பறவை இனங்கள் :: கோழி வளர்ப்பு :: முட்டையிடும் கோழிகள் | முதல் பக்கம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||
முட்டையிடும் கோழிகள்
வீடு / கொட்டகை அமைப்பு 18 வார வயதில் சரியாக வளர்ச்சியடையாத பெட்டைக் குஞ்சுகளைப் பிரித்து நீக்கிவிடவேண்டும். கொட்டகைப்படுத்தும் சமயத்தில் சரியாகப் பிரித்து விடுதல் நல்லது. பிரிக்கப்பட்ட கோழிகளை தனி அமைப்பில் வளர்த்துப் பின் முட்டையிடும் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம் அல்லது அங்கேயே வளர்க்கலாம். சரியான அளவு இடவசதியுடன் அதிக இடம் வீணாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது முட்டையிடும் கோழி ஒன்றிற்கு 65 அடி இடம் அளிக்கப்படவேண்டும். முட்டையிடுவதற்கு 2 வாரம் முன்பு கூடுகள் அல்லது வலைப்பின்னல் அமைக்கப்படவேண்டும். அப்போது தான் கோழிகள் புதிய அமைப்பிற்கு பழகிக் கொள்ள ஏதுவாகும்.
தீவனத்தை நீளமான தீவனப் பெட்டியிலோ அல்லது தொங்கும் அமைப்புள்ள தீவனப்பெட்டிகள் அமைத்தோ கொடுக்கலாம். 50 செ.மீ விட்டமும் 20-25 கிலோ எடைக் கொள்ளளவுக் கொண்ட தொங்கும் வகையில் அமைந்த தீவனப்பெட்டி 100 குஞ்சுகளுக்கு போதுமானது. நீர்த் தொட்டியிலிருந்து 3 மீட்டர் தொலைவில் தீவனப்பெட்டிகள் இருக்குமாறு அமைக்கவும். தீவனத்தை அவ்வப்போது நன்கு கலக்கிவிடவேண்டும். நீரானது 2.5 செ.மீ குறைந்த இடைவெளியில் வைக்கப்படவேண்டும். வெப்பநிலை அளவு 27 டிகிரி செல்சியஸிற்கு மேல் செல்லும் போது நீர்த்தொட்டிகளை அதிகப்படுத்தவேண்டும். தீவனத் தொட்டிகளின் மேல் முனை (நுனி) யானது கோழிகளின் பின்பாத்தியை விட சற்று உயரே இருக்குமாறு அமைக்கவேண்டும். தொட்டியின் 3ல் ஒரு பங்கு மட்டுமே தீவனம் நிரப்பவேண்டும். கூண்டு முறைப் பராமரிப்பு
கூண்டானது தரையிலிருந்து 1 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கவேண்டும். எச்சங்களைச் சேகரிக்கக் கூண்டின் அளவிற்கேற்ப தரையில் 30 செ.மீ ஆழத்திற்கு குழி அமைத்தல் சிறந்தது. நீளமான, தொடர்ச்சியான தீவனத் தொட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. நீரானது நீளவாக்கில் அமைக்கப்பட்ட குழாய் மூலம் தொடர்ச்சியாக வழங்கப்படவேண்டும். தீவனத் தொட்டிக்கு மேலே கூண்டிற்கு வெளிப்புறப் பகுதியில் நீர்க்குழாய்கள் செல்லுமாறு வைத்தல் வேண்டும். ஆங்காங்கு கீழே வரும் குழாய்களில் துளையிட்டு அடைப்புடன் நீர்த் தேவையான அளவு சொட்டுசொட்டாக வரும்படி வைத்தல் வேண்டும். 3 மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்தல் வேண்டும். இனவிருத்திக் கோழிகள் பராமரிப்பு இக்கோழிகள் குஞ்சு பொரிக்கும் முட்டைகள் இடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. பெருவாரியான முட்டைகளில் இருந்து நல்லக் குஞ்சுகளைப் பெறவேண்டுமெனில் முறையான பராமரிப்பு அவசியம். இனச்சேர்க்கைக்கென தனியாக சேவல்கள் வளர்க்கப்படவேண்டும். இவ்வாறு இனச்சேர்க்கை சேவல்களை எடைக் குறைந்த இனங்களுக்கு சேவல்,பெட்டைக் கோழிகள் விகிதம் 1:10 என்றும் எடை மிகுந்த இனங்களுக்கு 1:8 என்றும் இருக்குமாறு 20வது வாரத்தில் விடவேண்டும். 24வது வாரத்திலிருந்து முட்டைகளை சேகரித்துக் கொள்ளலாம். புல்லோரம் கழிச்சல் நோய் மற்றும் மைக்கோபிளாஸ்மாசிஸ் போன்ற நோய்கள் தாக்காமல் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். கோழிகளின் ஆரோக்கியத்திற்கும், அதிகமாகக் பொரிக்கும் திறனுக்கும் நன்கு சுத்தமான உலர்ந்த கூளங்களைப் பயன்படுத்துதல் அவசியம். அடைக்காக்க வைக்கப்படும் முட்டைகள் புதிதாக இடப்பட்டவையாகவும், ஓடுகள் தரமாகவும் (கெட்டியாகவும்) இருக்கவேண்டும். 5 கோழிகளுக்கு ஒரு கூடு என்ற அளவில் கூடுகள் தேவைப்படும். இறைச்சிக் கோழிகளுக்கான உணவுக் கட்டுப்பாடு இறைச்சிக் கோழிகள் பொதுவாகவே விரைவில் வளரக் கூடியவையாக இருக்கும். உடல் வளர்ச்சியும் இனப்பெருக்கத் திறனும் ஒன்றுக்கொன்று எதிரெதிராக அமைந்திருக்கும். எனவே உடல் வளர்ச்சி அளவுக்கு மீறி மிகுந்துவிடாமல் சரியான அளவு உணவுக் கொடுக்கவேண்டும். உணவுக் கட்டுப்பாட்டின் நன்மைகள்
உணவுக் கட்டுப்பாட்டு முறைகள் இரண்டு முறைகள் உணவுக் கட்டுப்பாட்டில் பின்பற்றப்படுகின்றன.
