இறைச்சிக் கோழி வளர்ப்பு
இறைச்சி / கறிக்கோழி
இறைச்சிக் கோழிகள் என்பவை இறைச்சித் தேவைக்காக (கறிக்காக) வளர்க்கப்படுபவை. 6லிருந்த 8 வாரங்கள் வயதுடைய இளம் ஆண் மற்றும் பெண் கோழிகள் இறைச்சிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
பண்ணை / கொட்டகை அமைப்பு
ஒரு குஞ்சுக்கு 930 செ.மீ 2 என்ற அளவில் நல்ல காற்றோட்டமான இடவசதி தேவை. பிற கொட்டகைப் பராமரிப்புகள் முட்டைக் கோழிகளைப் போலவே பின்பற்றப்படுகின்றன.
உணவூட்டம்
2 வாரம் வரையிலும் 5 செ.மீ அளவும் 3 வது வாரத்திலிருந்து 10 செ.மீ அளவும் ஒரு குஞ்சுக்குக் கொடுக்கவேண்டும். குஞ்சு வளர வளர தீவன அளவை அதிகப்படுத்திக் கொள்ளலாம். தீவனத்தொட்டியை பாதிக்கு மேல் நிரப்பக்கூடாது. குழாய் தீவன முறையாக இருப்பின் 100 குஞ்சுகளுக்கு 12 கிலோகிராம் தீவனத்தை 3 முறையாகப் பிரித்து அளிக்கவேண்டும்.
இறைச்சிக் கோழித் தீவனக்கலவை
சேர்க்கும் பொருட்கள்
|
சேர்க்கவேண்டிய அளவு |
ஆரம்பித்தல் (0-5 வாரங்களில்) |
முடிவில் (6-7 வாரங்களில்) |
மஞ்சள் சோளம் |
47.00 |
54.50 |
தீட்டப்பட்ட அரிசி |
8.00 |
10.00 |
சோயாபீன் துகள் |
17.50 |
14.00 |
கடலைப்புண்ணாக்கு |
15.00 |
11.00 |
உப்பின்றி உலர்த்தப்பட்ட மீன் |
10.00 |
8.00 |
தாதுக்களின் கலவை |
2.00 |
2.00 |
உப்பு |
0.50 |
0.50 |
மொத்தம் |
100.00 |
100.00 |
இது தவிர வெளியில் பரிந்துரைக்கப்பட்ட அளவில் கலந்து விற்கும் வணிக ரீதியான கலப்புத் தீவனங்களையும் அளிக்கலாம்.
நீர்
- 2x2 லிட்டர் கொள்ளளவுள்ள நீர்த்தொட்டியில் 2 வார வயதுடைய 100 குஞ்சுகளுக்கு வைக்கலாம்.
- 3 வார வயதுடைய குஞ்சுகளுக்கு 2 x5 லிட்டர் அளவு கொண்ட தொட்டிகளில் அளிக்கவேண்டும்.
- எப்போது புதிய, தூய தண்ணீரை வழங்கவேண்டும்.
- அடைகாக்கும் தருணங்களில் சரியான கவனிப்பும் நீர் ஆகாரமும் அவசியம். குஞ்சுகளின் இறப்பு எண்ணிக்கை 2 சதவிகிதத்திற்கு அதிகமாக இருந்தால் அடைகாப்புப் பராமரிப்புகள் முறையாக இருக்கின்றனவா என்றும், இறந்த குஞ்சுகளின் பிரேதப் பரிசோதனையின் முடிவுகளையும் வைத்து இறப்புக்கான காரணத்தைக் கண்டறிந்து சரிசெய்தல் வேண்டும்.
- அடைக்காப்பானில் வெப்பநிலைய வாரத்திற்கு 3 செல்சியஸ் என்ற அளவில் குறைத்துக் கொண்டே வரவேண்டும். அடைக்காப்பானை நீக்கும் போது குஞ்சுகளுக்கு 40 வாட்ஸ் ஒளி விளக்கு என்ற அளவில் வெளிச்சம் வழங்கப்படவேண்டும்.
- 100 கோழிகளுக்கு ஒரு நாளைக்குத் தேவையான உணவு மற்றும் நீரின் அளவை அறிந்து கொள்ள கீழ்க்கண்ட சூத்திரத்தின் மூலம் அறியலாம்.
- 100 கோழிகளுக்குத் தேவையான தீவனம் கிலோகிராமில் வயது நாட்களில் 14.4
- நீரின் அளவு லிட்டரில் (100 கோழிகளுக்கான) வயது நாட்களில் 12.0
- சாதாரண சூழ்நிலையில் மேற்கண்ட சூத்திரத்தின்படி கணக்கிட்டுக் கொள்ளலாம். பருவ நிலை (அ) தட்பவெப்ப நிலைகளைப் பொறுத்து 5-10 சதம் வரை வேறுபடலாம்.
