AMIS
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி home முதல் பக்கம்

இறக்குமதி செய்வதற்கான இறுதி விதிமுறைகள்

இறக்குமதியாளர் தனக்கு அனுப்பிய பொருளின் மாதிரி போன்றே இறக்குமதி பொருளும், தரமும் இருப்பதாக திருப்தியடைந்தால்தான் சரக்கு விற்பனையாளா் அல்லது ஏற்றுமதியாளர் இறக்குமதி ஒப்பந்தத்தை தொடர இயலும். இந்நிலையில் இறக்குமதியாளர் மிகவும் கவனமாக மற்றும் முழுமையான ஒப்பந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை வரைவு செய்ய வேண்டும். கொள்முதல் விதிமுறைகள் தொடர்புடைய  இறக்குமதி பொருட்களின் சரியான குறிப்பு, பொருளின் விலை, பணம் செலுத்தும் முறை, கப்பல் கொள்ளளவு, விநியோக அட்டவணை, குறைபாடு ஏற்பட்ட பொருளுக்கு மாற்று பொருள் வழங்கல், விற்பனைக்கு பின் சேவை/ ஈட்டுறுதி போன்றவற்றில் எந்த சந்தேகமும் இருக்க கூடாது.

இறக்குமதி ஒப்பந்தத்தில் பல்வேறு அம்ச நோக்கம் பட்டியலிடப்பட்டுள்ளது அவற்றுள் சில அதற்கு தொடர்புடைய மற்றும் தொடா்பற்ற குறிப்புகள் கீழே  கொடுக்கப்பட்டுள்ளன.

உற்பத்தி பொருள் விவரக் குறிப்பீடு

இறக்குமதியாளர் ஒவ்வொரு நிமிடமும் பொருளை பற்றிய விவரத்தை குறிப்பிட வேண்டும். சில நேரங்களில் இந்த காரணி ஒரு பொருளை சிறந்த முறையில் இறக்குமதி ஆர்டர் செய்ய முக்கியமானதாக இருக்கும்.

பொருளின் தரம்

இறக்குமதியாளர் இறக்குமதி செய்யப்படும் பொருளின் காலநிலை, பொருளின் ஐ.எஸ்.ஓ மற்றும் அக்மார்க் போன்ற சான்றிதழ் தரத்துடன் இருக்கிறது என்று சரிபார்த்து்க கொள்ள வேண்டும்.

அளவு

இறக்குமதி ஆர்டர் செய்வதற்கு முன், இறக்குமதியாளர் உள்நாட்டு சந்தையில் அப்பொருளின் மதிப்பீடு அறிந்திருக்க வேண்டும். இந்த மதிப்பீடு இறக்குமதியாளர் அப்பொருளை எந்த அளவு இறக்குமதி செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க உதவும்.

ஆய்வு

இறக்குமதியாளர் இறக்குமதி பொருளை பற்றி ஒரு தெளிவான ஆய்வை இறக்குமதி தரப்பில் அல்லது ஏற்றுமதி தரப்பில் அல்லது மூன்றாம் தரப்பான முகவர் நிறுவனம் மூலம் செய்ய வேண்டும். மூன்றாம் தரப்பு மூலம் செய்யப்பட்ட ஆய்விற்கான கட்டணத்தை யார் செய்வது என்று இறக்குமதியாளர் தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும்.

விநியோக விதிமுறைகள்

விநியோக விதிமுறைகள் விநியோகிக்கப்படும் பொருட்களுக்கான வாங்குபவர் மற்றும் விற்பனையாளர்களின் கடமைகள், பொறுப்புகளை வரையறுக்கின்றன. இறக்குமதியாளர் இறக்குமதி செய்யப்படும் பொருளின் அனைத்து இறக்குமதி விதிமுறைகளும் சரியாக உள்ளனவா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும் அது எதிர்காலத்தில் ஏற்படும் சந்தேகங்களை தடுக்க உதவும்.

