பயிர் பாதுகாப்பு :: பருத்தி பயிரைத் தாக்கும் நோய்கள்

ஆந்தரக்னோஸ்: சாலிடோடிரைகம் காசிபியம்
அறிகுறிகள்

  • இளம் இலைகளில் சிறிய, சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் புள்ளிகள் காணப்படும்.
  • தண்டுப்பகுதியியல் செடிகளில் ஏற்படும் காயங்களின் மூலம் தாக்கப்படுகின்றன. இதனால் செடிகள் நலிந்து காணப்படுகின்றன.
  • காய்களின் எல்லா நிலைகளிலும் இந்நோய் ஏற்படுகின்றது.
  • இவ்வகை பூசணம் காய்களின் பஞ்சு மற்றும் விதையைப் பாதிக்கிறது.
  • பிஞ்சுகள் மஞ்சள் நிறத்திலும் அல்லது பழுப்பு நிறத்திலும் மாறுகின்றன.
  • காய்களில் பழுப்பு நிறத்தில் புள்ளிகளும், சற்று ஆழ்ந்த புள்ளிக்கும் சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன.
  • இந்நோயினால் பாதிக்கப்பட்ட விதைகள் முளைப்பதில்லை.

கட்டுப்பாடு

  • வயல்களில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்கவேண்டும்.
  • நோயினால் பாதிக்கப்பட்டசெடிகளை அழிக்கவேண்டும்.
  • கந்தக அமிலத்தைப் பயன்படுத்தி விதைகளின் மேலுள்ள பஞ்சினை நீக்குவதால் இந்நோய் பரவுவது தவிர்க்கப்படுகிறது அல்லது கேப்டான் அல்லது கார்பன்டாசிம் அல்லது பினோமைல் 3-4 கிராம் / கிலோ அளவில் விதை நேர்த்தி செய்யலாம்.
  • கார்பன்டாசிம் 1 கிராம் / லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்கலாம்.

 

 

Cash Crops Cotton Cash Crops Cotton
நோயற்ற இலை

காய்களில் பழுப்பு நிறத்தில் புள்ளிகள்


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015