இறைச்சிக் கோழிக்கான தடுப்பூசி அட்டவணை
வயது |
நோய் |
தடுப்பூசி மருந்து |
செலுத்தும் வழி |
0-5 நாட்கள் |
வெக்கை நோய் |
லசோட்டா (அ) எப் தடுப்பு மருந்து |
கண் / மூக்கு |
10-14 நாட்கள் |
குடல் அழற்சி நோய் (IBD) |
ஐபிடி (உயிர்) |
குடிதண்ணீர் |
24-28 நாட்கள் |
குடல் அழற்சி நோய் |
ஐபிடி (உயிர்) |
குடிதண்ணீர் |
குஞ்சு பொரிப்பதற்கான முட்டை உற்பத்தி
இதற்கென சேவல்கள் தனியே பராமரிக்கப்படவேண்டும். 100 பெட்டைக் குஞ்சுகளுக்கென 15 சேவல் குஞ்சுகள் வளர்க்கப்படவேண்டும். இந்த 15 குஞ்சுகளில் 10 வார வயதில் 12 சேவல் குஞ்சை மட்டும் தேர்ந்தெடுக்கவேண்டும். கலப்பிற்காக எடைக் குறைந்த இனமாக இருந்தால் 10-15 பெட்டைக் குஞ்சுகளுடன் ஒரு சேவலையும், எடை மிகுந்த இனமாக இருந்தால் 6-8 பெட்டைகளுக்கு ஒரு சேவலையும் விடலாம். கலப்பிற்கு விட்ட 2 வாரங்களுக்குப் பிறகு முட்டையை சேகரிக்கத் தொடங்கலாம்.
முட்டைகளை ஒரு நாளைக்கு 3 அல்லது 4 முறை சேகரிக்க வேண்டும். சேகரித்த முட்டைகளை 1016 டிகரி செல்சியஸ் வெப்பநிலையில் 70-80 சதம் ஈரப்பதமுள்ள இடத்தில் வைக்கவும். முட்டைகளின் எடை, நிறம், தன்மை, வடிவம் ஆகியவற்றைச் சரிபார்த்துப் பிரித்து வைக்கவும். சேமித்து வைக்கும் போதும், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாற்றும் போதும் கவனமாக அகண்ட பகுதியைத் தொட்டுக் கையாளுதல் வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை அடை காக்கவோ அல்லது முட்டை சந்தைக்கோ அனுப்பி விடலாம். 1 வார காலத்திற்கு மேல் சாதாரண சூழ்நிலையில் அடை காக்கும் காலம் 21 நாட்களாகும். குஞ்சு பொரிப்பதற்கான குறிப்பிட்ட, காற்றோட்டமும், மித வெப்பநிலையும் கொண்ட சூட்டில் நிலவவேண்டும்.
குஞ்சு பொரிக்கத் தகுந்த சூழ்நிலை
வெப்பநிலை |
1-18 நாட்கள்
19-21 நாட்கள் |
37.5-37.8 டிகிரி செ
36.9-37.5 டிகிரி செ |
ஈரப்பதம் |
60 சதவிகிதம் 18 நாட்கள் வரை |
70 சதவிகிதம் அதற்கு மேல் |
திருப்பி வைத்தல் |
18 நாட்கள் வரை ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கொரு முறை |
- |
காற்றோட்டம் |
1-18 நாட்கள்
19-21 நாட்கள் |
8 மாற்றம் / மணிக்கு
12 மாற்றம் / மணிக்கு |
(ஆதாரம்: கேரளா வேளாண் பல்கலைக்கழகம்)
ஒளியில் கருவளர்நிலைக் காணல்
அடைகாத்தலின் போது இரு முறை இவ்வாறு ஒளியில் வைத்தல் வேண்டும். முதல் முறை 7வது நாளிலும் இரண்டாவது முறை 18-19வது நாளிலும் ஒளி அளித்தல் அவசியம். இவ்வாறு 18 வது நாளில் ஒளியில் கருவளர்நிலைக் கண்டபின் குஞ்சு பொரிப்பகத்திற்கு மாற்றி விடலாம்.
நோயைக் கட்டுப்படுத்த வழிமுறைகள்
ஆயிரக்கணக்கில் கோழிகளை ஒரே இடத்தில் வளர்க்கும் போது நோய் எளிதில் பரவ வாய்ப்புள்ளது. எனவே ஒரு இலாபகரமான கோழிப்பண்ணைக்கு திட்டமிட்ட நோய்க் கட்டுப்பாடு முறை இன்றியமையாததாகிறது. அதற்கு கீழ்க்கண்ட வழிமுறைகள் உதவுகின்றன.
