நாட்டுப்புற பண்ணைக் கருவிகள்
இந்திய விவசாயிகள் முனைப்பான மற்றும் விசாலமான வேளாண்மையை அறுபதாவது காலத்தில் பசுமைப் புரட்சிக்கு பின்பு தொடர்ந்து செய்து வந்தனர். அனைத்து வகையான பண்ணை தொடர்பான செயல்களுக்கு இயந்திரங்களை பயன்படுத்துமாறு ஊக்குவிக்கப்படுகின்றன. பொதுவாக இந்தியாவில் வேளாண் இயந்திரங்களை கிராம கைவினைஞர் (தச்சன் மற்றும் கருமான்), சிறு பிரிவு, சிறு தொழிற்சாலைகள் மற்றும் நடுத்தரம், பெறு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றது. கிராம கைவினைஞர்கள் பாரம்பரிய கைக்கருவிகள் மற்றும் எருது வைத்து கட்டமைத்தனர். அங்கங்கள் அமைக்கும் துறைகள் செயற்கையாக விவசாயம் செய்ய இயந்திரங்களை உற்பத்தி செய்தனர். அதாவது டிராக்டர், விசைப்பொறி, நெல் அரைக்கும் ஆலைகள், எண்ணெய் ஆலைகள் மற்றும் மாவு ஆலைகள் ஆகியன.
வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பகுதிகளால் உள்ளூர் விவசாய முறைகளுக்கான ஒரு புதையல் பகுதியாக தமிழ்நாடு திகழ்கிறது. ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதிக்கு குறிப்பிட்ட நிலையைச் சுற்றியுள்ள தனிப்பட்ட, பாரம்பரிய, உள்ளூர் விவசாய முறையைப் பயன்படுத்துவதே உள்ளூர் அறிவாகும். உள்ளூர் தகவல் அமைப்பு இயற்கை வளங்களின் மேலாண்மை மற்றும் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது. இது அனுபவம், பயன்பாடு, உள்ளூர் சூழ்நிலைக்கு தகுந்த நிலைமையைப் பொறுத்தது. தனிப்பட்ட அறிவு என்பதன் இதரப் பெயர்களாவன: உள்ளூர் அனுபவ பழக்க அறிவு உள்ளூர் தொழில் நுட்ப தகவல், பாரம்பரிய தகவல் மற்றும் பாரம்பரிய சூழ்நிலை அறிவு.
கரும்பு சார்ந்த உற்பத்தி அமைப்பின் வேளாண் தொழிலாளர்களால் பயன்படுத்தப்படும் உள்ளூர் வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்களைப் பற்றிய தகவல்களை கொண்டு வருவதற்காக ஐ.சி.ஏ.ஆர். ஏ.டி.பி-பி.எஸ்.ஆர்-58 என்ற திட்டத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த கருவிகளால் பழம் பெரும் விவசாயிகளின் அறிவைப் பற்றி அறிய முடிகிறது. 75 பாரம்பரிய பண்ணை கருவிகள் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தின் வேளாண் தொழிலாளர்களால் கரும்பு, மஞ்சள், நெல், கடலை மற்றும் கடுகு போன்ற பயிர்களில் பயன்படுத்தப்பட்டது. அவை பின்வருமாறு.
அ. கரும்பு
1. கரும்பு பாத்தி போடும் கலப்பை
2. கரும்பு கரணை வெட்டி
3. சர்க்கரை தேய்க்கும் முட்டி
4. கர்க்கரை தேய்க்கும் உரவரை
5. கரும்பு வெட்டி
6. வெட்டரிவால்
7. சமட்டி
8. சர்க்கரை சொரண்டி
9. மர சொரண்டி
10. சல்லடை
11. பகோட்டி கட்டை
12. சக்கை தாளி
13. சாம்பல் கரண்டி
14. சக்கை தல்லும் கவாய்
15. தாங்கி
16. சாறு எடுக்கும் டிரம்
17. சக்கைப்பரப்பி
18. சக்கை வடிகட்டி
19. இரும்பு வாலி
20. பெரிய கொப்பரை
21. சின்ன கொப்பரை
22. வெல்ல அச்சு
23. கரும்புத் தோகை வெட்டி
ஆ. நெல்
25. கட்டி உடைக்கும் சமட்டி
26. பரம்படிப் பலகை
27. கை பலகை
28. பல்லு பலகை
29. கூட் பலகை
30. கருக்கரிவால்
இ. மஞ்சள்
31. மஞ்சள் ஊனும் கொத்து
32. இரும்பு கலப்பை
33. மமட்டி
34. களைக் கொத்து
35. மஞ்சள் வெட்டும் கொத்து
36. மஞ்சள் வெட்டும் கொத்து
37. மஞ்சள் வெட்டும் கொத்து
|
38. சின்னக்கூடை
39. மக்கிரிக் கூடை
40. மஞ்சள் அண்டா
41. களைக்கொத்து
ஈ. நிலக்கடலை
42. களைக்கொத்து
43. காராசட்டி
44. இரும்புப்பெட்டி
45. சானைக்கூடை
46. சல்லடை
உ. எள்ளு
47. பாத்தி போடும் கலப்பினி
48. அரிவாள்
ஊ. இதர இயந்திரங்கள்
49. கடப்பாறை
50. உலக்கை
51. செக்கு
52. ஆட்டுக்கல்
53. வாய்ப்பொட்டி
54. தட்டு நறுக்கி
55. இரும்புமுரம்
56. மூங்கில் முரம்
57. கோடாரி
58. மமட்டிக் கொத்து
59. தாலி
60. இரும்புக் கொடுவால்
61. ஆரிய கல்
62. அம்மி
63. கொடப்பு
64. சுத்தி
65. மத்து
66. சர்க்கரை காய்ச்சும் அடுப்பு
69. கடை ஆனி
70. படி
71. வல்லம்
72. சொரை
73. ராத்தல்
74. சலைக் கத்தி
எ. நாட்டுப்புற பண்ணைக் கருவிகளின் புகைப்படம் |
அ. கரும்பு
1. கரும்பு பாத்தி போடும் கலப்பை
பொதுப் பெயர் |
: |
கரும்பு பாத்தி போடும் கலப்பை/சுகர்கேன் பண்ட் ஃபார்மர் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 5 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 500 |
அளவீடுகள் |
: |
சுழல் தண்டின் அளவு 375 செ.மீ. பயன்படுத்தப்படும் பகுதி இரும்புத் தகடு 60 செ.மீ உயரம் மற்றும் 7 செ.மீ அகலம் |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
சுழல் தண்டுகள் அக்கேசியா ஸ்பீசியஸ் மரத்தினால் தயாரிக்கப்பட்டது. அதன் பயன்படுத்தும் பகுதி இரும்பினால் தயாரிக்கப்பட்டது. |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
இது வரப்பு உருவாக்குவதற்கு பயன்படும். கரும்பு வயலில் இருந்து அரிதாள்களை அகற்றப் பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மாட்டைக் கொண்டு இழுக்கும் கருவி |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
பாதிப்பு ஏற்படாது |
2. கரும்பு கரணை வெட்டி
பொதுப் பெயர் |
: |
கரும்பு கரணை வெட்டி/சுகர்கேன் செட் மேக்கர் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 1 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 10 |
அளவீடுகள் |
: |
பயன்படுத்தப்படும் பகுதியின் உயரம் 15 செ.மீ, அகலம் 21/2 செ.மீ. கைப்பிடி 11 செ.மீ உயரம் மற்றும் அதன் குறுக்களவு 3 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
பயன்படுத்தப்படும் பகுதி இரும்பினால் தயாரிக்கப்பட்டது. அதன் கைப்பிடி அகேசியா ஸ்பீசியஸ் மரத்தினால் ஆனது. |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
இந்தக் கருவியினால் நெல் மற்றும் தீவனப் பயிர்களை அறுவடை செய்ய பயன்படும். குத்துச்செடியை வெட்டவும் பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் மற்றும் பெண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
இந்தக் கருவி கையைக் கிழித்துவிடும் |
3. சர்க்கரை தேய்க்கும் முட்டி
பொதுப் பெயர் |
: |
சர்க்கரை தேய்க்கும் முட்டி/ஸ்வேப்பிங் லேடில் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 2 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 120 |
அளவீடுகள் |
: |
கைப்பிடியின் அளவு 15ஜி செ.மீ. பயன்படுத்தப்படும் பகுதியின் நீளம் மற்றும் அகலத்தின் அளவு 20 செ.மீ X 10 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது அகேசியா ஸ்பீசியஸ் அல்லது அல்பெசியா லெபெக் மரத்தினால் தயாரிக்கப்பட்டது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
இது வெல்லத்தை அழுத்தப் பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
தோல் வலி மற்றும் கை வலி ஏற்படும் |
4. சர்க்கரைத் தேய்க்கும் உரவரை
பொதுப் பெயர் |
: |
சர்க்கரைத் தேய்க்கும் உரவரை/ஸ்டிர்ரர் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 3 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 50 |
அளவீடுகள் |
: |
கைப்பிடியின் நீளம் 100 செ.மீ. பயன்படுத்தப்படும் பகுதியின் நீளம் மற்றும் அகலம் 15 செ.மீ X 10 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது அகேசியா ஸ்பீசியஸ் மரத்தினால் தயாரிக்கப்பட்டது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