(ஆதாரம்: கேரள வேளாண் பல்கலைக்கழகம்) பயனற்ற, உற்பத்தியற்ற கோழிகளை வருடம் ஒரு முறை நீக்குதல் சிறந்தது. உடல் கோளாறுகள், உடற்செயலை பாதிக்கும் அல்லது சரிப்படுத்த இயலாத நோய்கள் கொண்ட, முட்டை உற்பத்தி பாதிக்கப்பட்ட பறவைகளை நீக்கி விடுதல் வேண்டும். வெளிப்புறத் தோற்றக் குறைபாடுகள் சில சமயம் முட்டை உற்பத்தியைப் பாதிக்காது. இதைச் சோதிக்க முட்டையிடும் கொட்டகையில் வைத்துச் சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம். இவற்றைப் பார்த்து இரவில் நீக்கம் செய்வத தொந்தரவைக் குறைக்கும். வெளித்தோற்ற அமைப்பு உற்பத்தியை அதிகம் பாதிக்காது எனினும் கோழியின் ஆரோக்கியம் மற்றும் உடல்நலைக் குறித்துத்தெரிந்து கொள்ள இது உதவும் நல்ல முட்டை உற்பத்திச் செய்யும் கோழிக்கும் சாதாரண கோழிக்கும் உள்ள வேறுபாடு.
இறகு உதிர்தலின் அடிப்படையில் நீக்கம் செய்தல் இறகு உதிர்வது கோழி முட்டையிடுவதன் ஒரு அறிகுறி ஆகும். நல்ல முட்டை உற்பத்தியுள்ள கோழிகள் தாமதமாக இறகை உதிர்க்க ஆரம்பித்தாலும் விரைவில் உதிர்ந்து விடும். சில சமயம் இறகு உதிர்ந்து கொண்டிருக்கும் போதே முட்டையிட ஆரம்பித்து விடும். ஆனால் முட்டை இட இயலாத கோழிகள் முன்னதாகவே ஆரம்பித்து நீண்ட நாட்களுக்கு இறகை உதிர்த்துக் கொண்டே இருக்கும். ஆனால் முட்டை இடாது. இறக்கையில் இருந்து உதிர ஆரம்பிக்கும் கடினமான முதல் நிலை இறகுகளை எண்ணுவதன் மூலம் கோழியின் தன்மையை அறிந்து கொள்ள இயலும். முதலில் உள் இறகும் பின்பு மைய இறகு உதிர ஆரம்பிக்கும். புதிய முதல் நிலை இறகுகள் 6 வாரத்திலும் பின்பு வளர்ந்த இறகுகள் அடுத்த 2 வாரத்திலும் உதிரும். இறகு உதிரும் (சமயங்களில்) காலத்தில் 4 புதிய முதல் நிலை இறகுகளுடன் இருந்தால் கோழியானது இறகு உதிர்வதன் 12வத வாரத்தில் இருப்பதாகக் குறிக்கும். முட்டைப்பராமரிப்பு முட்டைகள் நல்லச் சுகாதாரமான சூழ்நிலையில் உற்பத்தி செய்யப்படவேண்டும். நல்லத் தரமான கரு முட்டைகள் சீக்கிரம் கெட்டுவிடும். முட்டைக்கூடுகளில் நல்ல சுத்தமான கூளங்களையே இட்டு வைக்கவேண்டும். கோழிக் கொட்டகையிலிருந்து குறைந்தது நாளொன்றுக்கு 3 முறையாவது இடப்பட்ட முட்டைகளை சேகரித்துக் குளிர்ந்த இடத்தில் பாதுகாக்கவேண்டும். சற்று வெப்பமான சூழ்நிலைகளில் 4 அல்லது 5 முறை முட்டைகளை சேகரிக்கவேண்டும்.
கோடை காலப்பராமரிப்பு முட்டையிடும் கோழிகள் 23.8 செல்சியலிருந்து 29.4 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே வெப்பநிலையை தாங்கக்கூடியது. முட்டையிடும் கொட்டகையின் வெப்பநிலை 32.3 டிகிரி செல்சியசுக்கு அதிகமாகும் போது கோழிகளின் உணவு உட்கொள்வது குறைந்து முட்டை உற்பத்திக் குறையும். 37.8 டிகிரி செல்சியசுக்கு மேல் போகும் போது இறப்பு வீதம் அதிகரிக்கும். மேலும் இடும் முட்டைகளின் தரமும் குறையும். எனவே கோடைக்காலங்களில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். அவையாவன.
(ஆதாரம்: www.vuatkerala.org) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15 |