தமிழ்நாடு வேளாண்மைப் பல்க்லைக்கழகத்தில் முனைப்பு முதலீட்டுத் திட்டத்தின் செயல்பாடுகள்
நமது நாட்டில் வேளாண்மை வளர்ச்சி என்பது உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தேவையைப் பொறுத்தே அமைகின்றது. தற்காலத்தில் தோட்டக்கலைப்பயிர்கள், காய்கறிகள், பழங்கள், முட்டை, பால் மற்றும் மதிப்பூட்டப்பட்ட வேளாண் விளைபொருட்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருவதால் இவற்றின் உற்பத்தியையும் வணிக ரீதியில் அதிகரிக்க வேண்டி உள்ளது. வேளாண்மையை வணிக ரீதியாக மேற்கொள்வதில் முக்கிய இடர்பாடு போதுமான நிதி வசதி இல்லாமல் இருப்பதே ஆகும். எனவே நம் நாட்டில் வேளாண்மையை வணிக ரீதியில் மேற்கொள்ள முனைப்பு முதலீட்டு நிதியுதவித் திட்டத்தை (Venture Capital Scheme) மத்திய வேளாண் அமைச்சகம் ஏற்படுத்தி செயல்படுத்தி வருகின்றது.
முனைப்பு முதலீடு திட்டம் வேளாண்மையில் இடுபொருள் உற்பத்தியை அதிகரிக்கவும் உற்பத்தி செய்த விளைபொருள்களை வணிகமயமாக்கவும் உதவுகிறது. மத்திய அரசின் வேளாண் அமைச்சகம், சிறு விவசாயிகள் வேளாண் வணிக நிறுவனத்தின் மூலம் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் வணிக வங்கிகள் வாயிலாக வேளாண் வணிகத்தை மேம்படுத்த முனைப்பு முதலீட்டு நிதி உதவியை அளித்து வருகின்றது. இதன் முக்கிய நோக்கம் வேளாண் வணிக திட்டங்களில் தனியார் முதலீட்டினை அதிகப்படுத்துவதேயாகும். இத்திட்டத்தின் மூலம் வேளாண் பொருட்கள் மதிப்பூட்டுதல், தோட்டக்கலைப் பயிர்கள், மருத்துவ மற்றும் மூலிகைப் பயிர்கள் சாகுபடி, மீன்வளர்ப்பு, கோழிவளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி போன்ற தொழில்களுக்கு முதலீடு வழங்கப்படுகின்றது. இத்திட்டம் உழவர்களின் பண்ணைத்திட்டங்களை விரிவுபடுத்தி வருவாயை அதிகரிக்க ஊக்கம் அளிப்பதாக உள்ளது.
மேற்கொண்ட முனைப்பு முதலீட்டுத் திட்டத்தின் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் புதிய இரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு செல்வதற்காகவும், பல்கலைக் கழகத்திற்கு வருவாய் ஈட்டுவதற்காகவும் ஒரு புதிய திட்டம் 2003-ம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின் இரு முக்கிய நோக்கங்களாவன:
- விவசாயிகளுக்கு தரமான வேளாண் இடு பொருட்களை வழங்குதல்
- இடு பொருள் விற்பனை வாயிலாக பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டிற்கு தேவையான வருவாயை ஈட்டுதல்
இத்திட்டத்தின் கீழ் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு கல்லூரிகள் /ஆராய்ச்சி மையங்கள் /வேளாண் அறிவியல் நிலையங்களில் தரமான இடுபொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதற்காக சிறிய அளவில் முதலீட்டுத் தொகையை பல்கலைக்கழகம் அந்தந்த மையங்களுக்கு வழங்குகின்றது. பருத்தி, நெல், பயறு வகைகள் ஆகியவற்றில் புதிய பயிர் இரகங்களின் வல்லுநர் மற்றும் உண்மை நிலை விதைகள், கரும்பு, விதைக்கரணை, தோட்டக்கலைப்பயிர்களான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் புதிய இரகங்களின் விதைகள், மா, சப்போட்டா, மாதுளை, நெல்லி போன்ற பழங்களின் வீரிய ஒட்டு நாற்றுகள், அலங்காரச் செடிகள், உயிர் உரங்கள், மண்புழு உரம், உயிரியல் கட்டுபாட்டு காரணிகள் (டிரைக்கோடெர்மா, சூடோனோனாஸ்) தென்னை டானிக், தென்னை நாற்றுகள், காளான் மற்றும் விதைக்காளான் உற்பத்தி மற்றும் உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல் பல்வேறு வகையான மசாலா பொடிகள், பழரசங்கள், ஊறுகாய் போன்றவை தயாரித்தல் போன்ற இடுபொருட்கள் தரமான வகையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருவதோடு அவற்றில் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மண் பரிசோதனை, வேளாண் பொருட்கள் மற்றும் விளைநிலங்களில் பூச்சிகொல்லி/ நச்சுப் பொருள் அளவு ஆகியவற்றை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேற்கண்ட திட்டங்களின் மூலம் தரமான இடுபொருட்கள் விவசாயிகளுக்கு சென்றடைவதோடு அல்லாமல் வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் ஆலோசனைகளும் அளிக்கப்படுவதால் இத்திட்டம் உழவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ் பல்கலைக்கழகத்திற்கு குறிப்பிடத்தக்க வருவாய் கிடைப்பதால் மென்மேலும் தரமான இடுபொருட்கள் உற்பத்தி செய்து வழங்குவதற்கும், புதிய தொழில்நுட்பங்களைப் பற்றி ஆய்வு செய்வதற்கு தகுந்து உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் ஏதுவாக உள்ளது.