இது வெல்லம் தயாரிக்கும் போது வெல்லத்தை நசுக்க உதவும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
தோல் வலி மற்றும் கை வலி ஏற்படும் |
5. கரும்பு வெட்டி
பொதுப் பெயர் |
: |
கரும்பு வெட்டி/சுகர்கேன் ஹார்வெஸ்டர் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 5 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 60 |
அளவீடுகள் |
: |
பயன்படுத்தப்படும் பகுதியின் நீளம் மற்றும் அகலம் 13 செ.மீ X 6 செ.மீ. கைப்பிடியின் நீளம் 35 செ.மீ மற்றும் குறுக்களவு 8 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
பயன்படுத்தப்படும் பகுதி இரும்பினால் ஆனது. கைப்பிடி அகேசியா ஸ்பீசியஸ் மரத்தினால் தயாரிக்கப்பட்டது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
இந்தக் கருவி கரும்பை அறுவடை செய்ய பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
கை வலி ஏற்படும் |
6. வெட்டறிவாள்
பொதுப் பெயர் |
: |
வெட்டறிவாள்/நைஃப் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 5 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 100 |
அளவீடுகள் |
: |
பயன்படுத்தப்படும் பகுதியின் நீளம் மற்றும் அகலம் 24 செ.மீ X 4 செ.மீ. கைப்பிடியின் நீளம் 35 செ.மீ மற்றும் குறுக்களவு 4 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
பயன்படுத்தப்படும் பகுதி இரும்பினால் ஆனது. கைப்பிடி அகேசியா ஸ்பீசியஸ் மரத்தினால் தயாரிக்கப்பட்டது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
இந்தக் கருவி கரும்பை அறுவடை செய்யவும், குத்துச்செடி மற்றும் முற்களை வெட்ட உதவும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் மற்றும் பெண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
இந்தக் கருவி கையைக் கிழித்துவிடும் |
7. சமட்டி
பொதுப் பெயர் |
: |
சமட்டி/ஜேக்கரி ரிமூவர் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 4 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 45 |
அளவீடுகள் |
: |
அடிப்பகுதியின் நீளம் மற்றும் அகவம் 30 செ.மீ மற்றும் 15 செ.மீ. கைப்பிடியின் நீளம் 90 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இதனை அகேசியா ஸ்பீசியஸ் அல்லது வேம்பு மரத்தினால் தயாரிக்கப்பட்டது. |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
இது வெல்லத்தை அச்சில் இருந்து பிரிக்க உதவும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் மற்றும் பெண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
இதனால் கை வலி ஏற்படும் |
8. சர்க்கரை சொரண்டி
பொதுப் பெயர் |
: |
சர்க்கரை சொரண்டி/ஐயன் பிலேடு |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 6 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 50 |
அளவீடுகள் |
: |
பயன்படுத்தப்படும் பகுதியின் நீளம் மற்றும் அகலம் 10 செ.மீ X 15 செ.மீ. மரக்கைப்பிடியின் நீளம் 120 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது அகேசியா ஸ்பீசியஸ் அல்லது அல்பெசியா லெபெக் மரத்தினால் தயாரிக்கப்பட்டது. பயன்படுத்தப்படும் பகுதி இரும்புத்தகட்டினால் தயாரிக்கப்பட்டது. |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
வெல்லத்தை கொதி சட்டியில் தயாரிக்கும் போது சர்க்கரையை திரட்ட இந்தக் கருவி பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
இதனால் கை வலி ஏற்படும் |
9. மர சொரண்டி
பொதுப் பெயர் |
: |
மர சொரண்டி/உட்டன் ஜாக்கரி கலெக்டர் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 3 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 25 |
அளவீடுகள் |
: |
இதன் நீளம் மற்றும் அகலம் 40 செ.மீ X 20 செ.மீ. |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது அகேசியா ஸ்பீசியஸ் மரத்தினால் தயாரிக்கப்பட்டது. |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
வெல்லத்தை கொதி சட்டியில் தயாரிக்கும் போது சர்க்கரையை திரட்ட இந்தக் கருவி பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
இதனால் கை வலி ஏற்படும் |
10. சல்லடை
பொதுப் பெயர் |
: |
சல்லடை/சீவர் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 2 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 40. |
அளவீடுகள் |
: |
பயன்படுத்தப்படும் பகுதியின் குறுக்களவு 40 செ.மீ. கைப்பிடியின் நீளம் 125 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது மூங்கிலினால் தயாரிக்கப்பட்டது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
கரும்பு சாறில் இருந்து வரும் கழிவுகளை வடிகட்ட இக்கருவி பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
- |
11. பகோட்டி கட்டை
பொதுப் பெயர் |
: |
பகோட்டி கட்டை/மிக்சர் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 1 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 75 |
அளவீடுகள் |
: |
பயன்படுத்தப்படும் பகுதியின் உயரம் 15 செ.மீ, அகலம் 15 செ.மீ. கைப்பிடியின் உயரம் 165 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது வேம்பு அல்லது கடுக்கை மரத்தினால் ஆனது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
வெல்லத்தை தயாரிக்கும் போது கொதிக்கும் சாறை கலக்க இந்தக் கருவி பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
கையை வைத்து கலக்கும் போது கொப்புளம் ஏற்படும் |
12. சக்கை தாளி
பொதுப் பெயர் |
: |
சக்கை தாளி /பகேஸி இன்சர்ட்டர் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 3 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 100 |
அளவீடுகள் |
: |
இரும்புக் கைப்பிடி 90 செ.மீ நீளம். அடிப்பகுதியின் குறுக்களவு 10 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
பயன்படுத்தப்படும் பகுதி இரும்புக் கம்பியினால் தயாரிக்கப்பட்டது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
கரும்பு சக்கையை கருவியின் உள் தள்ள இந்தக் கலுவி பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
இந்தக் கருவியை பயன்படுத்துவதால் உடல் சூடாகிவிடும். |
13. சாம்பல் கரண்டி
பொதுப் பெயர் |
: |
சாம்பல் கரண்டி/ஆஸ் ரிமூவர் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 5 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 120 |
அளவீடுகள் |
: |
கைப்பிடியின் நீளம் 75 செ.மீ. பயன்படுத்தப்படும் பகுதியின் நீளம் 12 செ.மீ, அகலம் 10 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
பயன்படுத்தப்படும் பகுதி இரும்பினால் தயாரிக்கப்பட்டது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
இந்தக் கருவியை பொது வெல்லப் பகுதியில் சூட்டினால் ஏற்படும் சாம்பலை தள்ள உதவும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
கையை வைத்து கலக்கும் போது கொப்புளம் ஏற்படும் |
14. சக்கை தள்ளும் கவை
பொதுப் பெயர் |
: |
சக்கை தள்ளும் கவை/பகேஸி இன்சர்ட்டர் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 6 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 70 |
