AMIS
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி home முதல் பக்கம்

இறக்குமதி செய்வதில் உள்ள இடர்பாடுகள்

இறக்குமதி இடர்பாடுகள்

பொருளை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யும் போது பல இடர்ளை சந்திக்க வேண்டும். அவற்றில் சில

  1. போக்குவரத்து இடர் – இந்த இடர்பாடு போக்குவரத்தின் போது பொருட்களுக்கு ஏற்படும் இழப்புடன் தொடர்புடையது.
  2. தரத்தில் இடர் – இந்த இடர் பொருளை இறுதியாக வடிவமைக்கும் போது தரத்தில் ஏற்படும் இடராகும்.
  3. விநியோகிக்கும் போது ஏற்படும் இடர் – இந்த இடர் பொருளை சரியான நேரத்தில்  
    விநியோகிக்க முடியாமல் ஏற்படும் இடர்.
  4. செலாவணி இடர் – இந்த இடரால் நாணயத்தின் மதிப்பில் மாற்றம் ஏற்படுகிறது

இந்த இடர்களை பற்றி கீழே விரிவாக தரப்பட்டுள்ளது

போக்குவரத்து இடர்

ஒரு சிறந்த போக்குவரத்து இடர் மேலாண்மை, இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகான பொருட்கள் காப்பீடு செய்ய வேண்டும். போக்குவரத்திற்கான பொருட்கள் கடல் அல்லது வான்வழி என்பதை பொறுத்து இறக்குமதி செய்பவர் காப்பீடு செய்ய வேண்டும். எந்த வகையான காப்பீடு என்பதை இரண்டு பேரும் விற்பனை ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. பெரும்பாலும்  இறக்குமதியாளர்கள் மொத்தமாக பில்லிங்கிற்காக தங்கள் சொந்த காப்பீட்டில் ‘பொதுவான காப்பீடு’ இதை ‘திறந்த கொள்கை’ என்ற காப்பீட்டை செய்து கொள்வர்.

தரத்தில் இடர்

இறக்குமதி இறுதி தயாரிப்புகள் மாதிரி போன்ற நல்ல தரமானது என்ற உறுதி சரியான தரத்தை தரத்தை இடர் பகுப்பாய்வு செய்வது முக்கியம். அவ்வப்போது, பொருட்களின் மாதிரிகள் போன்று பொருட்களின் தரம் இல்லாதிருப்பதால் அப்பொருட்கள் திருப்திகரமாக இருப்பதில்லை. எதிர்காலத்தில் இது போன்ற சூழ்நிலைகளை இறக்குமதியாளர் கையாள, இறக்குமதியாளர் முன்கூட்டியே  தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது போன்ற சூழ்நிலைகளை தவிர்க்க பொருட்கள் அனுப்புநரின் தரம் மற்றும் புகழ் பற்றி ஆராய்ந்து கொள்ள வேண்டும். இறுதியில் தயாரிப்பு பொருட்களை பெறுவதற்கு முன் இறக்குமதியாளர் சார்பாக அல்லது ஏற்றுமதியாளர் சார்பாக அல்லது ஒரு மூன்றாம் தரப்பு நிறுவனம் மூலம் பொருட்களை ஆய்வு செய்யலாம்.
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கான மாற்றுச் சீட்டை வழங்கியவுடன் அதற்கான தேதி நிறைவு பெறும் முன் இறக்குமதியாளர் பொருட்களை ஆய்வு செய்ய முடியும். பொருட்களின் விற்பனை ஒப்பந்தம் ஏற்புடையதாக இல்லை என்றால் இந்த கட்டண முறை, இறக்குமரியாளர் வழங்கிய மாற்றுச்சீட்டின் பணத்தை நிறுத்தி வைக்கலாம். இறக்குமதியாளர்கள் தேவை ஏற்படும் போது எந்த வகையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இறக்குமதியாளருடை முகவர் ஏற்றுமதியாளர் நாட்டில் இருப்பார் எனில் அவருடைய மேற்பார்வையில் ஏற்றுமதி பொருட்களை சரிபார்த்த பின் கப்பலில் ஏற்றுமதி செய்ய வேண்டும்.

விநியோகிப்பதில் இடர்
பொருட்களின் சந்தை இலக்கை அடைவதற்கு தகுந்த நேரத்தில் பொருட்களை இறக்குமதி செய்வது ஒரு முக்கிய காரணியாகும். உதாரணமாக ஒரு பொருளை கிறிஸ்மஸிற்காக ஆர்டர் செய்த பொருளை கிறிஸ்மஸ் முடிந்து பெற்றால் அதனால் பயனிருக்காது. பொருள்குறிப்பிட்ட தேதியில் வந்துசேரவில்லை என்றால் அதற்கான தொகை செலுத்த மறுக்கும் ஒரு குறிப்பை இறக்குமதியாளர்  இறக்குமதி ஒப்பந்தத்தில் எப்போதும் தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும். இறக்குமதியாளர் கடன் பத்திரம் மூலம் பொருளுக்கான தொகை செலுத்துவதாக இருந்தால் அதை செலுத்தும் வங்கி வழங்குதல் உத்தரவில் பொருளை கப்பலிட்ட சமீபத்திய தேதியை அறிவுறுத்த வேண்டும்.

பரிமாற்ற இடர்  
வணிக ஒப்பந்தம் செய்வதற்கு முன் இறக்குமதியாளர் இறக்குமதி பொருளுக்கான உள்நாட்டு நாணய மதிப்பை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார். ஒப்பந்தம் செய்யப்பட்ட காலம் மற்றும் பொருட்களுக்கான தொகை செலுத்தும் காலம் இவற்றிற்கிடையே ஒரு இடைவெளி எப்போதும் இருக்கும், இந்த நேரத்தில் பொருளுக்கான உள்நாட்டு மதிப்பை அறிந்து கொள்வதன் மூலம் ஏற்றுமதி பொருளுக்கான சரியான விலையை நிர்ணயிக்க முடியும்.

  • இந்திய ரூபாயில் இறக்குமதி செய்ய ஒப்பந்தம்
  • வங்கி மூலம் ஒரு அந்நிய செலவாணி ஒப்பந்தம்
  • சரக்கை முன் /பின் கப்பிலிடுவதற்கு பண பரிவர்த்தனைக்கு ஏற்றுமதி ரசீதை கொண்டு வெளிநாட்டு நாணய மதிப்பில் கடன் வழங்கப்படும்.

செய்யக்கூடியவை

  • வெளிப்படையான LC அல்லது வாடிக்கையாளர் இறக்குமதி அனுமதி எல்லை பெற்ற பின் இறக்குமதி பரிமாற்ற நடவடிக்கைள் அனைத்தும் வாடிக்கையாளருக்கு மட்டும் வெளிப்படையாக இருக்கும்.
  • எக்ஸிம் கொள்கையின் கீழ் குறிப்பிட்டிருந்தால் தடை செய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்யலாம்.
  • இறக்குமதி ஆவணங்களை பெறுநரிடம் அல்லது


© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014