அமைப்பு |
: |
இக்கருவியில், சானைப்பிழக்க உபயோகப்படும் தட்டுக்களாலான உருளை ஒன்று, அரைவட்ட வடிவ சல்லடையின் மீது பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு இடைப்பகுதியில், உள்வாய் மூலம் ஊரவைத்த சோளம் அடைகிறது. ஒரு குதிரைத் திறன மோட்டாரால் இயங்கும் உருளை, தானியத்தின் மீது சுற்றுவதால், சிராய்ப்பு மூலம், சோளத்தின் மேலுள்ள தவிட்டை நீக்குகிறது. நீக்கப்பட்ட தவிடு, சல்லடையிலுள்ள துவாரங்கள் மூலம் வெளியேற்றப்படுகிறது. தீட்டப்பட்ட சோளம், ஒரு தனி வெளிவாய் வழியே சேகரிக்கப்படுகிறது. |