பறவை இனங்கள் :: ஈமு :: கையாலும் முறைகள் |
|||||
செயற்கை முறை கருவூட்டல் |
|||||
பிடித்தலும் கையாலும் முறைகளும்
ஈமு கோழிகளைக் கீழ்க்கண்ட காரணங்களுக்காகப் பிடித்து வளர்க்கவேண்டும்.
போக்குவரத்து / எடுத்துச் செல்லுதல் ஈமு பறவைகளைப் பிடித்துக் கையாள்வதற்கு முறையான பயிற்சி தேவை. இல்லையெனில் பறவைக்கோ அல்லது கையாள்பவருக்கோ காயங்கள் ஏற்படும். முதல் இரண்டு மாத வயதுடைய 8 கிலோ எடைக் கொண்ட குஞ்சுகள் சிறியனவாக இருந்தாலும் அவற்றின் கால்கள் வலுவானவை. எனவே அதைப் பிடிப்பவர் காலில் பூட்ஸ், ஜீன்ஸ் போன்ற முறையான கவசங்களுடன் நெருங்குதல் வேண்டும். 7 மாதங்களில் இப்பறவை 2 மீ உயரமும் 18 கிலோ எடையும் கொண்டிருக்கும். எனவே இவ்வயதிலும் 45+ கிலோ எடைக் கொண்ட பறவைகளைக் கையாளும் போது மிகுந்த கவனம் தேவை.
ஈமுக்கள் கொட்டிலில் வளர்க்கப்படும்போது அதிக வெயிலினால் கன அழுத்தத்திற்கு உட்பட நேரிடலாம். எனவே முடிந்தவரை குளிர்ந்த இரவு நேரங்களிலேயே இவற்றைப் பிடிக்கவேண்டும். அடிக்கடி துரத்திப் பிடித்தல் கூடாது. சரியாகத் திட்டமிட்டுப் பிடிக்கவேண்டும். ஈமுக்கள் அமைதியற்றுக் காணப்பட்டால் சிறிது ஓய்வு கொடுத்துப் பின் மறுநாள் பிடித்தல் வேண்டும். ஈமு பறவைகளைப் பழக்கப்படுத்தி அவற்றுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும். இவற்றக்கு மனிதத் தொடர்புகள் குறைவு. எனவே அவற்றுடன் அதிக நேரம் செலவிட்டு முறையாகக் கையாண்டால் இவற்றை வளர்ப்பது மிகவும் எளிதே. பெரிய ஈமுக்களைப் பிடிக்கும் பொது அவற்றின் பின்னால் அல்லது பக்கங்களிலிருந்தே பிடிக்கவேண்டும். ஏனெனில் இப்பறவைகள் முன்பக்கம் நோக்கியே உதைக்கக் கூடியவை. மேலும் பிடிக்கும் போது இறக்கைகளை சேர்த்து நெருக்கமாக இறுக்கிப் பிடித்துக் கொள்ளுதல் வேண்டும். ஈமுவின் பின்னங்கால்களில் கூர்மையான அமைப்புகள் இருப்பதால் அவை காயமேற்படுத்தி விடாமல் கையாள்பவர் கவனமாக இருக்கவேண்டும். பிடித்திருக்கும்போது ஈமுக்கள் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ளப் போராடும் போது காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
முதலில் பிடிக்கும் போது ஈமு அதிகமாகத் துள்ளும். ஒரு நபர் அதைப் பிடித்தவுடன் மற்றொரு நபர் உடனே அதை வாங்கி கூண்டில் / அறையில் அடைத்து விடவேண்டும். பிடிபட்ட ஓரிரு நிமிடங்களில் ஈமு அடங்கிவிடவேண்டும். அது துள்ள ஆரம்பித்தால் பின்பு அதைப் பிடித்துக் கொண்டு இருப்பது கடினம். பிடித்தபின் பிடி தளர்ந்தாலோ, விலகிவிட்டாலோ, உடனே பறவையைக் கீழே விட்டு விட்டு ஓடிவிடவேண்டும். கைக்கடிகாரம் போன்ற பொருட்களை கழற்நி விடுதல் நலம். ஈமு பறவைகளை முறையாகக் கையாண்டால் நல்ல முறையில் வளர்க்கலாம்.
|
|||||
பால் கறக்கும் கருவி |
|||||
கால்நடை மருத்துவமனை |
|||||
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008 |