சைவம் மற்றும் அசைவ குறியீடு
மண்டலம் |
இந்தியா |
சைவ குறியீடு |
அசைவ குறியீடு |
வருடம் |
2001 |
பொருள் |
பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் |
சட்ட நிலை |
கட்டளை சார்ந்த |
அதிகாரப்பூர்வமான வருடம் |
2001 |
இந்தியாவில் விற்கப்படும் பொட்டல உணவுப் பொருட்களுக்கு சைவ மற்றும் அசைவ உணவுகளை வேறுபடுத்திக்காட்ட பெயரிடப்பட்ட கட்டளைக் குறியீடு வேண்டும். இக்குறியீடு உணவு பாதுகாப்பு மற்றும் தரம் (சிப்பமிடுதல் மற்றும் அடையாளமிடல்) சட்டம் 2006 மற்றும் கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்ட பின்னர் (உணவு பாதுகாப்பு மற்றும் தரம், சிப்பமிடுதல் மற்றும் அடையாளமிடல்) திருத்தப்பட்ட சட்டம் 2011-ல் கொண்டுவரப்பட்டது. சட்டத்திற்குட்பட்டு சைவ உணவுகளுக்கு பச்சைநிற குறியீடும் மற்றும் அசைவ உணவுகளுக்கு பழுப்பு நிற குறியீடும் வழங்கப்படுகிறது.
சைவம் மற்றும் அசைவ குறியீடு
தற்போதைய திட்டத்தில் சைவ மற்றும் அசைவ உணவுகளை காட்டவே குறியீடுகள் உள்ளன. முட்டை மற்றும் பால் பொருட்களை வேறுபடுத்திக் காட்ட அத்தகைய குறியீடுகள் இல்லை. தற்பொழுது முட்டைப் பொருட்கள் அசைவமாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் பால் மற்றும் பால் பொருட்களுக்கு பச்சைக் நிறக் குறியீடு வழங்கப்படுகிறது. முட்டை பொருட்களுக்கு பழுப்பு நிறக் குறியீடு மற்றும் இறைச்சிக்கு சிவப்பு நிறக் குறியீடு என்ற தவறான கருத்து நிலவுகிறது. அங்கீகரிக்கப்பட்ட தரத்தில் இதுபோன்று இல்லை.
குறியீடு
சட்டம் இக்குறியீட்டைப் பற்றி தேவையான விவரங்களைக் குறிப்பிடுகிறது. சட்டத்தில் இக்குறியீட்டின் விவரக் குறிப்புகள் :
இக்குறியீடு பச்சை நிறத்தில் நிரப்பப்பட்ட வட்டம், அதன் விட்டம் கீழ் உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்ட அளவைவிட சிறியதாக இருக்கக் கூடாது. பச்சை வெளிக்கோடு கொண்ட சதுரம் கீழே கொடுக்கப்பட்டதைப் போல வட்டத்தின் விட்டத்தைவிட இரண்டு மடங்கு இருக்க வேண்டும்.
- உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் (சிப்பமிடுதல் மற்றும் பெயரிடுதல்) இந்திய கட்டுப்பாடுகள், 2011, விதி 4.
குறியீடு பச்சையோ அல்லது பழுப்போ அதை சுற்றி உள்ள சதுரம் அதே நிறத்தில் இருக்க வேண்டும். சட்டம் மற்றவைகளையும் குறிப்பிடுகிறது அதாவது வர்த்தகக் குறியீட்டின் அருகில் இருந்தால் எளிதில் கவனிக்க முடியும்.
|