இத்தகைய முனைப்பு முதலீட்டுத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உற்பத்தி செய்யப்படும் இடுபொருட்களும் அதற்கான முகவரிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தேவையான இடுபொருட்களை விவசாயிகள் பல்கலைக்கழக நிலையங்களில் இருந்து நேரடியாக பெற்று பயனடையலாம்.
வ.எண் |
விதைகள் / நாற்றுகள் /மற்ற இடுபொருட்கள் /ஆலோசனை |
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி |
1. |
உயிர் உரங்கள் |
வேளாண் நுண்ணுயிரியல் துறை, த.வே.ப. கழகம், கோயமுத்தூர், தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை, வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம், அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி. |
2. |
மண்புழு உரம் |
மத்திய பண்ணை, த.வே.ப. கழகம், கோயமுத்தூர்
தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், ஏற்காடு, ஊட்டி மற்றும் பேச்சிப்பாறை.
மண்டல ஆராய்ச்சி நிலையம், பையூர்
வேளாண் ஆராய்ச்சி நிலையம், பவானி சாகர்
மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், ஏத்தாப்பூர்
வேளாண் ஆராய்ச்சி நிலையம், வைகைடேம்
தென்னை ஆராய்ச்சி நிலையம், ஆழியார் நகர்
மண்டல ஆராய்ச்சி நிலையம், அறுப்புக்கோட்டை
வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை
வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம்
வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிகுளம் |
1. |
நெல் :-
- நெல் ஏடிடிஆர்எச் 1, கோஆர்எச் 2
|
நெல் ஆராய்ச்சித்துறை, த.வே.ப. கழகம், கோயமுத்தூர் |
|
- நெல் இரகங்களின் உண்மை நிலை விதைகள்
|
வேளாண் ஆராய்ச்சி நிலையம், பையூர் |
|
- நெல் ஏடிடி 33, ஏடிடி 39, ஐ.ஆர்.20 உண்மை நிலை விதைகள் மற்றும் ஏடிடிஆர்எச்1, கோஆர்எச் 2
|
வேளாண் ஆராய்ச்சி நிலையம், பவானிசாகர் |
|
- ஏடிடி 43 மற்றும் ஏஎஸ்டி 16
|
பருத்தி ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீவில்லிப்புத்தூர் |
|
- நெல் இரகங்களின் உண்மை நிலை விதைகள்
|
மண் மற்றும் நீர் மேலாண்மை ஆய்வு மையம், தஞ்சாவூர் காய்கறி ஆராய்ச்சி நிலையம், பாலூர்
கரும்பு ஆராய்ச்சி நிலையம், மேலாலத்தூர்
வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிகுளம், மதுரை
மண்டல ஆராய்ச்சி நலையம், பட்டுக்கோட்டை
வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குமுளூர் வேளாண் அறிவியல் நிலையம், நீடாமங்கலம் |
2. |
சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகள் |
சிறுதானியங்கள் துறை, த.வே.ப.கழகம், கோயமுத்தூர்
மண்டல ஆராய்ச்சி நிலையம்,திரூர்
மண்டல ஆராய்ச்சி நிலையம், அறுப்புக்கோட்டை
தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை
மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையம், தஞ்சாவூர்
காய்கறி ஆராய்ச்சி நிலையம், பாலூர்
தேசிய பயறு வகை ஆராய்ச்சி நிலையம் வம்பன்
வேளாண் அறிவியில் நிலையம், நீடாமங்கலம் |
3. |
கரும்பில் விதைக்கரணை |
வேளாண் ஆராய்ச்சி நிலையம், பவானிசாகர்
கரும்பு ஆராய்ச்சி நிலையம், சிறுகமணி
கரும்பு ஆராய்ச்சி நிலையம், கடலூர்
கரும்பு ஆராய்ச்சி நிலையம், மேலாலத்தூர்
வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிகுளம் |
4. |
தென்னை நாற்றுகள் |
தென்னை நாற்றங்கால், த.வே.ப.கழகம், கோயமுத்தூர்.