அளவீடுகள் |
: |
கைப்பிடியின் நீளம் 200 செ.மீ. குறுக்களவு 2 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
பயன்படுத்தப்படும் பகுதி இரும்புக் கம்பியினால் தயாரிக்கப்பட்டது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
கரும்பு சக்கையை கருவியின் உள் தள்ள இந்தக் கலுவி பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
- |
15. தாங்கி
பொதுப் பெயர் |
: |
தாங்கி |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 2 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 60 |
அளவீடுகள் |
: |
நீளம் 150 செ.மீ, அகலம் 75 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது அகேசியா ஸ்பீசியஸ் மரத்தினால் தயாரிக்கப்பட்டது. |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
வெல்லம் தயாரிக்கும் போது கொதி சட்டியை தாங்க பயன்படுத்தப்படும். |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
- |
16. சாறு எடுக்கும் டிரம்
பொதுப் பெயர் |
: |
சாறு எடுக்கும் டிரம்/ஜீஸ் டிரான்ஸ்போர்ட்டர் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 5 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 200 |
அளவீடுகள் |
: |
இதனுடைய உயரம் 150 செ.மீ, குறுக்களவு 40 செ.மீ. கைப்பிடியின் நீளம் 120 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது இரும்பினால் தயாரிக்கப்பட்டது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
வெல்லம் தயாரிக்கும் போது கரும்பு சாறை கடத்த பயன்படுத்தப்படுகின்றன. |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
இதனால் கை வலி ஏற்படும் |
17. சக்கை பரப்பி
பொதுப் பெயர் |
: |
சக்கை பரப்பி/பகேஸ் ஸ்பெரெட்டர் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 3 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 75 |
அளவீடுகள் |
: |
பயன்படுத்தப்படும் பகுதி 10 செ.மீ சுற்றளவு. கைப்பிடி 200 செ.மீ நீளம் |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
கைப்பிடி அகேசியா ஸ்பீசியஸ் மரத்தினால் தயாரிக்கப்பட்டது. அடிப்பகுதி இரும்புக் கம்பியினால் ஆனது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
இதனை கரும்பு சக்கையை பரப்புவதற்கு பயன்படுத்தப்படுகின்றது. |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
இதனால் கை வலி ஏற்படும் |
18. சக்கை வடிகட்டி
பொதுப் பெயர் |
: |
சக்கை வடிகட்டி/பகேஸ் ஃபில்டர் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 4 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 150 |
அளவீடுகள் |
: |
கைப்பிடியின் நீளம் 250 செ.மீ. பயன்படுத்தப்படும் பகுதியின் நீளம், அகலம் மற்றும் ஆழம். 65 செ.மீ X 45 செ.மீ X 35 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
அகேசியா ஸ்பீசியஸ் மரத்தினால் தயாரிக்கப்பட்டது. |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
வெல்லம் தயாரிக்கும் போது அதில் இருந்து வரும் கழிவுகளை வடிகட்ட பயன்படுத்தப்படுகின்றது. |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
இதனால் கை வலி ஏற்படும் |
19. இரும்பு வாலி
பொதுப் பெயர் |
: |
இரும்பு வாலி/ஐயன் பக்கெட் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 5 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 200 |
அளவீடுகள் |
: |
வாலியின் உயரம் 45 செ.மீ. அடி மற்றும் மேல் பாகத்தின் குறுக்களவு 15 செ.மீ மற்றும் 30 செ.மீ. கைப்பிடி பகுதியின் சுற்றளவு 40 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது இரும்பினால் தயாரிக்கப்பட்டது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
வெல்லம் தயாரிக்கும் போது கரும்பு சாறை கடத்த பயன்படுத்தப்படுகின்றன. |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
இதனால் கை வலி ஏற்படும் |
20.பெரிய கொப்பரை
பொதுப் பெயர் |
: |
பெரிய கொப்பரை/பாயிலிங் பேன் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 3 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 3500 |
அளவீடுகள் |
: |
இதன் அகலம் 75 செ.மீ மற்றும் குறுக்களவு 225 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது இரும்புக் கம்பியினால் தயாரிக்கப்பட்டது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
வெல்லம் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றது |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
இதனால் கை வலி ஏற்படும் |
21. சின்ன கொப்பரை
பொதுப் பெயர் |
: |
சின்ன கொப்பரை/சட்டி |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 3 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 1500 |
அளவீடுகள் |
: |
இதன் ஆழம் 50 செ.மீ, குறுக்களவு 100 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது இரும்பினால் தயாரிக்கப்பட்டது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
கரும்பு சாற்றை திரட்ட இந்தக் கருவி பயன்படுகிறது |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
- |
22. வெல்ல அச்சு
பொதுப் பெயர் |
: |
வெல்ல அச்சு/ஜாக்கரி மோல்டு |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 4 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 350 |
அளவீடுகள் |
: |
இது 200 செ.மீ நீளம் மற்றும் 50 செ.மீ அகலம். அச்சு 2 சதுர சென்டி மீட்டர் அளவு |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இதனை பொங்கேமியா மரத்தினால் தயாரிக்கப்பட்டது. அச்சு இரும்புக்கம்மியால் ஆனது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
வெல்லம் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றது |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
- |
23. கரும்பு தோகை வெட்டி
பொதுப் பெயர் |
: |
கரும்பு தோகை வெட்டி/சுகர்கேன் டிராஸ் கட்டர் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 10 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 250 |
அளவீடுகள் |
: |
அடிப்பகுதியின் நீளம் 150 செ.மீ, குறுக்களவு 1 செ.மீ. பயன்படுத்தப்படும் பகுதியின் சுற்றளவு 40 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
அடிப்பகுதி அகேசியா ஸ்பீசியஸ் மரத்தினால் தயாரிக்கப்பட்டது. கைப்பிடி மற்றும் பயன்படுத்தப்படும் பகுதி இரும்புக் கம்பியினால் ஆனது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
இது கரும்பு சக்கையை வெட்ட பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் மற்றும் பெண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
- |
ஆ. நெல்
24. நாட்டு கலப்பை
பொதுப் பெயர் |
: |
நாட்டு கலப்பை/கன்ட்ரி ப்ளவ் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 1 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 1000 |
அளவீடுகள் |
: |
கருவியின் உருவத்தின் நீளம் மற்றும் அகலம் 10 செ.மீ X 5 செ.மீ. சுழல் தண்டின் நீளம் 350 செ.மீ. கைப்பிடியின் உயரம் 60 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இதனை அகேசியா ஸ்பீசியஸ் மரம் (அ) வேம்பு மரம் (அ) சவுண்டால் மரத்தினால் தயாரிக்கப்பட்டது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
