பண்ணைக் கருவிகள் :: விதைக்கும் கருவிகள் |
|||||
உழவுக் கருவிகள் |
சால் அமைத்து விதைக்கல கருவி
பயன் : ஒரே நேரத்தில் சால் அமைத்து விதைக்கலாம் திறன் : நாளொன்றுக்கு 3.2 எக்டர் விலை : ரூ.45,000/- அமைப்பு : இக்கருவி பறவையின் இறக்கைகளைப் போன்று இரும்பினால் ஆன இரண்டு இறக்கைகளைக் கொண்டுள்ளது. இவ்விறக்கைகளின் கோணத்தை மாற்றுவதின் மூலம் வாய்க்காலின் அகலம் மாறுபடுகிறது. இக்கருவியை உழும்பொழுது இறக்கையானது மண்ணை இருபுறமும் தள்ளுகிறது. அவ்வாறு தள்ளும் பொழுது கலப்பையின் இருபுறமும் ஒரு பொதுவான சட்டத்தில் ஒன்றுக்கொன்று இடைவெளி ரத்தை மாற்றுவதற்கேற்றவாறு அமைத்து சால் அமைப்பதற்குத் தேவையான 3 சால் கலப்பைகளும். 3 அல்லது 4 வரிசைகளில் விதைப்பதற்குத் தேவையான விதைக்கும் கருவியும் பொருத்தப்பட்டுள்ளன. ஒன்று அமைப்பு கொண்ட சாதனம். மற்றும் இக்குவளைகளை இயக்கும் அமைப்பு ஆகியவைகளும் பொருத்தப்பட்டுள்ளன. இக்கருவியின் இருபுறமும் வரிசையை அடையாளம் செய்வதற்கான அமைப்புகளும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அடுத்த வரிசை உழுது விதைப்பதற்கான அடையாளக்குறி அமைக்க முடிகிறது.
சிறப்பு அம்சங்கள் பருத்தி, சோயா, உளுந்து. தட்டைப்பயறு. கொண்டைக்கடலை மற்றும் மக்காச்சோளம் விதைக்க ஏற்றது. இதனை இயக்கத் தேவையான இழுவிசை 230 கலோ ஆகும் எனவே 35 குதிரைத் திறன் கொண்ட டிராக்டரால் எளிதாக இயக்க முடிசிறது. பயிர்களுக்கு தகுந்தவாறு இடைவெளி, ஆழம் மற்றும் வரிசைகளுக்கிடையே ஆன இடைவெளியை எளிதில் மாற்றம் செய்து கொள்ள முடியும். வழக்கமான முறையுடன் ஒப்பிடும் பொழுது. ஒரே நேரத்தில் நிலத்தில் வரப்பு சால்கள் அமைத்து விதை விதைப்பதால் முறையே 24, 90 மற்றும் 18 விழுக்காடுகள் செலவு. நேரம் மற்றும் சக்தி மீதமாகிறது.
|
சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள் |
|||
நுண்ணீர் பாசனம் |
|||||
உமி நீக்கும் கருவிகள்
|
|||||
| முதல்பக்கம் | நாட்டுப்புற கருவிகள் | இறக்குமதியான இயந்திரங்கள் | விலைப்பட்டியல் | கேள்வி பதில் | தொடர்பு கொள்ள | © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008 |
|||||