குறைந்த பட்ச ஆதரவு விலை
அதிக உற்பத்தி ஆண்டுகளில் அதிக விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களை பாதுகாக்க அரசாங்கம் விலை நிர்ணயம் செய்கிறது. அதிக உற்பத்தி மற்றும் உபரி காரணமாக சந்தை விலை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் குறைவானால், அரசு முகமைகள் அனைத்து பண்டகங்களையும் விவசாயிகளிடமிருந்து அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச விலைக்கு கொள்முதல் செய்துகொள்ளும். பல்வேறு வேளாண் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அதாவது உணவு தானயங்கள், எண்ணெய்வித்துக்கள், நார்சத்து பயிர்கள், கரும்பு மற்றும் புகையிலை போன்ற பயிர்களுக்கு விதைப்புக் காலம் தொடங்கும் முன்பே இந்திய அரசு விலையை அறிவிக்கிறது.
கொள்முதல் விலை
வேளாண் செலவு மற்றும் விலைகள் ஆணையத்தின் பரிந்துரைப்படி இந்திய அரசு பயிரின் அறுவடை காலத்தில் கொள்முதல் விலையை அறிவிக்கிறது. உணவு தானியங்களை (கோதுமை, நெல் மற்றும் பருமணிகள்) தாங்கியிருப்புக்காக அல்லது பொது விநியோக முறை மூலம் விநியோகம் செய்ய அறிவிக்கப்பட்ட விலையில் அரசு கொள்முதல் செய்கிறது. அறிவிக்கப்பட்ட கொள்முதல் விலை சில சமயங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட அதிகமாக இருக்கும் ஆனால் நடைமுறையில் சந்தை விலையைவிட குறைவாகவே இருக்கும். கொள்முதல் விலை எப்பொழுதும் சந்தை விலையைவிட குறைவாக இருக்கும் அதனால் விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் தாங்களாக முன்வந்து தங்கள் பண்டகங்களை அரசாங்கத்திற்கு விற்கமாட்டார்கள். இந்த சூழ்நிலையில் அரசாங்கம் விவசாயிகள் மீது வரியை சுமத்தி உணவு தானியங்களை கொள்முதல் விலையில் கொள்முதல் செய்யும் அல்லது வர்த்தகர்கள் மூலம் அல்லது மற்ற முறையில் கொள்முதல் செய்யும்.
கொள்முதல் விலை விதைப்புப் பருவத்திற்கு முன்பே அறிவிக்கப்படுகிறது. அதன் விளைவாக, கொள்முதல் விலையையே ஆதார விலையாக மாறுகிறது. விற்பனைக்கு உள்ள அனைத்து உணவு தானியங்களும் கொள்முதல் செய்யப்படுகின்றன. கொள்முதல் விலையே குறைந்தபட்ச ஆதரவு விலையாக உள்ளது ஏனெனில் அரசாங்கம் உற்பத்தியாளர்களிடமிருந்து விற்பனைக்கு உள்ள உணவு தானியங்களை கொள்முதல் செய்கிறது.
ஆதாரம்:
தொகுத்து வழங்கியவர்,
Dr.T. அழகுமணி, Ph.D.,
பேராசிரியர்
சந்தை விரிவாக்க துறை
விரிவாக்கக் கல்வி இயக்ககம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயமுத்தூர்-641003
Updated on : Dec 2013 |