Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: விதைக்கும் கருவிகள்


பவர்டில்லருடன் இயங்கும் விதைக்கும் கருவி

பயன் : நிலக்கடலை, மக்காச்சோளம் , சோளம் மற்றும் பயறு வகைகளை வரிசையில் விதைக்கலாம்
திறன் : நாளொன்றுக்கு 1.6 எக்டர் நிலத்தில் விதைக்கலாம்
விலை : ரூ.20,000/-

அமைப்பு :

இக்கருவி விதைப்பெட்டி விதைகளை உடையாமல் ஒவ்வொன்றாக எடுத்து சாலில் போடும் குவளை போன்ற அமைப்பு. சிறு சால்களை தேவையான இரும்புச்சட்டம். கிளட்ச் மறறும் உட்காருவதற்கேற்ற இருக்கை அமைப்பு போன்றவைகளைத் தன்னகத்தே கொண்டு உள்ளது. இந்த அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து இரு சக்கரங்களுடன் கூடிய சட்டத்தின மேல் பொருத்தப்பட்டுள்ளன. இக்கருவியைப் பவர்டில்லருடன் இணைத்தபின் மிகக்குறைந்த ஆரத்தில்ல (1.10 மீட்டா) எளிதாகத் திருப்பலாம். ஆதலால் விதைக்கப்படும் நிலத்தின் ஒரங்களில் கருவியைத் திருப்புவதற்கான இடம் குறைவாகவே தேவைப்படும். கையினால் இயங்கும் லீவர் அமைப்பின் மூலம் காத்துக் கலப்பைகளைக் கொண்ட இரும்புச்சட்டத்தை மேலேயும் கீழேயும் எளிதாக இயக்கலாம் கலப்பைகளுக்கு இடைப்பட்ட இடைவெளியையும் விதைக்கும் ஆழத்தையும் தேவையான அளவிற்கு எளிதாக மாற்றிக்கொள்ளலாம். இரும்புச்சட்டத்தை லீவர் கம்பியினால் இயக்கி மேலே நகர்ததும்போது விதைகளை எடுத்துப்போடும் அமைப்பிற்குச் செல்லும் இயக்கும் நிறுத்தப்படுகிறது. பவர்டில்லரை இயக்குபவர். அதற்குரிய இருக்கையின் மேல் அமர்ந்தவாரே எளிதாக இயக்கலாம்.

சிறப்பு அம்சங்கள்:

  • ஒரே நேரத்தில் நான்கு வரிசைகளில் சீராக விதைக்கலாம்
  • வரிசைகளின் இடைவெளியை 25 செ.மீ. முதல் 60 செ.மீ. வரை மாற்றிக் கொள்ளலாம்
  • அனைத்து வகையான பவா்டில்லர்களுடன் இணைக்கலாம்.