நீர் & தீவன மேலாண்மை
தீவன ஊட்டம்
கோழித் தீவனத்தைப் போன்றே லியூசரின் போன்ற பண்ணையில் வளர்க்கப்பட்ட புற்களுடன் சேர்ந்த தனித்தீவனம் ஈமுக்கோழிகளுக்கு அவசியம்.
உணவு மற்றும் நீர் தேவை
தீவன ஊட்டம்
நீர் தேவை
10 பறவைகளுக்கு 1 நீர்த்தொட்டி மற்றும் 2 தீவனத்தொட்டி பயன்படுத்தப்படவேண்டும். குடிநீருக்கு 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரும்பு வாளிகள் உபயோகிக்கலாம். நீர் சுத்தமானதாகவும், பாக்டீரியாக்கள் அற்றதாக இருக்கவேண்டும். நீரை முன்பே அதன் தன்மையை சோதித்து பொட்டாசியம் பர்மாங்கனேட் போன்ற தீவன ஊக்கிகள் பயன்படுத்துதல் நன்று. நீரின் கலங்கல் தன்மையை நீக்க ஆலம் பயன்படுத்தலாம். ஒரு வளர்ந்த ஈமுவிற்கு 6-7 லிட்டர் தண்ணீர் நாளொன்றுக்குத் தேவைப்படுகிறது. நீர்த்தொட்டிகள் இரவிலும் கூட நீர்த் தேவைப்படும் அளவு தூய்மையாக இருக்குமாறு பராமரிக்கவேண்டும். தீவனமானது காலை 7.00 மணியிலிருந்து 11.30 மணி வரையிலும் பிற்பகல் 3லிருந்து மாலை 6.30 மயி வரையிலும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே கொடுத்தல் வேண்டும். காய்கள், இலை தழைகள் போன்றவற்றையும் நன்கு நறுக்கிக் கொடுக்கலாம்.
ஈமுக்கோழியின் வயது (மாதங்களில்) |
நாளொன்றுக்கு ஒரு பறவைக்கு தேவையான அளவு (கிராமில்) |
3 |
200 |
4 |
300 |
5 |
350 |
6 |
400 |
7 |
500 |
8 |
600 |
9 |
700 |
10 |
800 |
11 |
800 |
12 |
900 |
13 |
900 |
14 |
900 |
15 |
900 |
16 |
900 |
17 |
900 |
18 |
900 |
தீவனத்துடன் கொடுக்கும் உபபொருட்கள்
கால்சியம்
நீர்ம வடிவில் இருக்கும் கால்சியத்தைக் குடிதண்ணீரில் கலந்து கொடுத்தல் வேண்டும். கீழ்க்கண்ட மருந்துகள் சந்தையில் எளிதில் கிடைப்பவை. இப்பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை பறவையின் வயதிற்கேற்ற அளவில் அளிக்கலாம்.
வயது |
பறவை ஒன்றுக்குத் தேவையான அளவு (மி.லிட்டரில்) |
3-5 மாதங்கள் |
1.0 |
5-8 மாதங்கள் |
2.0 |
8 மாதங்களுக்கு மேல் |
3.0 |
வைட்டமின் ஏ, டி3
நீர்மநிலையில் கீழ்க்கண்ட விட்டமின்களை குடிநீரில் கலந்து கொடுக்கலாம். அளவுகள் வயதிற்கேற்ப அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
வயது |
நாளொன்றுக்கு ஒரு பறவைக்குத் தேவையான அளவு (மி.லி) |
3-9 மாதங்கள் |
0.5 |
9 மாதங்களுக்கு மேல் |
1.0 |
விட்டமின் பி காம்ப்ளக்ஸ்
குரோவிபிளக்ஸ் பி பிளக்ஸ் போன்ற விட்டமின் காம்பளக்ஸ்களை நீரில் கலந்து அளிக்கவேண்டும்.
