அமைப்பு |
: |
வாழைக்காய் அறுவடை செய்த 3லிருந்து 5 நாட்களுக்குள் பழுத்துவிடுகிறது. விற்பனைக்காக நீண்ட தொலைவிற்கு அனுப்பும் போதும், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போதும், வாழைக்காய்கள் பழுத்து சில நாட்களுக்குத் தள்ளிவைக்கும் வகையில் பாலித்தீன் பைகளில் வெற்றிடத்தில் அடைப்பது ஒரு முறை ஆகும். இதன் மூலம், முற்றிய வாழைக்காய் காற்று ஆக்சிஜனோடு தொடர்பு கொள்வது தடுக்கப்படுகிறது. எளிய வெற்றிட அடைப்பான் மூலம் 300 காஜ் கனமுள்ள பாலித்தீன் பையில் வாழைக்காய் வெற்றிடத்தில் அடைக்கப்படுகிறது. இவ்வாறு அடைக்கப்பட்ட வாழைக்காய்கள் பழுப்பதை 21 நாட்கள் வரை தள்ளிப்போடப்படுகிறது. திறந்த விறகு ஒரு வாரத்திற்குள் பழுத்தல் நிறைவடைகிறது. |