இதனை முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை பயிர்த் தொழில் செய்யும் அனைத்து வகையான மண் மற்றும் பயிர்களுக்கு பயன்படுத்தப்படுகின்றது |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மாட்டைக் கொண்டு இழுக்கும் கருவி |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
பாதிப்பு ஏற்படாது |
25. கட்டி உடைக்கும் சமட்டி
பொதுப் பெயர் |
: |
கட்டி உடைக்கும் சமட்டி/சாயில் க்ளாட் பிரேக்கர் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 4 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 150 |
அளவீடுகள் |
: |
பயன்படுத்தப்படும் பகுதியின் நீளம் மற்றும் அகலம் 15 செ.மீ X 10 செ.மீ. கைப்பிடியின் உயரம் 60 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது அகேசியா ஸ்பீசியஸ் (அ) வேம்பு மரத்தினால் ஆனது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
மண்ணில் ஏற்படும் கட்டிகளை உடைக்க பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
இதனால் கை வலி ஏற்படும் |
26. பரம்படி பலகை
பொதுப் பெயர் |
: |
பரம்படி பலகை/லெவலிங் போர்டு |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 8 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 1850 |
அளவீடுகள் |
: |
கைப்பிடியின் நீளம் 75 செ.மீ. பயன்படுத்தப்படும் பகுதியின் நீளம் 300 செ.மீ மற்றும் அகலம் 45 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
மரத்தினால் ஆனது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
நெல் வயலின் நிலையை அறிய பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது டிராக்டரால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
- |
27. கை பலகை
பொதுப் பெயர் |
: |
கை பலகை/லெவலிங் போர்டு |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 3 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 300 |
அளவீடுகள் |
: |
கைப்பிடியின் நீளம் 150 செ.மீ, பயன்படுத்தப்படும் பகுதியின் நீளம் மற்றும் அகலம் 60 செ.மீ, 5 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது அகேசியா ஸ்பீசியஸ் மரத்தினால் தயாரிக்கப்பட்டது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
நெல் வயலின் நிலையை அறிய பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
இதனால் கை வலி ஏற்படும் |
28. பல்லு பலகை
பொதுப் பெயர் |
: |
பல்லு பலகை/லெவலிங் போர்டு |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 5 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 300 |
அளவீடுகள் |
: |
கைப்பிடியின் நீளம் 100 செ.மீ, பயன்படுத்தப்படும் பகுதியின் நீளம் மற்றும் அகலம் 75 செ.மீ, 10 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது அகேசியா ஸ்பீசியஸ் மரத்தினால் தயாரிக்கப்பட்டது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
நெல் வயலின் நிலையை அறிய பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
- |
29. கூட் பலகை
பொதுப் பெயர் |
: |
கூட் பலகை/லெவலிங் போர்டு |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 2 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 25 |
அளவீடுகள் |
: |
கைப்பிடியின் நீளம் 120 செ.மீ. பயன்படுத்தப்படும் பகுதியில் அதிகளவில் குச்சிகள் உள்ளது. அது 30 செ.மீ நீளம் மற்றும் 2 செ.மீ அகலம் |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது அகேசியா ஸ்பீசியஸ் மரத்தினால் தயாரிக்கப்பட்டது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
நெல் வயலின் நிலையை அறிய பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
- |
30. கருக்கறிவால்
பொதுப் பெயர் |
: |
கருக்கறிவால்/சிக்கில் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 5 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 15 |
அளவீடுகள் |
: |
பயன்படுத்தப்படும் பகுதி 20 செ.மீ நீளம் மற்றும் 3 செ.மீ அகலம். கைப்பிடி 15 செ.மீ உயரம், 5 செ.மீ அகலம் |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
பயன்படுத்தப்படும் பகுதி இரும்பினால் தயாரிக்கப்பட்டது. கைப்பிடி அகேசியா ஸ்பீசியஸ் மரத்தினால் தயாரிக்கப்பட்டது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
நெல் மற்றும் தீவனப் பயிர்களை அறுவடை செய்ய பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் மற்றும் பெண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
இந்தக் கருவி கையைக் கிழித்துவிடும் |
இ. மஞ்சள்
31. மஞ்சள் ஊறும் கொத்து
பொதுப் பெயர் |
: |
மஞ்சள் ஊறும் கொத்து/டர்மரிக் ரைசோம் டிப்ளர் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 5 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 25 |
அளவீடுகள் |
: |
கைப்பிடியின் நீளம் 53 செ.மீ, அகலம் 10 செ.மீ. பயன்படுத்தப்படும் பகுதியின் நீளம் 22 செ.மீ. அகலம் 13 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
கைப்பிடி அகேசியா ஸ்பீசியஸ் மரத்தினால் தயாரிக்கப்பட்டது. பயன்படுத்தப்படும் பகுதி இரும்பினால் தயாரிக்கப்பட்டது. |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
மஞ்சள் கிழங்குகளை நடவு செய்வதற்கு பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை பெண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
இதனால் கை வலி மற்றும் உள்ளங்கை சொர சொரப்பாக மாறிவிடும் |
32. இரும்பு கலப்பை
பொதுப் பெயர் |
: |
இரும்பு கலப்பை/ஐயன் ப்ளவ் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 5 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 500 |
அளவீடுகள் |
: |
சுழல் தண்டின் நீளம் 400 செ.மீ. பயன்படுத்தப்படும் பகுதியில் தகடு உள்ளது. அதன் நீளம் 55 செ.மீ, மேல் மற்றும் கீழ் அகலம் 15 செ.மீ, 3 செ.மீ. கைப்பிடியின் நீளம் 78 செ.மீ, அகலம் 5 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
சுழல் தண்டு அகேசியா ஸ்பீசியஸ் மரத்தினால் தயாரிக்கப்பட்டது. பயன்படுத்தப்படும் பகுதி இரும்பினால் தயாரிக்கப்பட்டது. |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
இதனை முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை பயிர்த் தொழில் செய்யும் அனைத்து வகையான மண் மற்றும் பயிர்களுக்கு பயன்படுத்தப்படுகின்றது |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மாட்டைக் கொண்டு இழுக்கும் கருவி |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
இதனால் கை வலி ஏற்படும் |
33. மமட்டி
பொதுப் பெயர் |
: |
மண்வெட்டி (அ) மமட்டி/ஸ்பேட் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 4 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 125 |
அளவீடுகள் |
: |
கைப்பிடியின் நீளம் 50 செ.மீ. பயன்படுத்தப்படும் பகுதியின் நீளம் 22 செ.மீ. அகலம் 18 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
