Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: பயிர் பாதுகாப்பு கருவிகள்

மின்கலத் தெளிப்பான்

பயன்
பயிர்களின் மேல் (நெல், நிலக்கடலை, தானியங்க  மற்றும்  காய்கறிகள்) இரசாயனத்தை தெளிப்பதற்கு பயன்படும்.
திறன்
நாள் ஒன்றுக்கு 1.5 எக்டர்
வகை 
நேப்சேக்
மின் தேவை  
6 வால்ட்டு மறுசெறிவு மின்கலன்
மொத்த அளவு
380 X 250 X 725 மி.மீ
எடை
பூச்சிக்கொல்லியுடன் சேர்த்து 17 கிலோ
அளவு
1.5 ஹெக்/நாள்
அமைப்பு
10 லிட்டர் பூச்சிக்கொல்லி தொட்டி மற்றும் 6 வால்ட்டு மறுசெறிவு மின்கலனை நன்றாக கட்டுமானப்படுத்தி இதை இயக்குபவரின் பின்னால் வைத்து தெளிக்கப்படும். நேரிடையான நுண்ணுயிரி இயக்கியில் பொருத்தப்பட்டுள்ள நூற்பு வட்டில் உள்ள தொட்டியில் இருந்து ரசாயணத்தை எடுக்க உதவும். துண்டிப்புவால்வு பூச்சிக்கொல்லிகளை எந்தத் தடையும் இன்றி தெளிப்பதற்கு உதவும். பூச்சிக்கொல்லியுடன் மினகலத் தெளிப்பானின்
எடை 17 கிலோ கிராம். ஒரு ஹெக்டர்க்கு 50 லிட்டர் என்ற அளவில் பூச்சிக்கொல்லியை தெளிக்கலாம்.
யூனிட்டின் விலை
ரூ. 2000
சிறப்பியல்புகள்
இந்தத் தெளிப்பான் நெல், நிலக்கடலை, தானியங்கள், காய்கறிகள் மற்றும் அனைத்து பயிர்களுக்கும் உகந்தவை. பழுதுபார்ப்பும் பராமரிப்பும் பிரச்சனைகள் குறைவு. நீர் தேவையை குறைத்துவிடும்.
 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016