||| |  | |  | | ||

பறவை இனங்கள் :: ஈமு :: நோய் மேலாண்மை

gg gg
 

செயற்கை முறை கருவூட்டல்
பூச்சி மேலாண்மை
நோய்மேலாண்மை
காப்பீடு
திட்டங்கள்
விரிவாக்கச் சேவைகள்

நோய் மேலாண்மை

ஆஸ்பர்ஜில்லோசஸ்

அறிவியல் பெயர்     :   ஆஸ்பர்ஜில்லஸ் ஃபிளேவஸ்
இது பிறந்த குஞ்சுகள எளிதில் பாதிக்கும் ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தெரியாது. நோய் முற்றும் போது தான் குஞ்சுகள் சுறுசுறுப்பின்றி சோர்ந்து காணப்படும்.  பாதிக்கப்பட்ட குஞ்சுகள் மூச்சு விடுவதற்கு சிரமப்படும். நெஞ்சு அடைத்துக் கொள்வதால் வாய் வழியே மூச்சு விட ஆரம்பிக்கும். இதுவே நேர்ய முற்றிய நிலை. இதன் பின் குஞ்சு இறந்து விடும். இறந்த குஞ்சுகளை சோதனைச் சாவடிக்கு அனுப்பி இந்நோயை உறுதி செய்து கொள்ளலாம்.

தடுப்பு முறைகள்
இந்த நோய் வந்த பின்பு குணப்படுத்த இயலாது. ஆகையால் வருமுன் காப்பது சிறந்தது. அதற்கு 3 முக்கிய முறைகள் பின்பற்றப்படவேண்டும். அவை

பூஞ்சை / காளான் வளர்தளத்தை நீக்குதல்

ஈரமான, பூஞ்சை படர்ந்த வைக்கோல், கூளங்கள் மரத்துகள்கள் போன்ற பொருட்களை அடிக்கூளமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அதே போல் கெட்டுப் போன, தீவனங்களையோ அசுத்தமடைந்த நீரையோ பறவைகளுக்கு கொடுக்கக்கூடாது.

அடை காக்கும் இடத்தில் தூசுகளை நீக்குதல்
அடைகாக்கும் இடம் இளஞ்குஞ்சுகளின் கொட்டகைக்கு அருகில் இருப்பதால் அங்கு எந்தவிதத் தூசிகளுமின்றிப் பராமரித்தல் அவசியம்.கீழே கிடக்கும் கூளங்களை எடுப்பதாலோ, நீக்கும் போதோ நிறையத் தூசிகள் மேலெம்புகின்றன. எனவே கூளங்களை சற்று அழுத்திப் போடுதல் நல்லதாகும்.

நல்ல கூளங்களைப் பயன்படுத்துவதும் பலன் தரும். பைன் மரத்துகள் செதில்கள் போன்றவற்றைக் கூளமாக உபயோகிக்கலாம். மிகவும் தூளாக உள்ள கூளங்கள் எளிதில் தூசியாக மாறிவிடுவதால் பிரச்சனை ஏற்படுத்தும்.

சுகாதாரம்
அடைகாக்கும் போதிலிருந்தே முறையான சுகாதார நடவடிக்கைகள் எடுப்பதும் இந்நோய்ப் பரவரைத் தடுக்க உதவும்.முட்டைகள் சரியான தொற்று நீக்கிக் கொண்டு முட்டைகள் கழுவியோ, புகையூட்டியோ சுத்தப்படுத்தலாம். அதே போல் அடைகாப்பான் குஞ்சு பொரிப்பகம் போன்றவையும் சுத்தப்படுத்தப்படவேண்டும்.

குளுட்டரால்டிஹைடு, ஏன்டெக் விக்ரான் எஸ் மற்றும் ஏன்டெக் ஃபார்ம் ஃபுளூயிட் எஸ் போன்ற தொற்று நீக்கிகளைப் பயன்படுத்தி இனப்பெருக்கப் பருவத்திற்கு சற்ற முன்னரே கொட்டில்களையும் தூய்மை செய்து விடுதல் நல்லது.

