தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மதிய உணவு
அடுப்பு (சமுதாய அடுப்பு)
பயன் |
: |
குறைந்த விறகில் புகையின்றி நிறைய நபர்களுக்க சமைக்கலாம். |
திறன் |
: |
2000-3000 கி.கலோரி / மணி (எரிதிறன் - 23 %)
|
விலை |
: |
ரூபாய் 200 /- |
அமைப்பு |
: |
- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மதிய உணவு அடுப்பு, எளிதாக் கிடைக்கும் களிமண், மணல், நெல் உமி முதலான இடுபொருள்கள் கொண்டு செய்யப்படுகிறது. விறகு வைப்பதற்கு ஏதுவாக 25x30 செ.மீ அளவிற்கு எரிபொருள் துவாரம் அடுப்பின் முன்புறம் உள்ளது.
- அதிகப்படியான காற்று செல்வதற்று வசதியாக எரிபொருள் துவாரத்தின் இருபுறமும் 6x9 செ.மீ அளவில் சிறு துவாரங்கள் உள்ளன. இவ்வாறு கிடைக்கும் அதிகப்படியான காற்றால் விறகு நன்றாக எரிகிறது.
- முதல் அடுப்பிலிருந்து நீண்ட துவார அமைப்பு மேல் நோக்கி வைக்கப்பட்டிருந்தால் தீ ஜீவாலைகளும் வெப்பக்காற்றும் இரண்டாவது அடுப்பு பாத்திரத்தை அடைகிறது. புகையானது இரண்டாவது அடுப்பு பாத்திரத்தை அடைகிறது.
- புகையானது இரண்டாவது அடுப்பிரிருந்து புகை போக்கிக் குழாய் வழியாக வெளியே சென்று விடுகிறது.
- தீ ஜீவாலைகளும் வெப்பக் காற்றும் இரண்டாவது அடுப்பு பாத்திரத்தை நன்றாக சென்றடையும் வண்ணம் முதலாம் அடுப்பு (40 செ.மீ) இரண்டாம் அடுப்பைக் (48 செ.மீ) காட்டிலும் 8 செ.மீ குட்டையாக வைக்கப்பட்டுள்ளது.
|
சிறப்பு |
: |
எரிபொருள் சேமிப்பு - 16% முதல் 30 % நேரம் மீதமாகிறது.
|
தொடர்புக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்
உயிர் சக்தி துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர் – 3
தொலைபேசி :0422-6611276.
மின்னஞ்சல்: bioenergy@tnau.ac.in |
|