பண்ணைக் கருவிகள் :: அறுவடை மற்றும் கதிரடிக்கும் இயந்திரங்கள்
என்ஜினால் இயங்கும் நெல் அறுவடை இயந்திரம்
பயன் : காற்றில் சாயாமல் நிற்கும் நெல் இரகங்களை அறுவடை செய்யப ்பயன்படுகிறது. திறன் : நாளொன்றுக்கு 1 எக்டர் நிலத்தில் அறுவடை செய்யலாம் விலை : ரூ.100,000/- அமைப்பு : இக்கருவியின் முன் பகுதியில் நெல் தாள்களைச் சீராக பிரித்துக் கொடுக்க கூம்பு அமைப்புகளும். அடிபாகத்தில் தாள்களை எளிதில் வெட்டும் வண்ணம் பல முனைகளைக் கொண்ட கத்தியும். வெட்டிய தாள்களை தாங்கி நிறுத்துவதற்கு நிலைத்தகடு. அவற்றை ஒருபுறமாக தள்ளி விடுவதற்கு வார்ப்பட்டை மற்றும் நட்சத்திரட வடிவ சக்கரங்களும் அமைந்துள்ளன. எஞ்சின் விசையை சரியான அளவில் குறைத்து சக்கரங்களுக்கும். தாள்களை வெட்டும் பகுதிகளுக்குத் தள்ளி கொடுப்பதற்கு பற்சக்கரப்பெட்டி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இக்கருவி 1.0 மீட்டர் மற்றும் 0.75 மீட்டர் அகலத்தில் அறுவடை செய்யுமாறு அமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள் :
இக்கருவியை தொடர்ச்சியாக இயக்குதற்கு இரு நபர்கள் தேவை. இக்கருவியை பயன்படுத்துவதன் மூலம் 60 விழுக்காடு செலவும் மற்றும் 89 விழுக்காடு நேரமும் மீதமாகிறது.