வேளாண் ஆராய்ச்சி நிலையம், பவானிசாகர்
தென்னை ஆராய்ச்சி நிலையம், ஆழியார் நகர்
தென்னை ஆராய்ச்சி நிலையம், வேப்பங்குளம் |
5 |
காய்கறி விதைகள் |
தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோயமுத்தூர் மற்றும் பெரியகுளம்
தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், ஏற்காடு
வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பவானிசாகர்
வேளாண் ஆராய்ச்சி நிலையம், வைகைடேம்
மண்டல ஆராய்ச்சி நிலையம், திரூர்
மண்டல ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டி
வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை
வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிகுளம் |
6. |
பழ மரங்களின் ஒட்டுச்செடிகள், நாற்றுகள் மற்றும் அலங்காரச் செடிகள் |
தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோயமுத்தூர் மற்றும் பெரியகுளம்
தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், பவானிசாகர்
மண்டல ஆராய்ச்சி நிலையம், திரூர்
தென்னை ஆராய்ச்சி நிலையம், ஆழியார் நகர்
மண்டல ஆராய்ச்சி நிலையம், அறுப்புக்கோட்டை
காய்கறி ஆராய்ச்சி நிலையம், பாலூர்
தேசிய பயறு வகை ஆராய்ச்சி நிலையம், வம்பன்
மண்டல ஆராய்ச்சி நிலையம், பட்டுக்கோட்டை
வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை
வேளாண் அறிவியல் நிலையம், சந்தியூர் |
7 |
உயிரியல் பூச்சிக்கொல்லிகள் (டிரைக்கோடெர்மா, சூடோமோனாஸ்) |
பயிர் நோயியல் துறை, த.வே.ப.கழகம், கோயமுத்தூர்.
தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம்
தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், ஏற்காடு மற்றும் ஊட்டி
மண்டல ஆராய்ச்சி நிலையம், பையூர் மற்றும் அறுப்புக் கோட்டை
வேளாண் ஆராய்ச்சி நிலையம், பவானிசாகர்
தென்னை ஆராய்ச்சி நிலையம், வேப்பங்குளம், ஆழியார் நகர்
பருத்தி ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீவில்லிப்புத்தூர்
தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை
எண்ணெய் வித்துகள் ஆராய்ச்சி நிலையம், திண்டிவனம்
கரும்பு ஆராய்ச்சி நிலையம், கடலூர்
வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம் |
8 |
தென்னை டானிக் |
பயிர் வினையியல் துறை, த.வே.ப.கழகம், கோயமுத்தூர்.
வேளாண் அறிவியல் நிலையம், சந்தியூர்
வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை
தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம்
வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிகுளம் |
9. |
காளான் உற்பத்தி மற்றும் பயிற்சி |
பயிர் நோயியல் துறை, த.வே.ப.கழகம், கோயமுத்தூர்.
தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், ஊட்டி
வேளாண் ஆராய்ச்சி நிலையம், பவானிசாகர்
மண்டல ஆராய்ச்சி நிலையம், அறுப்புக்கோட்டை
தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை
கரும்ப ஆராய்ச்சி நிலையம், சிறுகமணி
வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மதுரை
அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி. |
10. |
உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல் பல்வேறு மசாலாப்பொடிகள், பழரசங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் மதிப்பூட்டுதல் போன்றவற்றில் பயிற்சி |
நகர்ப்புற தோட்டக்கலை மேம்பாட்டு மையம், சென்னை
மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை
அறுவடைக்குப் பின்னர் பயிற்சி மையம், த.வே.ப.கழகம், கோயமுத்தூர் |
மேற்கண்ட இடுபொருள் மற்றும் பயிற்சிகளுக்கான தேவைகளை விவசாயிகள் அந்தந்த நிலையங்களுக்கு தொடர்பு கொண்டு பெறலாம். மேலும் விபரங்களுக்கு தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
இயக்குநர்
வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககம்
த.வே.ப.கழகம்
கோயமுத்தூர் – 641 003
|