கட்டணம் செலுத்தும் முறைகள்

இறக்குமதி ஒப்பந்தத்தில் ஒரு முக்கிய பகுதியாக கட்டணம் செலுத்தும் முறை உள்ளது. இறக்குமதி நிதி நிலையையும், முன்பு பணம் செலுத்தப்பட்ட முறைகள், பல்வேறு நாடுகளில் அந்நிய செலாவணி மற்றும் உரிமங்கள் தொடர்பான ஒழுங்குமுறை, அதே போல் வணிக நடைமுறைகள் அனைத்திற்கும் கட்டணம் செலுத்தும் முறை, தேர்வு செய்யும் முறை அளிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி உரிமம் மற்றும் இறக்குமதிக்கான அனுமதி: இறக்குமதியாளர் இறக்குமதி பொருளுக்கான இறக்குமதி காலநிலை, பொருள் இறக்குமதி செய்வதற்கான உரிமம் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இறக்குமதியாளர் இறக்குமதி செய்யப்படும் பொருளுக்கான வானிலை இறக்குமதி செய்வதற்கு தடை இருக்கிறதா, இல்லையா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

வரிகள் மற்றும் கட்டணம்

இறக்குமதியாளர் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது விதிக்கப்படும் அனைத்து வரிகள் மற்றும் கட்டணங்கள் பற்றி அறிந்திருக்க வேண்டும்.

விநியோகிப்பதற்கான காலஅளவு

இறக்குமதியாளர் பொருளை இறக்குமதி செய்யும் குறிப்பிட்ட தேதியை நிர்ணயிக்க வேண்டும். மேலும் அந்த தேதியில் ஏற்றுமதியாளர் பொருளை ஏற்றுமதி செய்ய ஒப்புக் கொள்ள வேண்டும்.                       

பெட்டிகளில் அடைத்தல், குறியிடுதல் மற்றும் சந்தையிடுதல்

முறையான பேக்கேஜிங் மற்றும் குறியிடுதல் மட்டும் பொருளுக்கான கவர்ச்சியான இறுதி வடிவத்தை கொடுக்கும். இறக்குமதியாளர் தனது முழு தேவையை விவரமாக மற்றும் பொருளுக்கான குறியிடுதலையும் தனது தேவையை தெரிவித்துவிட வேண்டும்.  

காப்பீடு

இறக்குமதியாளர் பொருளுக்கான காப்பீடு மற்றும் காப்பீடு தொகையயை    ஏற்றுமதியாளர் ஏற்க வேண்டி கேட்கலாம். காப்பீடு இறக்குமதியாளரும் செய்யலாம் ஆனால் அதை ஆவணத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

இறக்குமதி பொருளுக்கான கட்டணம் செலுத்தும் முறைகள்

  • முன்னுரை
  • அனுப்பீடு கொள்முதல்
  • முன் கூட்டியே பணம் செலுத்துதல் (முன்-பணம்)
  • உடனடி வழங்கும் தொகை
  • திறந்த கணக்கு
  • ஆவணப்பட தொகுப்புகள்
  • கடன் சான்று

முன்னுரை     

தனிப்பட்ட இறக்குமதியில் எந்த முன்வரையறையும் இல்லை.  பொதுவாக ஒரு வெளிநாட்டு அஞ்சல் ஆர்டர் மூலம், சில்லறை விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் அல்லது ஒரு தனிப்பட்ட உபயோகத்திற்காக கொள்முதல் செய்தல்.

பொதுவான இறக்குமதி விதிமுறைகள் பின்வருமாறு

  • அனுப்பீடு கொள்முதல்
  • முன் கூட்டியே பணம் செலுத்துதல் (முன்-பணம்)
  • ஆரம்ப தொகை
  • திறந்த கணக்கு
  • ஆவணப்பட தொகுப்புகள்
  • கடன் சான்று

