AMIS
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி home முதல் பக்கம்

சுங்க வரி

சுங்க கட்டண சட்டம், 1975ல் அட்டவணைகள் குறிப்பிட்ட விகத்த்தில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மற்றும் சில சமயங்களில் ஏற்றறுமதி பொருட்களின் மீதும் விதிக்கப்பட்டிருந்தது. வரி நிகழ்வு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிகப்பட்டிருந்து. பொதுவாக இறக்குமதி செய்வதற்கு பின்வரும் கடமைகள் செய்ய வேண்டும்.

  • அடிப்படை சுங்கவரி
  • இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அல்லது தயாரிக்கப்படும் சில பொருட்களுக்கு மத்திய அரசின் உற்பத்தி வரி அல்லது கூடுதல் சுங்க வரி விதிக்கப்படுகிறது.
  • எதிர்மறை சுங்கவரி
  • அபராதம் அடிப்படையில்@10%  சுங்கவரி
  • 4% @ சிறப்பு கூடுதல் வரி (அ) வரிவிதிப்பிற்குரிய மதிப்பு மதீப்பீடு (ஆ) அடிப்படை சுங்கவரி (இ) அபராத சுங்கவரி (ஈ) கூடுதல் சுங்கவரி
  • இறக்குமதி செய்யப்படும் ஒரு லிட்டர் பெட்ரோல் அல்லது அதி வேக டீசலுக்கு @ ரூ.1 கூடுதல் சுங்கவரி விதிக்கப்படும்.
  • குறிப்பிட்ட பொருட்களை விரோதமான குவித்தல் சுங்கவரி / பாதுகாப்பபு சுங்கவரி விதித்தல்

மதிப்பீடு

பெரும்பாலும் சுங்க வரி பொருளின் விலை மதிப்பீட்டின் படி விதிக்கப்படுகின்றது. வரிகள் மற்றும் வர்த்தகம் மீதான பொது ஒப்பந்தம் 1988ன் கீழ் சுங்க வரி பொருட்களின் மதிப்பீட்டின் பரிவர்த்தனை மதிப்பு அல்லது விலைப்பட்டியல் விலை அல்லது விலை பட்டியல் விலை ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் உண்மையான விலையாக இருக்க வேண்டும்
சுங்க அதிகாரிக்கு நியாயமான காரணத்திற்காக இறக்குமதி பொருளின் பரிமாற்ற மதிப்பு மற்றும் உண்மையான, துல்லியமான மதிப்பீட்டில் சந்தேகம் ஏற்பட்டால் (இறக்குமதியாளர் அதிகாரியின் வேண்டுகோளின் படி அவருக்கு தெளிவு ஏற்படுத்த வேண்டும்) அவர் இறக்குமதியாளரிடம் தகுந்த ஆதாரம் மற்றும் தகவல்களை அவர் கேட்கலாம் அவ்வாறு அவர் கேட்கும் போது இறக்குமதியாளர் தகுந்த ஆதாரங்களை தெரிவிப்பதில் தவறு ஏற்பட்டால் இறக்குமதி பரிமாற்றம் ரத்து செய்யபடலாம். அதன் பிறகு இறக்குமதியாளர் மதிப்பீட்டு விதிகளின் கீழ் வழக்கு விசாரணைக்கு ஏற்பாடு செய்யலாம்.

மதிப்பு நிர்ணயிக்கப்பட்ட தேதி

சுங்க வரி மதிப்பீட்டு நோக்கத்திற்காக மதிப்பு நிர்ணயம் தொடர்புடைய தேதி சுங்க வரி சட்டம், 1962 பிரிவு 14ன் கீழ், இறக்குமதி அல்லது ஏற்றுமதி தேதி மற்றும் வாங்குபவர் மற்றும் விற்பவர் இடையே ஒப்பந்தம் தேதி ஆகும். சமகாலத்தில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை, அதே தரம், விவரக்குறிப்பு மற்றும் அதே தயாரிப்பாளர் மற்றும் தயாரிப்பு நாட்டிலிருந்து அனுப்பப்படும் சரக்குகள் அளவு அதிகமாக அல்லது குறைவாக அதே அளவை சார்ந்தவையாக மட்டுமே மற்ற பொருள் விலை வணிக அளவில் (அதாவது வாங்குவோர் வகையில்) ஒப்பிட்டு நம்பகமானதாக இருந்தால் இறக்குமதி அனுமதிக்கப்படும். சமகாலத்தில் இறக்குமதி மதிப்புகள் பல அளவுகளில் மதிப்புகள் இருந்தால் குறைந்த மதிப்யையே ஏற்று கொள்வர். ஆனால் அறிவித்த விலை மிகவும் குறைந்த மற்றும் முற்றிலும் நம்பத்தகாத அளவில் இருந்தால், வணிக குறியிடப்பட்ட பொருட்களின் விலையின் அடிப்படையில் வணிக குறியீடு இல்லாத பொருட்களின் மதிப்பீடு அமையும் மேலும் ஒரு நாட்டின் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அல்லது ஒரு நாட்டில் தயாரிப்பு (அல்லது தயாரிப்பாளர்) பொருட்களின் எல்லோரும் அறிந்த விலையை அடிப்படையாக வைத்து விலை அறியப்படாத பொருள் அல்லது மற்ற நாட்டு பொருட்களின் விலையை மதிப்பிடு செய்ய முடியும். ஆழ்கடல விற்பனை விஷயத்தில், அது மதிப்பீடு செய்யும் அடிப்படையில் முகவர்களின் சேயையையும் உள்ளடக்கி மதிப்பீடு செய்யப்படுகிறது. வாங்கும் பொருள் விவரப்பட்டியல்/ விலைப்புள்ளியில் இதில் குறிப்பிட்டுள்ள பொருட்களின் விற்பனை விலை,  பொருளின் விலைக்கு ஒரு சான்றாக அமைகிறது.

பொருளை கடல் வழி இறக்குமதி என்று குறிப்பிட்டிருந்து, ஆனால் பொருளின் அவசர தேவைக்காக வான்வழி இறக்குமதி செய்திருந்தாலும் கடல் வழி சரக்கு கட்டணம் மட்டுமே சேர்க்க வேண்டும். காப்பீடு கட்டணம், சுங்கவரி கட்டணம் செலுத்தும் போது அதில் வரிவிதிப்பிற்குரிய இறக்குமதி காரணி எதுவும் சேர்ப்பதில்லை. இறக்குமதிக் கட்டணம் துறைமுக அதிகாரத்திற்குட்பட்டு சரக்கு காப்பீடு மற்றும் இறக்குமதிக் கட்டணத்தில் 1% மாறாத மதிப்பாக சேர்க்க வேண்டும். அல்லது உண்மையான விகிதத்தின் அடிப்படையில் விற்பனையாளர் அல்லது அவரது முகவர் காப்பீடு மற்றும் சரக்கு கட்டணத்தில் ஒரு பகுதியாக தாங்கள் ஏற்க வேண்டும்.


© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014