பயிர் பாதுகாப்பு :: வாழைப் பயிரைத் தாக்கும் நோய்கள்

குருத்து சுருட்டு அழுகல் நோய்: வெர்ட்டிசிலியம் தியோப்ரோமா

தாக்குதலின் அறிகுறிகள்:
  • கிருமியானது முதிர்ச்சியடையாத பழங்களை கூட பாதிக்கிறது. மஞ்சரிக்காம்பின் மேல்பகுதியானது சூரியனின் வெப்பத்தினால் வெளிவருகிறது,இந்த தாக்குதலின்  இலைகளின் குறைந்த செயல்பாட்டு காரணமாக கொத்தின் தோற்றம் குறந்த அளவே கோடை மாதங்களில் ஏற்படுகிறது.
  • இவற்றால் ஏற்ப்படும் தொற்றானது இலைகளில் சுருக்கம் மற்றும் இதன்  காரணமாக இலைகளின் மடிப்புகளிலும் பரவுகிறது.
  • பாதிக்கப்பட்ட திசுக்களில் சாம்பல் நிறத்திலும் இவை கன்றில் நுண் துகள்களாக சாம்பல் பூசண இழைகளால் மூடப்பட்டும் இருக்கும்.
  • காய்ந்த பகுதிகளிலும்ஏற்படுகிறது மற்றும் பாதிக்கப்பட்ட திசுக்கள் உலர்ந்து இழை போன்று ஆகிவிடும்.
  • சூடான மற்றும் ஈரமான நிலையானது நோய்த் தாக்கத்திற்கு ஏற்றது மற்றும் நோயானது பழைய மற்றும் மோசமாகபராமரிக்கப்படும் தோட்டங்களில் அதிகமாக பரவுகிரது.
     
  பழம் முனையில் பிளாக்நசிவு   தோல்கருப்பாதல்    சாம்பல் இருத்தல்
நோய்க்காரணி:
  • கோனிடியாஸ்போர்கள் தனித்து அல்லது சிறுகுழுக்களாக காணப்படும்.
  • கோனிடியாக்களானது நீள்சதுர, உருளை வடிவமுடையது.  இவை சுற்றிவளைக்கப்பட்ட முனைகளில், வழவழப்பான   தலைகள் கொண்டு இருக்கும்.
   
  வெர்ட்டிசிலியம் தியோப்ரோமா   கோனிடியாஸ்போரே
கட்டுப்படுத்தும் முறை:
உழவியல் முறை:
  • இளம்குலைகளை சூரிய வெளிச்சம் மற்றும் காற்றுப்புகும் படி திறந்து வைத்தும் மற்றும் ஈரமான வானிலையின் போது  பாதிக்கப்பட்ட இலைகளை குறிப்பாக அகற்றப்பட வேண்டும்.
  • தோட்டங்களில் வாழைகளில் போதுமான காற்றோட்டம் ஏற்ப்படுத்துவதன் மூலம் இதனை குறைக்கலாம்
  • மேம்படுத்தப்பட்ட சுகாதாரவசதிகள் மூலம் நோயை குறைக்க உதவுகிறது.
  • தண்டுகளில் பாலித்தீன்  உறை கொண்டு  சுற்ரி கட்ட வேண்டும்.
இயந்திரவியல் முறை
  • பழங்கள் தோன்றியதற்கு பிறகு   உடனடியாக  யோனி மற்றும்அல்லிகளை நீக்க வேண்டும்.
  • யோனிக்களை  8 முதல் 11 நாட்கள் கொத்து வெளிவந்தப் பிறகு நீக்கவேண்டும். 
    நிலத்தஒய் பராமரித்தல்
இரசாயனமுறை
  • குலைகளில் மீது காப்பர் ஆக்ஸிகுளோரைட் 0.25%  உடன் ஈரமாக்கும் திரவத்தை 0.5 முதல் 1.0 மிலி லிட்டருக்கு  தெளிக்கப்பட வேண்டும்.
  • 0.1% கார்பன்டாசிம் அல்லது டைத்தேன் M-45  0.1% கொண்டு மஞ்சரிக்காம்புகளில் தெளிக்க வேண்டும்.
Content Validator: Dr. G.Thiribhuvanamala, Assistant professor, Department of fruits, HC&RI, TNAU, Coimbatore-641003.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015