அனுப்பீடு கொள்முதல்

அனுப்பீடு கொள்முதல் முறையில் இறக்குமதியாளருக்கு கட்டணம் செலுத்தும் முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த முறையில் இறக்குமதி பொருள் அல்லது பொருட்களுக்கான  கட்டணம் ஒரே ஒரு முறை மட்டுமே செலுத்தப்படுகிறது அல்லது இறக்குமதி செய்யப்பட்ட பொருள் இறுதி நுகர்வோரை சென்றடையும் வரை ஒரு கட்டணம் செலுத்தப்படுகிறது. இறக்குமதி பொருள் விற்பனை செய்யவில்லையென்றால் அந்த பொருளை வெளிநாட்டு வழங்குநரிடமே திருப்பி அனுப்ப வேண்டும். இந்த கொள்முதல் முறையில் ஏற்றுமதி செய்பவருக்கு அதிக ஆபத்து மற்றும் பணம் பெறுதற்கு அதிக காலம் ஆகிறது.

முன்கூட்டியே பணம் செலுத்துதல் (முன்-பணம்)

முன் கூட்டியே பணம் செலுத்துதல் என்பது முன்-பணம் செலுத்துவதாகும், இறக்குமதியாளர் பொருளை இறக்குமதி செய்வதற்கு மற்றும் பொருளை ஏற்றுமதியாளர் ஏற்றுமதி  செய்வதற்கு முன்னர் பொருளுக்கான பணத்தை செலுத்துவதாகும். இறக்குமதியாளர், ஏற்றுமதியாளர் சரியான நேரத்தில் பொருளை ஏற்றுமதி செய்வார் மற்றும் பொருளுக்கான விளம்பரத்தை செய்வார் என்று நம்ப வேண்டும். முன்-பணம் செலுத்தும் முறையில் இறக்குமதியாளருக்கு நிறைய இடர் காரணிகள் உள்ளது. வணிக வங்கியின் தலையீடு இல்லாமல்  நேரடியாக இறக்குமதியாளர் – ஏற்றுமதியாளர் இந்த முறையில் பணம் செலுத்தும் போது இது அதிக செலவற்றதாக இருக்கிறது.

ஒரு சர்வதேச வர்த்தகத்தில் முன் பணம் செலுத்தும் முறை என்பது ஒரு வழக்கமாக உன்ள நடவடிக்கையாக  இருக்கும்

  • இறக்குமதியாளர் கடன் நிலை சந்தேகம் அல்லது திருப்தியற்றதாக ஆகிறது.
  • இறக்குமதியளர் நாட்டில் அரசியல் இடர் மிக அதிகமாக இருக்கிறது.
  • பொருளுக்கான தேவை அதிகம் உள்ளபோது அதை விற்பதற்காக விற்பனையாளர் இறக்குமதியளரின் நிதி கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை

ஆரம்ப தொகை வழங்குதல்

ஆரம்ப தொகை வழங்குதல் முறையில் இறக்குமதியாளர் பொருளுக்கான முழுத் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஆரம்ப தொகையாக வழங்குதல் ஆகும். ஆரம்ப தொகை வழங்கும் முறையில் நன்மை, தீமை இரண்டும் உள்ளது. இதில் நன்மை முழு ஒப்பந்த விலையை இறக்குமதியாளர் அல்லது வாங்குபவரை செலுத்த தூண்டுகிறது ஆனால் ஏற்றுமதியாளர் அல்லது விற்பனையாளர் பொருளை ஏற்றுமதி செய்ய முடியாத சூழ்நிலையும், இறக்குமதியாளருக்கு பணத்தை திருப்பி செலுத்த முடியாமலும் போக வாய்ப்பு உண்டு.