வயது |
நாளொன்றுக்கு ஒரு பறவைக்குத் தேவையான அளவு (மி.லி) |
3-5 மாதங்கள் |
1.0 |
5-8 மாதங்கள் |
2.0 |
8 மாதங்களுக்கு மேல் |
3.0 |
ஈமு பறவைகளுக்கான உணவூட்ட அட்டவணை
ஊட்டச்சத்துக்கள் |
ஆரம்பத்தில் |
வளரும் பருவத்தில் |
இறுதியில் |
கிரகிக்கப்பட்ட ஆற்றல் / கிலோ கலோரி / கிகி |
2685 |
2640 |
2860 |
பண்படா புரதம் % |
22 |
20 |
17 |
மெத்தியோனைன் % |
0.48 |
0.44 |
0.38 |
லைசின் % |
1.10 |
0.94 |
0.78 |
பண்படா நார்ப்பொருள் |
6-8 |
6-8 |
6-7 |
கால்சியம் |
1.5 |
1.3 |
1.2 |
வளரும் ஈமுபறவைகளுக்கான ஊட்டச்சத்துத் தேவைகள்
ஈமுக்களின் உடற்கூறு அறிவயில்படி அதன் செரிமான மண்டலம் செரிக்கம் வயிறு, துவக்க உணவுக்குழாய், கடுந்தசை இரைப்பு, சிறகுடல், (நடுச்சிறுகுடல், டியோடினம், கடைச்சிறுகுடல்) எச்சத்துளை, பெருங்குடல், மலக்குடல் ஆகியப் பகுதிகளைக் கொண்டது. எனவே இவை தீனி சேகரிப்புப் பையைத் தவிர பிற மற்ற செரிமான அமைப்புகள் கோழியைப் போன்றே உள்ளன. ஈமுக்களில் செரிமான வயிறெ சில சமயங்களில் உணவுச் சேகரிக்கும் பையாக வேலை செய்கிறது. வளர்க்கப்படும் ஈமு பறவையின் உடல்
எடையில் 10ல் ஒரு பங்கு நீளம் அதன் செரிமானக் குழாய் பெற்றுள்ளது.
பறவை உட்கொண்ட தீவனத்தைப் பொறுத்து அது செரிமானப் பாதையைக் கடக்கும் நேரம் வேறுபடுகிறது. தாவரப் பொருட்கள் 5-6 மணி நேரமும், கோதுமைத் தானியங்களாக இருந்தால் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களாகலாம். கண்ணாடிக் கூழாங்கற்கள் 100 நாட்கள் வரை அதன் செரிமானக் குழாயில் தங்கியிருப்பதாக அறியப்பட்டுள்ளது. சரியாக அரைக்கப்படாத தானியங்கள் இரைப்பையில் சேகரிக்கப்பட்டு, தீவனங்கள் கிடைக்காத சமயத்தில் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன.
ஊட்டச்சத்துக்களின் தேவை
ஈமு கோழியின் வளர்ச்சி, இனப்பெருக்கம் மற்றும் உற்பத்தி அதிகரிக்க முறையான ஊட்டச்சத்து பராமரிப்பு அவசியம். மற்ற பறவைகளைப் போன்றே ஊட்டச்சத்துக்கள் ஈமுவுக்கும் தேவைப்பட்டாலும் சில அத்திாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாகத் தேவைப்படுகின்றன.
ஆற்றல்
கார்போஹைட்ரேட மற்றும் கொழுப்புச் சத்து அதிகம் கொண்ட சோயாபீன் தூள், பயறு வகைத் தானியங்களை அளித்தல்வேண்டும்.
புரதம்
உணவில் உள்ள புரதமானது குடல் பகுதிகளில் உடைக்கப்பட்டு அமினோஅமிலமாக மாற்றப்படுகிறது. இந்த அமினோ அமிலம் உட்கிரகிக்கப்பட்டு தசையாக மாற்றப்படுகிறது. எனவே ஈமு வளர்ச்சியில் அமினோ அமிலங்கள் முக்கியப் பங்கு வகிக்கிறது. மொத்தமுள்ள 20 அமினோ அமிலங்களில் 9 மட்டுமே ஈமுவால் உற்பத்தி செய்து கொள்ள முடியும். எனவே மீதம் 11 அமினோ அமிலங்கள் கண்டிப்பாக தீவனம் மூலமாக அளிக்கப்படவேண்டும். மேலும் மெத்தியோனைன், லைசின், தியோனைன், டிரைப்டோபன் போன்றவையும் சிறிதளவ கிடைக்கச் செய்யவேண்டும்.