அகேசியா ஸ்பீசியஸ் மரத்தினால் தயாரிக்கப்பட்டது. |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
இது வரப்பு, உழவுகால் உருவாக்க பயன்படும். அனைத்து வகையான பயிர்களுக்கும் நீர்பாசனம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் மற்றும் பெண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
இதனால் உள்ளங்கை சொர சொரப்பாக மாறிவிடும் |
34. களைக்கொத்து
பொதுப் பெயர் |
: |
களைக்கொத்து/ஹேண்ட் கூ |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 3 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 50 |
அளவீடுகள் |
: |
பயன்படுத்தப்படும் பகுதியின் நீளம் 13 செ.மீ. மேல் மற்றும் கீழ் பகுதியின் அகலம் 7 செ.மீ, 50 செ.மீ. கைப்பிடியின் நீளம் 50 செ.மீ. அதன் குறுக்களவு 8 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
கைப்பிடி அகேசியா ஸ்பீசியஸ் மரத்தினால் தயாரிக்கப்பட்டது. பயன்படுத்தப்படும் பகுதி இரும்பினால் ஆனது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
மஞ்சளைக் களையெடுக்கப் பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை பெண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
இதனால் கை வலி மற்றும் உள்ளங்கை சொர சொரப்பாக மாறிவிடும் |
35. மஞ்சள் வெட்டும் கொத்து
பொதுப் பெயர் |
: |
மஞ்சள் வெட்டும் கொத்து/டர்மரிக் ஹார்வெஸ்டர் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 4 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 100 |
அளவீடுகள் |
: |
கைப்பிடியின் நீளம் 85 செ.மீ, குறுக்களவு 10 செ.மீ. பயன்படுத்தப்படும் பகுதியின் நீளம் 20 செ.மீ, அகலம் 14 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
கைப்பிடி அகேசியா ஸ்பீசியஸ் மரத்தினால் தயாரிக்கப்பட்டது. பயன்படுத்தப்படும் பகுதி இரும்பினால் ஆனது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
மஞ்சள் கிழங்கை அறுவடை செய்ய பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை பெண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
இதனால் கை வலி ஏற்படும் |
36. மஞ்சள் வெட்டும் கொத்து
பொதுப் பெயர் |
: |
மஞ்சள் வெட்டும் கொத்து/டர்மரிக் ஹார்வெஸ்டர் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 6 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 125 |
அளவீடுகள் |
: |
கைப்பிடியின் நீளம் 80 செ.மீ, குறுக்களவு 11 செ.மீ. பயன்படுத்தப்படும் பகுதியின் அனைத்து பக்கத்தினுடைய நீளம் 25 செ.மீ, அடிப்பகுதியின் அகலம் 13 செ.மீ, மேல் பகுதியின் அகலம் 8 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
கைப்பிடி அகேசியா ஸ்பீசியஸ் மரத்தினால் தயாரிக்கப்பட்டது. பயன்படுத்தப்படும் பகுதி இரும்பினால் ஆனது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
மஞ்சள் கிழங்கை அறுவடை செய்யவும், கரும்பின் அரிதாள் கட்டையை அகற்றவும் பயன்படும். |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
இதனால் கை வலி ஏற்படும் |
37. மஞ்சள் வெட்டும் கொத்து
பொதுப் பெயர் |
: |
மஞ்சள் வெட்டும் கொத்து/டர்மரிக் ஹார்வெஸ்டர் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 4 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 150 |
அளவீடுகள் |
: |
கைப்பிடியின் நீளம் மற்றும் குறுக்களவு 70 செ.மீ, 50 செ.மீ. பயன்படுத்தப்படும் பகுதியின் நீளம் 20 செ.மீ, அகலம் 7 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
கைப்பிடி அகேசியா ஸ்பீசியஸ் மரத்தினால் தயாரிக்கப்பட்டது. பயன்படுத்தப்படும் பகுதி இரும்பினால் ஆனது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
மஞ்சள் கிழங்கை தோண்டுவதற்கு பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
இதனால் கை வலி ஏற்படும் |
38. சின்ன கூடை
பொதுப் பெயர் |
: |
சின்ன கூடை/ஸ்மால் பேஸ்கட் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 2 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 50 |
அளவீடுகள் |
: |
ஆழம் 24 செ.மீ, மேல் மற்றும் கீழ் பகுதியின் குறுக்களவு 40 செ.மீ, 22 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது மூங்கில் குச்சியால் தயாரிக்கப்பட்டது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
இது மஞ்சள் கிழங்குகளை அறுவடை செய்த பின் திரட்ட பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை பெண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
- |
39. மக்கிரி கூடை
பொதுப் பெயர் |
: |
மக்கிரி கூடை/பிங் பேஸ்கட் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 2 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 80 |
அளவீடுகள் |
: |
ஆழம் 30 செ.மீ, மேல் மற்றும் கீழ் பகுதியின் குறுக்களவு 54 செ.மீ, 30 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது மூங்கிலில் தயாரிக்கப்பட்டது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
இது மஞ்சள் கிழங்கை மஞ்சக் காட்டில் இருந்து வீட்டிற்கு எடுத்துச் செல்ல பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை பெண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
- |
40. மஞ்சள் அண்டா
பொதுப் பெயர் |
: |
மஞ்சள் அண்டா/டர்மரிக் பாய்லர் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 2 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 750 |
அளவீடுகள் |
: |
சட்டியின் நீளம் மற்றும் அகலம் 97 செ.மீ, 62 செ.மீ மற்றும் அதன் ஆழம் 30 செ.மீ. கைப்பிடியின் நீளம் மற்றும் அகலம் 20 செ.மீ, 10 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது இரும்பு தகட்டினால் தயாரிக்கப்பட்டது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
இது மஞ்சளை வேக வைக்கவும், நெல்லை புழுங்கலாக்கவும் பயன்படும். |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
இதனால் கை வலி ஏற்படும் |
41. களைக்கொத்து
பொதுப் பெயர் |
: |
களைக்கொத்து/ஹோண்ட் கூ |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 3 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 30 |
அளவீடுகள் |
: |
பயன்படுத்தப்படும் பகுதியின் நீளம் மற்றும் அகலம் 15 செ.மீ, 5 செ.மீ. கைப்பிடியின் நீளம் 50 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
கைப்பிடி அகேசியா ஸ்பீசியஸ் மரத்தினால் தயாரிக்கப்பட்டது. பயன்படுத்தப்படும் பகுதி இரும்பினால் ஆனது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
மஞ்சள் காட்டில் களையெடுக்கப் பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை பெண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
இதனால் கை வலி மற்றும் உள்ளங்கை சொர சொரப்பாக மாறிவிடும் |
ஈ. நிலக்கடலை
42. களைக்கொத்து
பொதுப் பெயர் |
: |
களைக்கொத்து/ஹோண்ட் கூ |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 3 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 30 |
அளவீடுகள் |
: |
பயன்படுத்தப்படும் பகுதியின் நீளம் மற்றும் அகலம் 15 செ.மீ, 5 செ.மீ. கைப்பிடியின் நீளம் 50 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