நுண்ணுயிரி வெள்ளைக் கழிச்சல் (சால்மோனெல்லோசிஸ்)
இந்நோய் சால்மோனெல்லா என்னும் பாக்டீரிய வகையினால் பரவுகிறது.
அறிகுறிகள்

  • இந்த நோய் முதிர்ந்த பறவைகளிலும் ஏற்பட்டாலும் குஞ்சுகளைப் போல் இவற்றில் பாதிப்பு அதிகமில்லை. முட்டைகளையும் இந்நோய் தாக்குகிறது.
  • இந்நோயில் இறப்பு விகிதம் அதிகம். குஞ்சு பொரித்த 2-3 நாட்களில்  பாதிக்கப்பட்ட குஞ்சுகள் இறக்க ஆரம்பிக்கும். இது 3 வாரங்கள் வரை தொடரும். பாதிக்கப்பட்ட குஞ்சுகள் சோர்ந்து, தலையைத் தொங்கவிட்டபடி எங்கும் செல்லாமல் ஓரிடத்திலேயே நீண்ட நேரம் அமர்ந்திருக்கும். அவை தீவனம் உண்ணாது. ஆனால் நீர் அதிக அளவு அருந்தும். நீர்ம நிலையில் வயிற்றுப் போக்கு இருக்கும். கண் குருடாதல் / பாதிக்கப்படுதல், மூட்டில் பிரச்சனைகள், பக்கவாதம் போன்ற அறிகுறிகளும் காணப்படும். மேலும் பாராடைபாய்டு காய்ச்சல் ஏற்படுவதும் உண்டு.
  • இறந்த கோழிகளை சோதனைச் சாவடிக்கு அனுப்பி இந்த பாக்டீரிய நோய்த் தாக்கத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

சிகிச்சைகள்
எதிர்ப்பொருள் சிகிச்சை அளிக்கலாம். நைட்ரோ ஃபியூரான் மருந்துகள் அளிக்கப்படலாம். எனினும் அவை சிறிது நேரத்திற்கே ஆறுதல் தரும். சோதனைச் சாவடியிலிருந்து மாதிரிகளின் முடிவை வாங்கி கால்நடை மருத்துவர் உதவியுடன் தகுந்த மருந்தை அளிப்பதே சிறந்தது.
நோய் அதிகம் பரவும் வாய்ப்புள்ள இடங்களான தொற்று நீக்கி கொண்டு சுத்தப்படுத்துதல் வேண்டும்.

  • ஃபார்மால்டிஹைடு வாயுக்கொண்டு தினசரி சேகரிக்கும் முட்டைகளை புகையூட்டம் செய்யவேண்டும்.
  • கரைசல் கெர்ணடு கழுவுவதை விட புகையூட்டம் செய்வதே சிறந்தது. ஏனெனில் 43-49 டிகிரி  செ வெப்பநிலையில் ஒரு தொற்று நீக்கக் கரைசல் கொண்டு கழுவும் போது ஓடுகள் ஈரமாக்கப்படும். பின்பு உடனே சூடான காற்று கொண்டு முட்டையை உலர்த்த வேண்டும். முட்டை ஓட்டின் உட்சவ்வுகள் சுருங்குவதற்கு வாய்ப்புள்ளது.
  • கைகள் மூலமாகவும் பாக்டீரியாக்கள் எளிதில் பரவக்கூடும். எனவே முட்டைகளைக் கையாளும் போது கையுறை அணிந்து கொள்வது சிறந்தது.
  • பொரிப்பகத்தையும் விரிக்கான் எஸ் வாயு ஃபாாமால்டிஹைடு அல்லது ஆர்த்தோசான் குளூட்டரால்டிஹைடு போன்ற தொற்று நீக்கிகள் கொண்டு ஒவ்வொரு குழு குஞ்சு பொரிப்பு முடிந்தவுடன் பொரிக்காத முட்டைகளையும், ஓடுகளையும் அகற்றிவிட்டு சுத்தம் செய்தல் அவசியம்.
  • குஞ்சுகள் இறக்க ஆரம்பித்த உடனே சோதனைச் சாலைக்கு அனுப்பி நோயினை தெரிந்து கொண்டு அதற்கேற்ப மருந்து கொடுத்தல் அவசியம்.
  • எதிர்ப்புப் பொருள் அளிக்கும் சிகிச்சையைக் குஞ்சுகளுக்கு நோய்பரவுவதற்கு முன்பே செய்தல் நலம்.

(ஆதாரம்: http://www/dpi.gld.gov.au/cps/rde/dpi/hs.xsl/27_2716_ena_html.htm)

 
   

பால் கறக்கும் கருவி
முட்டை பொறிக்கும் கருவி
தீவனப்பயிர்களை
வெட்டும் இயந்திரம்

   
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
gg  

கால்நடை மருத்துவமனை
பால் உற்பத்தியாளர் சங்கம்
அறுவை கூடம்
சந்தைகள்
கால்நடை பராமரிப்பு நிறுவனம்

 
 

|| |  | |  | | ||

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008