AMIS
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிலைகள் home முதல் பக்கம்

உணவு செயல்முறை ஆணை குறியீடு

விரிவாக்கம் உணவு செயல்முறை ஆணை குறிப்பு agmark
சான்றளித்தல் நிறுவனம் உணவு பதப்படுத்துதல் அமைச்சகம் தொழிற்சாலைகள் (இந்தியா)
திறம்பட்ட மண்டலம்  இந்தியா
நடைமுறைபடுத்தப்பட்ட வருடம் 1955
பொருட்கள் வகை பதப்படுத்தப்பட்ட பழ பொருட்கள்
சட்ட நிலை கட்டளைச் சார்ந்த
கட்டளைச் சார்ந்த வருடம்  2006
   

உணவு செயல்முறை ஆணை குறியீடு 2006ம் ஆண்டில் உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தும் சட்டம் வழங்கப்பட்ட ஆணை உள்ளது. இது இந்தியாவில் விற்கப்படும் பாக்கெட்டு பழ பானங்கள், பழ – ஜாம், பழச்சாறு, ஊறுகாய், உலர்ந்த பழ பொருட்கள் விற்பனைக்கு சான்றளிக்கிறது. இந்த குறியீடினால் தயாரிக்கப்பட்ட  நுகர்வு பொருள் சுத்தமானது என்றும் ‘உணவு பாதுகாப்பு’ சூழலில் தயாரிக்கப்பட்டது என்றும் உறுதியளிக்கிறது.

பழ உற்பத்தி ஆணை மூலம் தரத்தை குறிக்க 1955 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி பின்னர் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் 2006 நடவடிக்கை பிறகு தான் கட்டாய நிலையை அடைந்தது. இந்தியாவில் பழம் பதப்படுத்தும் தொழில் தொடங்க இந்த உரிமம் பெற வேண்டும். இந்திய அரசின் உணவு பதப்படுத்துதல் அமைச்சகம் உணவு பதப்படுத்தும் நிறுவனத்தின்  தரத்தை மேம்படுத்துவதற்காக இந்த குறியீடு வழங்குகிறது.


© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014