கைப்பிடி அகேசியா ஸ்பீசியஸ் மரத்தினால் தயாரிக்கப்பட்டது. பயன்படுத்தப்படும் பகுதி இரும்பினால் ஆனது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
மஞ்சள் காட்டில் களையெடுக்கப் பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை பெண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
இதனால் கை வலி மற்றும் உள்ளங்கை சொர சொரப்பாக மாறிவிடும் |
43. காரா சட்டி
பொதுப் பெயர் |
: |
காரா சட்டி/ஐயன் பேஸ்கட் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 6 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 50 |
அளவீடுகள் |
: |
ஆழம் 35 செ.மீ, குறுக்களவு 5 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இரும்பு தகட்டினால் தயாரிக்கப்பட்டது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
இது நிலக்கடலையை அறுவடை செய்யவும், நிலக்கடலையை விதைப்பிற்கு வைக்கவும் பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் மற்றும் பெண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
- |
44. இரும்பு பொட்டி
பொதுப் பெயர் |
: |
இரும்பு பொட்டி/ஐயன் பேஸ்கட் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 5 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 80 |
அளவீடுகள் |
: |
இதன் குறுக்களவு 15 செ.மீ, ஆழம் 30 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது இரும்பு தகட்டினால் தயாரிக்கப்பட்டது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
அறுவடையின் போது நிலக்கடலையை விதைப்பிற்கு தேவையானதை திரட்ட பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை பெண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
- |
45. சாணிக்கூடை
பொதுப் பெயர் |
: |
சாணிக்கூடை/கெளடங் பேஸ்கட் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 4 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 30 |
அளவீடுகள் |
: |
இதன் குறுக்களவு மற்றும் ஆழம் 40 செ.மீ, 10 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது மூங்கிலினால் தயாரிக்கப்பட்டது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
நிலக்கடலை மற்றும் சாணத்தை திரட்டப் பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் மற்றும் பெண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
- |
46. சல்லடை
பொதுப் பெயர் |
: |
சல்லடை/கிரவுண்ட்நட் கிரேடர் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 2 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 50 |
அளவீடுகள் |
: |
இதனுடைய நீளம் 75 செ.மீ, அகலம் 40 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது மண்ணால் தயாரிக்கப்பட்டது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
இது நிலக்கடலையை தரம் பிரிக்க பயன்படுத்தப்படுகிறது |
பயன்படுத்துபவர் |
: |
இதனை பெண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
இதனால் கை வலி ஏற்படும் |
உ. எள்ளு
47. பாத்தி போடும் கலப்பை
பொதுப் பெயர் |
: |
பாத்தி போடும் கலப்பை/பண்ட் ஃபார்மர் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 8 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 500 |
அளவீடுகள் |
: |
சுழல் தண்டின் நீளம் 400 செ.மீ. பயன்படுத்தப்படும் பகுதியில் இரண்டு தகடுகள் உள்ளது. அதன் நீளம் 75 செ.மீ, அகலம் 20 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
சுழல் தண்டு அகேசியா ஸ்பீசியஸ் மரத்தினால் ஆனது. பயன்படுத்தப்படும் பகுதி இரும்பினால் தயாரிக்கப்பட்டது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
இது சோளம், எள்ளு மற்றும் நிலக்கடலைக்கு படுக்கையை உருவாக்க பயன்படுத்தப்படுகின்றது. |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மாட்டைக் கொண்டு இழுக்கும் கருவி |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
பாதிப்பு ஏற்படாது |
48. அரிவாள்
பொதுப் பெயர் |
: |
அரிவாள்/சிக்கில் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 2 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 10 |
அளவீடுகள் |
: |
பயன்படுத்தும் பகுதியில் வலைந்த பகுதியின் அளவு 25 செ.மீ. கைப்பிடியின் நீளம் 7 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
பயன்படுத்தப்படும் பகுதி இரும்பினால் ஆனது. கைப்பிடி அகேசியா ஸ்பீசியஸ் மரத்தினால் ஆனது. |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
இது எள்ளை அறுவடை செய்ய பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை பெண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
பயன்படுத்தும் பகுதியை அடிக்கடி கூர்மையாகவே வைத்துக் கொள்ள வேண்டும் |
ஊ. இதர இயந்திரங்கள்
49. கடப்பாரை
பொதுப் பெயர் |
: |
கடப்பாரை/க்ரோ பார் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 15 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 200 |
அளவீடுகள் |
: |
இதன் நீளம் 45 செ.மீ, கீழ் மற்றும் மேல் மட்டத்தின் குறுக்களவு 8 செ.மீ மற்றும் 5 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது இரும்பினால் தயாரிக்கப்பட்டது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
இது மரம் நடுவதற்கு குழி தோண்ட பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
இதனால் கை வலி மற்றும் உள்ளங்கை சொர சொரப்பாக மாறிவிடும் |
50. உலக்கை
பொதுப் பெயர் |
: |
உலக்கை/மில்லிங் டூல் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 10 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 200 |
அளவீடுகள் |
: |
இதன் நீளம் 142 செ.மீ, குறுக்களவு 15 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது வேம்பு, சவுண்டால், பலா அல்லது தேக்கு மரத்தினால் தயாரிக்கப்பட்டது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
இது தானியங்களை அரைக்க பயன்படுகிறது |
பயன்படுத்துபவர் |
: |
இதனை பெண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
இதனால் கை வலி மற்றும் உள்ளங்கை சொர சொரப்பாக மாறிவிடும் |
51. செக்கு
பொதுப் பெயர் |
: |
செக்கு/கிரைண்டர் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 10 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 60 |
அளவீடுகள் |
: |
இதன் உயரம் 140 செ.மீ, பயன்படுத்தப்படும் பகுதியின் குறுக்களவு 15 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது கற்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
இது அனைத்து வகையான தானியங்களையும் அரைக்க பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை பெண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
இதனால் கை வலி ஏற்படும் |
52. ஆட்டுக்கல்
பொதுப் பெயர் |
: |
ஆட்டுக்கல்/கிரைண்டர் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 10 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 60 |
அளவீடுகள் |
: |