- ஒரு புதிய கோழிகளை கொட்டகையினுள் விடுவதற்கு இரு வாரங்களுக்கு முன்பே கொட்டகையை சுத்தம் செய்து வைக்கவேண்டும்.
- பழைய கோழியின் எச்சங்களை கூடிய சீக்கிரம் அகற்றிவிடவேண்டும். சுவர், மேல்கூரை போன்றவைகளையும் அவ்வப்போது சுத்தப்படுத்தவேண்டும்.
- ஒரு நல்லக் கிருமி நாசினிக் கொண்டு இவையனைத்தையும் சுத்தம் செய்தல் வேண்டும்.
- பயன்படுத்தும் அனைத்துக் கருவிகளையும் கிருமி நாசினிக் கொண்டு சுத்தம் செய்து உலர வைத்த பின்பே உபயோகிக்கவேண்டும்.
- ஒளி எதிரொளிப்பான் மற்றும் வளி உமிழும் விளக்குகளை அவ்வப்போது கண்காணித்துக் கொள்ளவேண்டும். பயனற்ற விளக்குகளை அகற்றி புதிய விளக்குகளைப் பொருத்தவேண்டும்.
- எலி, நாய், பூனை போன்ற விலங்குகளை பண்ணைக்கருகே அண்ட விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
- பார்வையாளர்களை அதிகம் உள்ளே வராமல் தடுப்பது நன்று.
- இறந்து போன கோழிகளை உடனே தொலைவில் கொண்டு சென்று புதைத்து விடுதல் வேண்டும்ட.
- 1 சதவிகிதம் அம்மோனியாக் கரைசல் கொண்டு நீர் மற்றும் தீவனத் தொட்டிகளைத் தினமும் சுத்தப்படுத்த வேண்டும்.
- உள்ளே செல்லும் பாதை அமைப்புகளை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கவேண்டும்.
- பண்ணையைச் சுற்றிலும் நல்ல சுகாதாரமான முறையைக் கடைபிடிக்கவேண்டும்.
- ஈரமானக் கூளங்களை உடனே நீக்கி புதிய கூளங்களை மாற்றவேண்டும்.
- ஒவ்வொரு நாளும் கோழிகள் ஆரோக்கியமாக இருக்கின்றனவா, இல்லை சோர்ந்து ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்படுகிறதா என்பதை தீவனமிடும்போதும் மற்றும் உள்ளே சென்று வரும் போதும் கவனிக்கவேண்டும்.
- நல்ல உற்பத்தி நேரத்திலும் மற்றும் இதர அட்டவணை நேரப்படியும் குடற்புழுநீக்க மருந்து அளிக்கவேண்டும்.
- ஏதேனும் நோய்பரவல் அல்லது தாக்கம் தெரிந்தால் உடனே தேவையான நடவடிக்கைகளை உடனே
பூஞ்சை நச்சு / காளான் நச்சு
கோழிக்குஞ்சுகளின் தீவனத்தில் இப்பூஞ்சை நச்சு இருந்தால் அது முட்டை உற்பத்தி மற்றும் கோழி வளர்ச்சியைப் பாதிக்கிறது. இது கோழியின் முட்டையிடும் திறன், கருவுறுதிறனைப் பாதிக்கிறது. கோழிகளை விட இப்பூஞ்சை நச்சு வாத்துக்களை அதிகம் பாதிக்கிறது.
எனவே தீவனங்களை இப்பூஞ்சை நச்சு தாக்காமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். ஈரப்பதம் 11 சதவிகிதம் மேல் இருந்தால் பூஞ்சை வளர்ந்து விடும். நன்கு தீவனங்களை உலர்த்துதல், காற்றுப் புகாத இடத்தில் வைத்தல், ஈரப்பதத்தைக் குறைத்தல் மூலம் தீவனத்தை பூஞ்சை பாதிப்பிலிருந்து பாதுகாக்கலாம். நச்சுக் கட்டுப்பாட்டு மருந்து அல்லது பூஞ்சைத் தடுப்பு மருந்துகளைத் தீவனத்தில் கலப்பதும் சிறந்தது.
கிருமிநாசினிகளும் பயன்பாடும்
1.லைசோல்
1-2 சதவிகிதம் கரைசலைப் பயன்படுத்தலாம். கோழிப்பண்ணையில் பயன்படுத்தும் அனைத்துக் கருவிகள், நடக்கும் பாதை போன்றவற்றைச் சுத்தம் செய்யச் சிறந்தது.
