அமைப்பு |
: |
வேகவைக்கும் கலன் 20 கேஜ் கலாண் தகரத்தால் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் ஒரு மூடியும் அமைக்கப்பட்டுள்ளது. இநதக்கலன் மூன்று சமபகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலே உள்ள 2/3 பகுதி நெல் வேக வைப்பதற்கும் கீழே உள்ள 1/3 பகுதி தண்ணீரை நீராவியாக மாற்றி, மேலே உள்ள நெல்லை வேகவைக்கவும் உபயோகப்படுத்தப்படுகிறது. துளையிட்ட தகரம் நீராவி பகுதியையும், வேகவைக்கும் பகுதியையும் பிரிக்கிறது. இத்துடன் துளையிட்ட குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் பல கிளை குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளது. இவை வேகவைக்கும் கலனை பல பகுதிகளாக பிரித்து, அமைனத்து நெல்லையம் சமமாக வேகவைக்க உதவுகிறது. இந்தத் துளைகளிட்ட தகரம் வரிவாக இருப்பதனால் வெந்த நெல்லை எடுப்பதற்கு சுலபமாக இருக்கிறது. கலனில் உள்ள தண்ணீரை விறு அல்லது வேளாண் கழிவுப்பொருட்களை எரித்து கொதிக்க வைக்கலாம். நெல் வெந்த பிறகு அடுத்த முறைக்கு மீதமுள்ள தண்ணீரை மீண்டும் உபயோகப்படுத்தலாம். |