவை 1880ல் நியமித்தது. இந்தக் குழுவானது ஒரு ஆய்வு அறிக்கையை உருவாக்கி 1880ல் சமர்ப்பித்தது. இதில கூறப்பட்டுள்ளது யாதெனில் வேளாண்மை முன்னேற்றம் மற்றும் அறுவடைக்குப் பின் உள்கட்டமைப்பு மேம்பாடு குறிப்பாக இரயில் கட்டமைப்பு போன்றவை ஆகும். வேளாண்மை பகுதியில் இரசாயனத்தின் தலையீடு மற்றும் பொறியாளர்களால் தயாரிக்கப்பட்ட வேளாண்மை இயந்திர சாதனங்களால் துல்லியமான விளைநில மேம்பாடு போன்றவையும் இதனுள் அடங்கும். ஆங்கிலேயர் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட அரசு ஆணைக்குழுவானது ஒரு விளக்கமான ஆய்வினை நடத்தியது. இந்த ஆய்வு அறிக்கையானது 1928ல் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வானது அறிவியல் நோக்கு என்றும் அழைக்கப்படும். மேலும் இது ஊரக தொழிற்துறை மற்றும் நிறுவனத்தினை மேம்படுத்துவதாகும்.
பயிர் மற்றும் வர்த்தக ரீதியான வேளாண் பதனிடுதலின் நிலை மற்றும் பிரச்சனைகள்
1950-2000 ஆம் வரையிலான வர்த்தக ரீதியில் வேளாண் பதனிடுதல் தொழிற்துறையின் வளர்ச்சியானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அரிசி பதப்படுத்தும் தொழில்கள்


இந்தியாவில், 1950-51ல் அரிசி உற்பத்தியானது 20.6 மில்லியன் டன்னாக இருந்து 1999-2000 ஆம் ஆண்டில் 94.8 மில்லியன் டன்னாக உயர்ந்தது. மேலும் பதன்படுத்தும் பகுதியில் தொழில்நுட்ப மாற்றங்கள் உருவாக்கப்பட்டது. இதற்கு முன் கை அரைவை, மிதிக்கட்டை இயங்குமுறை மற்றும் ஈங்கிள் பெர்க் உதி எடுக்கும் கருவி போன்றவையானது நெல் ஆலையில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் 1998-99ல் இரப்பர் சுற்றி உமி நீக்கியானது நெல் ஆலையில் பயன்படுத்தப்பட்டது. இதில் 5,000க்கும் மேற்பட்ட பெரிய நெல் ஆலையானது, நெல் புழுங்க வைக்கும் வசதியையும் உள்ளடக்கியது மற்றும் 100 நெல் ஆலையானது ஏற்றுமதி விற்பனைக்காக நிறம்மாறிய அரிசியை  பரித்தெடுக்க நிறப் பிரிப்பானை பயன்படுத்துகிறது.

 அரிசி பதப்படுத்துதலின் நெல புழுங்க வைத்தல் மேம்பாட்டிற்காக, IIT, காராக்பூர் CFTRI, மைசூர், PPRC தஞ்சாவூர் மற்றும் மற்ற ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையங்களானது உலர்த்தலில் இருந்து தொடங்கி, தொழில்நுட்பமானது வளர்ச்சி அடைந்து நெல் புழுங்க வைக்கும் கருவிகளை உள்ளடக்கிய பல்வேறு உலர்த்தும் கருவிகளைக் கொண்டுள்ளது. தட்ட வடிவ உலர்த்தியைத் தொடர்ந்து LSO வகை உலர்த்தியான் பயன்பாட்டில் உள்ளது.

பெரிய நெல் ஆலைகளில், நெல்லினை உலர்த்துவதற்கு வெப்பநிலைத் திரவமானது ஒரு ஊடகமாக அமைந்து காற்றினை வெப்பப்படுத்தி உலர்த்துகிறது. அரிசி  உமி நீக்கும் கருவியின் மூலம், உடையும் அரிசியின் சதவிகிதமானது குறைப்பதற்கு முயற்சிகள் எடுத்து முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால் இப்பொழுது இரப்பர் சுற்றி உமி நீக்கியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு முயற்சிகளின் அடிப்படையில், இரப்பர் சுற்றிக்கு பதிலாக டவ்லான்  ஆனது பொருளாதாரத்  தன்மையில் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு வகையான அரிசி தவிடு நிலைநிறுத்துவான் வடிவமைக்கப்பட்டு, சோதனை மேற்கோள் செய்யப்பட்டது. இராசயன முறையானது CFTRI, மைசூரில் உருவாக்கப்பட்டது. நீராவி வெப்படைத்தலானது IIT காராக்பூரிலும் மின்சார வெப்பமடைத்தலானது பாட்நகரிலும், கண்டுபிடிக்கப்பட்டது. தொழில்துறைகளில் பயன்படுத்தப்பட்டது.

     

 

 
 

அக்மார்க் நெட்
டெமிக்
தினசரி சந்தை நிலவரம்

உழவர் சந்தை
ஒழுங்குமுறை விற்பனை கூடம்
பொருள் சார்ந்த சந்தை

 
சிறு விவசாயிகள் வேளாண் கூட்டமைப்பு
 

இந்தியா
- அசாம்
- மஹாராஷ்டிரா
- மணிப்பூர்
- குஜராத்
- கேரளா
- தமிழ்நாடு

மத்திய பட்டு வாரியம்
தென்னை வளர்ச்சி வாரியம்
காபி வாரியம்
தென்னை நார் வாரியம்
ரப்பர் வாரியம்
வாசனைப் பொருட்கள் வாரியம்
தேநீர் வாரியம்
புகையிலை வாரியம்

 
 
 
 

வேளாண் விற்பனைத் துறை
வேளாண் வணிகம்
வேளாண்பொருள் பதனிடுதல்

 
 

வெளியீடு

     
 

| முதல் பக்கம் | எங்களைப் பற்றி | கேள்வி பதில்கள் | புகைப்படங்கள் | தொடர்பு கொள்ள |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2008