வெற்றிகரமான தோட்டக்கலை ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டம்
பின்னணி:
திரு.K.நடராஜ், த/பெ.கைலாச கவுண்டர், திம்மநாயக்கன்பட்டி, நாமக்கல் மாவட்டம். இவருக்கு சொந்தமாக 6.25 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி செய்து வருகிறார்.
குறுக்கீடுகள்:
வீரிய ஒட்டு ரகத்தக்காளி சாகுபடி, அறிவியல் முறையில் மரவள்ளி மற்றும் வெங்காய உற்பத்தி, பன்றி வளர்ப்பு மற்றும் பண்ணைக்கழிவுகளில் இருந்து மண்புழு வளர்ப்பு.
செயல்முறைகள்:
அருகில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தை அணுகி தோட்டக்கலை மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டார். ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றி அறிந்து கொண்டு அவருடைய பண்ணையில் இதை வெற்றிகரமாக செய்து வருகிறார்.
ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டத்தில் கீழ்க்கண்ட காரணிகள் உள்ளன.
தொழில்நுட்பம்:
வ.எண். |
பண்ணை விவரங்கள் |
அளக்கப்பட்ட மொத்த பரப்பளவு |
1. |
மரவள்ளி சாகுபடி |
2 ஏக்கர் |
2. |
வீரிய ஒட்டு ரகத் தக்காளி சாகுபடி |
0.5 ஏக்கர் |
3. |
தக்காளி சாகுபடி |
0.5ஏக்கர் |
4. |
பருத்தி விதை உற்பத்தி கூடம் |
2ஏக்கர் |
5. |
தென்னந்தோப்பு |
1 |
6. |
பன்றி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, பிராய்லர் கோழி வளர்ப்பு |
0.25 ஏக்கர் |
மொத்த பரப்பளவு |
6.25ஏக்கர் |
தாக்கம்:
பண்ணை விவரம் |
இரகங்கள் |
பொருட்கள் விற்பனை |
மொத்த செலவு(ரூ) |
இலாபம்(ரூ) |
பன்றிகள்(3) |
வெள்ளை யார்க்ஷயா |
6 மாத வயதுள்ள பன்றிக்குட்டிகள்(20 பன்றிக்குட்டிகள் / 6 மாதங்கள்@ ரூ.1500/ பன்றிக்குட்டி) |
40,000 |
60,000 |
ஆடுகள் (5 எண்ணிக்கை) |
தெளிச்சேரி |
குட்டிகள்(ரூ.1500/ குட்டி) |
5000 |
10,000 |
பருத்தி விதை உற்பத்தி |
போல்கார்டு |
விதை + பருத்தி(ரூ.15,000/ வெண்பால்) |
55,000 |
80,000 |
வெங்காயம் |
கோ 4 |
வெங்காய குமிழ்(3 டன்) |
15,000 |
35,000 |
மரவள்ளி |
வெள்ளை ரோஸ் |
கிழங்கு(31.5 டன்) |
25,000 |
45,000 |
தக்காளி |
லஷ்மி |
தக்காளி/ 14 டன் |
13,000 |
42,000 |
பிராய்லர் பறவைகள் (1000) மண்புழு உரம் தென்னை மரங்கள் |
வம்பன் டால் |
தென்னை (ரூ.3/ தென்னை மற்றும் ஏனைய பொருட்கள்) |
5,000 |
20,000 |
மொத்தம் |
1,58,000 |
2,92,000 |
ஒருங்கிணைந்த பண்ணையம் குடும்ப வருமானத்திற்கு ஒரு உதவியாக விளங்குகிறது. குடும்ப உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரித்துத் தருகிறது.
கிடைமட்டப்பரவல்:
இந்த தொழில்நுட்பத்தின் விளைவை கண்கூடாகக் கண்டுகளித்த உள்ளூர் விவசாய பெருமக்கள், வேளாண் அறிவியல் நிலையத்தை பயிற்சிக்காக அணுகினர். விவசாயிகள் படிப்படியாக, மேம்படுத்தப்பட்ட செயல்முறைகளை பின்பற்றத் தொடங்கினர்.
|