விட்டமின்கள்
இவை புரதம், கார்போஹைட்ரேட் போன்று முக்கியமான ஊட்டச்சத்துக்கள் இல்லை எனினும் பறவைகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் மிக முக்கியம். சில விட்டமின்கள் தன் மலம் உண்ணுதல் மூலமும் வேறு சில சிறுகுடல் நுண்ணுயிரிகளாலும் கிடைத்தாலும் சில விட்டமின்கள் உணவின் மூலம் அளிக்கப்படவேண்டும்.
தாதுக்கள்
இவை சாதாரணமாக உடல் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை, கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, சோடியம் மற்றும் குளோரைடு மற்றும் நுண் தாதுக்களான பொட்டாசியம், இரும்பு, தாமிரம், துத்தநாகம், செலினியம் போன்றவையும் உணவின் மூலம் வழங்கப்படவேண்டும்.
நார்ப்பொருள்
ஈமுக்கள் தங்களது உடலில் 20 சதவிகிதம் மட்டுமே நார்ச்சத்தைக் கொண்டுள்ளது. இது அதன் ஆற்றல் தேவையில் 11 சதம் மட்டுமே வழங்க முடியம். நார்ப்பொருட்களை அதிகம் செரிக்க முடியாமையே இதற்குக் காரணம். காட்டில் வளரும் ஈமுக்கள் பெரிய பூச்சிகள், சிறு முதுகெலும்பிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் கொண்ட தாவரப் பாகங்களான பூக்கள், வளரும் இளம் தளிர்கள், பழங்கள் மற்றும் விதைகளை உண்ணும். வேகமாக வளரும் இளம் ஈமுக்களுக்கு குறைந்த நார்சத்துள்ள தீனியை அளித்தல் வேண்டும். சில நார்ப்பொருட்கள் குடலின் செயலைத் தூண்டிவிட்டாலும் நார்ச்சத்துக்களின் தேவை ஈமுக்களில் குறைவே.
ஊட்டச்சத்துக்களின் ஊட்டம்
ஈமுக்களின் ஊட்டச்சத்து ஊட்டம் தீனியல் கலந்துள்ள கலவைப் பொருட்களைப் பொறுத்து வேறுபடுகிறது. அதாவது எடுத்துக் கொள்ளும் பொருளில் உள்ள சத்துக்கள் மற்றும் பறவை உட்கொள்ளம் அளவைப் பொறுத்தது. தீவனமானது ஒதே தீனியைக் கொண்டிராமல் பல கலவையாக இருப்பது சிறந்தது. இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகளுக்கு நார்ப்பொருள் குறைந்த அதிக கலவைகளற்ற உணவை அளிப்பதே சிறந்தது.
ஈமுவில் நடத்தப்பட்ட ஒரு சோதனையில் 3 நிலை உணவூட்டம் சிறந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது நிலை I குஞ்சு பொரித்ததில் இருந்து 10 கிலோ உடல் எடை அடையும் வரை உள்ள ஆரம்ப நிலையாகும் (14 வார வயது) 10 கிலோவிலிருந்து 25 கிலோ வரை உடல் எடை அடையும் இரண்டாம் நிலை வளாச்சி நிலை ஆகும் (34 வார வயது) 25 கிலோவிலிருந்து இறைச்சிக்காக வெட்டப்படும் வரை வளர்க்கும் நிலை முடிவு நிலை எனப்படுகிறது. இவ்வாறு பிரிக்கப்படுவதற்குக் காரணம் அதன் உற்பத்தி அதிகரிக்க ஒரு குறிப்பிட்ட வயதில் தீவனமானது மாற்றப்படவேண்டும். எனினும் இதற்கு சரியான ஊட்டச்சத்துக்களின் தேவைப் பற்றி அறிந்திருக்கவேண்டும்.
அட்டவணை 1
லெசின், மெத்தியோனைன் ஃசிஸ்டைன் மற்றும் வெவ்வேறு நிலைகளில் ஈமுவுக்குத் தேவையான ஆற்றல்.
தேவையான சத்துக்கள் |
ஆரம்பத்தில் |
வளரும் பருவம் |
முடிவில் |
கிரகிக்கக் கூடிய ஆற்றல் எம்இ / கி. ஜீல் / கி.கி |
11.2 |
10.2 |
10.2 |
லைசின் (%) |
0.9 |
0.8 |
0.7 |
மெத்தியோனைன் + (%) சிஸ்டைன் |
0.7 |
0.7 |
0.6 |
கால்சியம் (%) |
1.6 |
1.6 |
1.6 |
கிடைக்கக்கூடிய பாஸ்பரஸ் (%) |
0.6 |
0.6 |
0.6 |
சோடியம் (%) |
0.2 |
0.2 |
0.2 |
அட்டவணை 2
வளரும் ஈமுக்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களின் தேவை.