திறந்த கணக்கு

திறந்த கணக்கில் இறக்குமதியாளர் பொருளை இறக்குமதி செய்யவும், ஏற்றுமதியாளர் எதிர்காலத்தில் குறிப்பிட்ட தேதியில் பணம் பெறவும் வழி செய்கிறது. இறக்குமதியாளர் எந்தவித சட்ட செலாவணிக் கருவியும் அத்தாட்சியாக காண்பிக்க வேண்டியதில்லை. இம்முறையில் பெரும்பாலும் இறக்குமதியாளர் /வாங்குபவர் கடன் நடவடிக்கை பற்றி அறிந்திருக்க வேண்டும். இம்முறையில் விற்பனையாளருக்கு பணம் பெறுவதற்கான எந்த பாதுகாப்பும் கிடைப்பதில்லை.
இம்முறையில் பல நன்மை மற்றும் தீமைகள் உள்ளன. இம்முறையின் கீழ் பொருட்கள் வழக்கமாக விற்பனையாளரிடமிருந்து வாங்குபவர்க்கு பணம் செலுத்துவதற்கு முன்னரே சென்றடையும். மேலும், பணம் செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட வாங்குபவர் மற்றும் விற்பவரிடையேயான ஆவணங்களை விரைவாக பரிமாறுவதில் ஏற்படும். இந்த முறையில் பணம் செலுத்தும் போது இறக்குமதியாளருக்கு குறைந்த கட்டுபாடுகள் மற்றும் குறைந்த செலவும், அதே சமயத்தில் விற்பனையாளருக்கு அதிக அளவிலான இடர்பாடுகள் பணம் பரிவர்த்தனையிலும், இறக்குமதியாளர் மற்றும் ஏற்றுமதியாளருக்கிடையேயான நீண்ட கால தொடர்பினால் இவர்களுக்கிடையேயான நம்பிக்கை அடிப்படையில் பணபரிவர்த்தனை ஏற்றுமதியாளருக்கு நம்பகமாக அமைகிறது.

ஆவணம் சார்ந்த தொகுப்பு:

வங்கி மூலம் பணம் செலுத்தும் முறைகளில் ஆவணத் தொகுப்பு ஒரு முக்கியமான செலுத்தும் முறையாகும், விற்பனை நடவடிக்கைக்கான பணம் செலுத்தும் முறைகள் வங்கி மூலமாக செலுத்தும் முறையாகும். இந்த செயல்பாட்டில் விற்பனையாளர் அவருடைய வங்கியை பொருளின் ஏற்றுமதி தொடர்பான ஆவணங்களை இறக்குமதியாளரின் வங்கிக்கு பணம் பெறும் பொருட்டு ஆவணத்தில் என்ன கட்டுபாடுகள் குறிக்கப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

இறக்குமதியளர் பொருட்களை பெற சுங்கம் மூலம் பெறும் போது,  வாங்குபவர் கப்பல் சரக்கிற்கான அசல் ஆவணங்கள் இருந்தால், தோற்ற சான்றிதழ் இருக்க வேண்டும்.

ஆவணங்கள் தொகுப்பால் குறைந்த செலவில் எளிதாக ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகளை செய்ய முடிகின்றது. ஆனால் கடன் சான்று போல் வங்கி உத்தரவாதம் இதற்கு இல்லை.

கடன் சான்று

சர்வதேச வர்த்தகத்தில் பணம் செலுத்தும் முறையில் கடன் சான்று முறை மிகவும் நன்கு அறியப்பட்ட ஒரு முறையாகும்.  கடன் சான்று அடிப்படையில் இறக்குமதியாளருடைய வங்கி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பணத்தை ஏற்றுமதியாளருக்கு தருவதற்கு உத்திரவாதமாகின்றது, ஏற்றுமதியாளர் அல்லது விற்பனையாளர் கடன் சான்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகளை இம்முறையில் கடைபிடிக்க வேண்டும். இம்முறையில் பணம் பரிவர்த்தனை செய்து முடிக்க உதவும் ஒரு இடைத்தரகராக பங்கு வகிக்கிறது. வங்கி ஒப்பந்தங்கள் ஆவணங்கள் குறித்து மட்டுமே பொருட்களை பற்றிய ஆய்வு செய்வதில்லை. கடன் சான்று ஒரே மாதிரியான சுங்கம் & கடன் ஆவண முறைக்காக வழங்கபடுகிறது(UCPDC)(UCP). கடன் சான்று தொகுப்பு விதிகளை சர்வதேச வணிகம் மற்றும் வர்த்தக கழகம் வழங்கியுள்ளது (CII)

Updated on Jan 2014


© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014