இதன் உயரம் 60 செ.மீ, அகலம் 48 செ.மீ. பயன்படுத்தப்படும் பகுதியின் ஆழம் மற்றும் குறுக்களவு 15 செ.மீ, 22 செ.மீ. குளவியின் நீளம் 27 செ.மீ, மேல் மற்றும் கீழ் பகுதியின் குறுக்களவு 50 செ.மீ மற்றும் 42 செ.மீ. கைப்பிடியின் நீளம் மற்றும் குறுக்களவு 10 செ.மீ, 5 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது கற்களால் தயாரிக்கப்பட்டது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
இது அரிசி, பருத்திக் கொட்டைகளை அரைக்க பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை பெண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
இதனால் கை வலி ஏற்படும் |
53. வாய்ப்பெட்டி
பொதுப் பெயர் |
: |
வாய்ப்பெட்டி/மெளத் கவர் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 2 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 50 |
அளவீடுகள் |
: |
இதன் ஆழம் 15 செ.மீ. மேல் மற்றும் கீழ் பகுதியின் குறுக்களவு 15 செ.மீ, 8 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது கயிரினால் ஆனது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
விலங்குகளின் மேய்ச்சலைக் கட்டுப்படுத்த அதன் வாய் மேல் இதனை கட்டி வைக்க பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
- |
54. தட்டு நறுக்கி
பொதுப் பெயர் |
: |
தட்டு நறுக்கி/சோர்கம் ஸ்டாக் கட்டர் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 80 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 200 |
அளவீடுகள் |
: |
அடிப்பகுதியின் நீளம் 100 செ.மீ, அகலம் 15 செ.மீ. பயன்படுத்தப்படும் பகுதியின் நீளம் மற்றும் அகலம் 40 செ.மீ X 5 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது இரும்பினால் தயாரிக்கப்பட்டது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
இது சோளப் பயிர் மற்றும் தீவனப் பயிர்களை வெட்டப் பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
இதனால் கை வலி ஏற்படும் |
55. இரும்பு முரம்
பொதுப் பெயர் |
: |
இரும்பு முரம்/வின்னோவர் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 2 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 130 |
அளவீடுகள் |
: |
இதன் நீளம், அகலம் மற்றும் ஆழம் 40 செ.மீ X 30 செ.மீ X 3 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது இரும்பினால் ஆளது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
இது பயிறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை திரட்டவும் அதிலே வைக்கவும் பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை பெண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
இதனால் கை வலி ஏற்படும் |
56. மூங்கில் முரம்
பொதுப் பெயர் |
: |
மூங்கில் முரம்/வின்னோவர் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 2 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 50 |
அளவீடுகள் |
: |
இதன் நீளம், அகலம் மற்றும் ஆழம் 35 செ.மீ X 25 செ.மீ X 3 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது மூங்கில் குச்சிகளால் தயாரிக்கப்பட்டது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
இது பயிர் வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை சுத்தம் செய்யவும், புடைக்கவும் பயன்படுத்தப்படுகிறது |
பயன்படுத்துபவர் |
: |
இதனை பெண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
இதனால் கை வலி ஏற்படும் |
57. கோடாரி
பொதுப் பெயர் |
: |
கோடாரி/பிக் ஆக்ஸ் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 7 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 75 |
அளவீடுகள் |
: |
கைப்பிடியின் நீளம் 65 செ.மீ. பயன்படுத்தப்படும் பகுதியின் நீளம் 40 செ.மீ, அகலம் 5 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
கைப்பிடி மரத்தினால் ஆனது. பயன்படுத்தப்படும் பகுதி இரும்பினால் ஆனது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
இது மரத்தில் உள்ள விறகு மற்றும் மேல் வேர் முதல் கீழ் வேர் பகுதி வரை உள்ள விறகுப் பகுதியை வெட்ட பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
இதனால் கை வலி ஏற்படும் |
58. மமட்டி கொத்து
பொதுப் பெயர் |
: |
மமட்டி கொத்து/ஷேண்ட் கூ |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 5 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 30 |
அளவீடுகள் |
: |
கைப்பிடியின் நீளம் 55 செ.மீ. பயன்படுத்தப்படும் பகுதியின் நீளம் 5 செ.மீ, அகலம் 10 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
கைப்பிடி அகேசியா ஸ்பீசியஸ் மரத்தினால் ஆனது. அதன் தகடு இரும்பினால் தயாரிக்கப்பட்டது. |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
பருத்தி மற்றும் மரவள்ளியை களையெடுக்க பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை பெண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
இதனால் கை வலி மற்றும் உள்ளங்கை சொர சொரப்பாக மாறிவிடும் |
59. தாலி
பொதுப் பெயர் |
: |
தாலி/வாட்டர் கீப்பிங் பேன் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 8 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 80 |
அளவீடுகள் |
: |
இதன் ஆழம் 60 செ.மீ. மேல் மற்றும் கீழ் பகுதியின் குறுக்களவு 50 செ.மீ, 25 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது சிமெண்ட் கலவையைக் கொண்டு தயாரிக்கப்பட்டது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
இது கால்நடைகளுக்கு தண்ணீர் வைக்க பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை பெண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
- |
60. இரும்புக் கொடுவால்
பொதுப் பெயர் |
: |
இரும்புக் கொடுவால்/ஐயன் நைஃப் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 6 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 100 |
அளவீடுகள் |
: |
இதன் கைப்பிடியின் நீளம் 10 செ.மீ. பயன்படுத்தப்படும் பகுதியின் வலைவான பகுதி 30 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது இரும்பினால் ஆனது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
சோளம், தீவனப் பயிர்களை அறுவடை செய்வதற்கும், புதர் செடி, முற்கள் மற்றும் இதர செடிகளை வெட்ட பயன்படுத்தப்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் இது ஆண் வேலை |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
பயன்படுத்தும் பகுதியை அடிக்கடி கூர்மையாகவே வைத்துக் கொள்ள வேண்டும் |
61. ஆரியகல்
பொதுப் பெயர் |
: |
ஆரியகல்/ராகி மில்லிங் டூல் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 15 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 400 |
அளவீடுகள் |
: |
அடிப்பகுதியின் உயரம் 10 செ.மீ, குறுக்களவு 40 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது கல்லால் தயாரிக்கப்பட்டது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
இது அரைப்பதற்கு பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை பெண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
- |