2.சுண்ணாம்புப் பொடி
சுவர்களைச் சுத்தம் செய்யப் பயன்படும் மலிவான கிருமிநாசினி 2-5 சதவிகிதம்
லாசோட்டா வெள்ளைக் கழிச்சல் (தேவைக் குறிப்புகள்) |
குடிநீரில் கலந்து |
20வது வாரம் |
லாசோட்டா (தேவை ஏற்படின்) |
குடிநீரில் கலந்து |
40வது வாரம் |
கரைசல் கொண்டு சுவர்களுக்கு வெள்ளையடித்தல் பல்வேறு வகை தொற்றுக் கிருமிகளை நீக்கக்கூடியது. தோலில் பட்டால் அரிப்பை ஏற்படுத்தும்.
3.சலவை சோடா
இது கோழிகள் இல்லாத வீட்டின் தரையை சுத்தப்படுத்தப் பயன்படுகிறது.
4.ஃபினால்
நச்சுத்தன்மை குறைவு ஆனால் விலை அதிகம் 2-4 சதவிகிதம் கரைசலைப் பயன்படுத்தி வீடுகளையும், கருவிகளையும் சுத்தப்படுத்தலாம்.
கோழிக்குஞ்சுகளுக்கான பொதுவான தடுப்பு மருந்துகள்
மருந்தின் பெயர் |
செலுத்தும் வழி |
கோழியின் வயது |
லாசோட்டா எஃப் வெள்ளைக் கழிச்சல் நோய்த் தடுப்பு மருந்து |
மூக்கு |
3-7 நாட்களில் |
கோழி வாத நோய் தடுப்பு மருந்து (குஞ்சு பொரிப்பகத்தில்) |
|
1 நாள் |
மூச்சுக் குழல் அழற்சி மருந்து (முதல் வேளை) |
கண்களில் |
2-3 வாரங்கள் |
லா சோட்டா வெள்ளைக் கழிச்சல் மருந்து |
குடிநீரில் கலந்து |
5-6 வாரங்கள் |
கோழி அம்மை
(முதல் வேளை) |
|
7-8 வாரங்கள் |
ஆர்2பி வெள்ளைக் கழிச்சல் |
|
9-10 வாரங்கள் |
ஆர்2பி வெள்ளைக் கழிச்சல் மூச்சுக் குழல் அழற்சி மருந்து |
கண்கள் / குடிநீரில் கலந்து |
16 வாரங்கள் |
கோழி அம்மை
(2வது தடவை) |
|
18வது வாரங்கள் |
கூடானது அறை போல இருட்டாகவும், நல்ல காற்றோட்டத்துடன் கட்டிடத்தின் ஏதேனும் ஒரு ஓரத்தில் அமைந்திருக்கவேண்டும். கூடுகள் மலிவான மரத்தாலான 30x30x40 செ.மீ அளவில் அமைந்திருக்கலாம். சுத்தமான 1 கூடு என்றவாறு அமைக்கலாம். சுத்தமான கூடுகளைப் பயன்படுத்தி அவற்றை அவ்வப்போது மாற்றவேண்டும். தேவைப்படின் கூளங்களை மாற்றிவிடவேண்டும்.
ஒளி
சரியான ஒளி அளவு முட்டையிடும் கோழிகளுக்கு மிகவும் அவசியம். வளரும் கோழிகளுக்கு இல்லாவிட்டாலும் முட்டையிடும் வளர்ந்த கோழிகளுக்கு 22வது வாரத்திலிருந்து வாரத்திற்கு 15 நிமிடங்கள் என்று மொத்தம் 16 மணி நேரம் (செயற்கை மற்றும் இயற்கை ஒளி) ஒளிக்காலம் அளிக்கப்படவேண்டும். 6 மாதத்தில் முட்டையிடும் கோழிக்கு 17 மணி நேரம் ஒளியானது நாளொன்றுக்குத் தேவைப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நாளொன்றுக்கு 17 மணி நேரம் ஒளி கோழிகளுக்குக் கட்டாயம் வழங்கப்படவேண்டும்.
தீவன மேலாண்மை
முட்டையிடும் கோழிகளுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த அரைக்கப்பட்ட தானியங்களை உணவாகக் கொடுக்கவேண்டும்.
முட்டையிடும் கோழிக்குஞ்சுகளுக்கான கலப்புத் தீவனம்
தீவனங்கள் |
அளவு (சதவிகிதம்) |
மஞ்சள் சோளம் |
47 |
சோயாபீன் துகள் |
12 |
எள்ளுப் புண்ணாக்கு |
4 |
கடலைப் புண்ணாக்கு |
6 |
|