தேவையான ஊட்டச்
சத்துக்கள் |
ஆரம்பத்தில் |
வளரும் போது |
இறுதியில் |
கிரகிக்கக் கூடிய ஆற்றல் (மெகா. ஜீல் / கி.கி) |
11.2 |
11.0 |
11.0 |
லைசின் (கிராம் / மெகா ஜீல் ) |
0.80 |
0.75 |
0.70 |
மெத்தியோனைன் |
0.50 |
0.50 |
0.50 |
மெத்தியோனைன் + சிஸ்டைன் |
0.80 |
0.80 |
0.80 |
டிரைப்டோபன் |
0.19 |
0.19 |
0.19 |
ஐசோலியூசின் |
0.65 |
0.65 |
0.65 |
திரியோனைன் |
0.60 |
0.60 |
0.60 |
கால்சியம் (%) |
1.6 |
1.6 |
1.6 |
கிடைக்கக்கூடிய பாஸ்பரஸ் (%) |
0.6 |
0.6 |
0.6 |
சோடியம் (%) |
0.2 |
0.2 |
0.2 |
ஈமுக்களுக்கு பொதுவாகவே அதிக அளவு ஆற்றல் தேவைப்படும். ஆதலால் ஆற்றல் அதிகம் கொண்ட அதே சமயம் விலைக் குறைந்த தீவனங்களை பயன்படுத்தவேண்டும். இவ்வாறு செய்வதனால் மட்டுமே உற்பத்திச் செலவைக் குறைக்க முடியும். தீவனத்தில் தேவையான அமினோ அமிலங்கள் அனைத்தும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 11.2 மெகா ஜீல் / கிகி அளவு கிரகிக்கக்கூடிய ஆற்றல் கொண்ட தீவனங்கள் அளிப்பதே சிறந்தது.
காலில் ஏற்படும் கோளாறுகள்
ஈமுக் கோழிகளில் அவற்றின் காலில் ஏற்படும் கோளாறுகள் ஒரு பிரச்சினை ஆகும். இது கால்சியம் / பாஸ்பரஸ் சீரற்ற நிலையில் இருப்பதாலோ, மெத்தியோனைன் பற்றாக் குறையினாலோ ஏற்படும். தாய்வழி ஊட்டச்சத்து மூலமாகக் கூட ஏற்படலாம். ஓ மெல்லி என்பவர் கலவைத் தீவனத்தை இரு வேளையாகப் பிரித்து மொத்தம் 4 மணி நேரத்தில் கொடுக்கும் போது இவ்வகைப் பிரச்சனைகளைக் குறைக்க முடியும் என்று கூறியுள்ளனர். பல ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே இருப்பினும் இந்நோயைத் தடுக்க சிறந்த முறைகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
கலவைப் பொருட்கள் (%) |
ஆரம்பம் |
வளரும் போது |
இறுதியில் |
வெள்ளைச் சோளம் |
34.7 |
30.9 |
31.6 |
கோதுமை |
36.0 |
30.0 |
30.0 |
இறைச்சி மற்றும் எலும்புத் துகள் (55%) |
10.3 |
10.0 |
10.1 |
சோயாபீன் தூள் (45%) |
3.2 |
- |
- |
சூரியகாந்தித் தூள் (32 %) |
9.9 |
8.6 |
6.7 |
பருத்தி விதைகள் |
2.9 |
- |
- |
மில்ரன் |
- |
15.0 |
15.0 |
லியூசர்ன் தூள் |
- |
2.9 |
1.1 |
சுண்ணாம்புக்கல் |
1.8 |
1.5 |
1.5 |
உப்பு |
0.28 |
0.21 |
0.20 |
டிஎல் மெத்தியோனைன் |
0.23 |
0.19 |
0.17 |
எல் லைசின் ஹெச்சிஎல் |
0.23 |
0.17 |
0.11 |
விட்டமின் மற்றும் தாதுக் கலவை |
0.50 |
0.50 |
0.50 |
(ஆதாரம் http://www.dpi_qld.gov.au/cps/dpi/hs.sl/27_2721_ena_html.htm) |