62. அம்மி
பொதுப் பெயர் |
: |
அம்மி/மில்லிங் டூல் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 15 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 150 |
அளவீடுகள் |
: |
இதன் நீளம், அகலம் மற்றும் உயரம் 30 செ.மீ X 20 செ.மீ X 15 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது கல்லால் தயாரிக்கப்பட்டது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
சிறிதளவு பருப்பு வகைகளை அரைக்கப் பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை பெண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
- |
63. கொடப்பு
பொதுப் பெயர் |
: |
கொடப்பு/பேஸ்கட் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 5 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 150 |
அளவீடுகள் |
: |
இதன் குறுக்களவு 110 செ.மீ, உயரம் 100 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது மூங்கிலினால் ஆனது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
இது ஆட்டுக்குட்டி, கோழிகளை பாம்பு, நாய் மற்றும் நரிகளிடம் இருந்து பாதுகாக்க பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் மற்றும் பெண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
- |
64. சுத்தி
பொதுப் பெயர் |
: |
சுத்தி/ஹேம்மர் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 8 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 50 |
அளவீடுகள் |
: |
கைப்பிடியின் நீளம் 30 செ.மீ. பயன்படுத்தப்படும் பகுதியின் நீளம் மற்றும் குறுக்களவு 10 செ.மீ, 3 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
கைப்பிடி அகேசியா ஸ்பீசியஸ் மரம் (அ) பொங்கமியா மரம் (அ) அல்பெசியா லெபெக் மரத்தினால் ஆனது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
இது புளியில் உள்ள விதைகளை தனியாகப் பிரிக்கப் பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை பெண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
இதனால் கை வலி ஏற்படும் |
65. மத்து
பொதுப் பெயர் |
: |
மத்து/பட்டர் செப்பரேட்டர் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 1 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 50 |
அளவீடுகள் |
: |
இதன் நீளம் 60 செ.மீ, அடிப்பகுதியின் குறுக்களவு 10 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
அல்பெசியா லெபெக் மரத்தினால் ஆனது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
இது தயிரில் இருந்து வெண்ணெயைப் பிரிக்கப் பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை பெண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
இதனால் கை வலி ஏற்படும் |
66. சர்க்கரை காய்ச்சும் அடுப்பு
பொதுப் பெயர் |
: |
சர்க்கரை காய்ச்சும் அடுப்பு/ஜாக்கரி மேக்கிங் சுலா |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 3 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 200 |
அளவீடுகள் |
: |
இதன் குறுக்களவு 230 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது மண்ணால் தயாரிக்கப்பட்டது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
வெல்லம் தயாரிக்கப் பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
- |
69. கடாய் ஆணி
பொதுப் பெயர் |
: |
கடாய் ஆணி |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 4 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 50 |
அளவீடுகள் |
: |
இதன் நீளம் 75 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது இரும்புக் கம்பியினால் ஆனது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
இது மாட்டு வண்டியில் உள்ள சக்கரத்தின் அழுத்தத்தைக் கட்டுப்படுத்த பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
- |
70. படி
பொதுப் பெயர் |
: |
படி/மெசரிங் டூல் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 20 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 25 |
அளவீடுகள் |
: |
இதன் நீளம் 14 செ.மீ, அகலம் 9 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இரும்பினால் தயாரிக்கப்பட்டது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
இது தானியம், பயிறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை அளக்க பயன்படும். இது 1 கிலோ எடை வரை அளக்க உதவும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் மற்றும் பெண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
- |
71. வல்லம்
பொதுப் பெயர் |
: |
வல்லம்/மெசரிங் டூல் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 20 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 100 |
அளவீடுகள் |
: |
இதன் நீளம் 20 செ.மீ, குறுக்களவு 18 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இரும்பினால் தயாரிக்கப்பட்டது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
இது தானியம், பயிறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை அளக்க பயன்படும். இது 3 கிலோ எடை வரை அளக்க உதவும். |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் மற்றும் பெண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
- |
72. சொரை
பொதுப் பெயர் |
: |
சொரை/புளல் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 3 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 25 |
அளவீடுகள் |
: |
இதன் அகலம் 26 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது பிளாஸ்டிக்கால் ஆனது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
இது தெளிப்பானில் பூச்சிக்கொல்லியை ஊற்ற பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
- |
73. ராத்தல்
பொதுப் பெயர் |
: |
ராத்தல்/மெசரிங் டூல் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 10 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 300 |
அளவீடுகள் |
: |
இதன் நீளம் 36 செ.மீ, அகலம் 4 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது இரும்பினால் ஆனது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
பொருட்களை அளக்க பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
- |
74. சல்லைக்கத்தி
பொதுப் பெயர் |
: |
சல்லைக்கத்தி/ஹார்வெஸ்டர் |
ஆயுட்காலம் மற்றும் விலை |
: |
குறைந்தபட்சம் 8 வருடம் மற்றும் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 30 |
அளவீடுகள் |
: |
மூங்கில் குச்சியின் நீளம் 200 செ.மீ. பயன்படுத்தப்படும் பகுதி இரும்புக் கத்தி. இதன் வளைவு 10 செ.மீ |
தயாரிக்க தேவையான பொருட்கள் |
: |
இது இரும்பினால் ஆனது |
பயன்பாடு மற்றும் பயிர்கள் |
: |
பழங்கள், முருங்கையை பறிக்க செய்ய பயன்படும் |
பயன்படுத்துபவர் |
: |
இதனை ஆண் வேலையாட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் |
பயன்படுத்தும் முறை |
: |
இது மனிதனால் இயக்கப்படுபவை |
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் |
: |
- |
மேலே
எ. நாட்டுப்புற பண்ணைக் கருவிகளின் புகைப்படம்
மேலே |