பயிர் பாதுகாப்பு :: பருத்தி பயிரைத் தாக்கும் நோய்கள்

வாடல் நோய்: ப்யூசேரியம் ஆக்ஸிஸ்போரம் வகை வாசின்பெக்டம்

அறிகுறிகள்

  • செடியின் எல்லா வளர்ச்சி நிலைகளிலும் இந்நோய் ஏற்படுகிறது.
  • இளஞ்செடியின் பாதிக்கபட்டால் விதையிலைகள் மஞ்சளாகவும், பழுப்பாகவும் மாறுவதுடன் இலைக்காம்புகளின் மீது பழுப்பு வளையம் காணப்படும். இவ்வாறான இளஞ்செடிகள் நாளடைவில் காய்ந்துவிடுகின்றன.
  • வளர்ந்த செடியில் நோய் தொற்றினால் செடியின் அடிப்பாகத்தில் உள்ள முதிர்ந்த இலைகள் ஆரம்பத்தில் மஞ்சளாக மாறுகின்றன. பின்பு அவையாகவும் வாடித் தொங்கிவிடும்.
  • முதலில் முதிர்ந்த இலைகளும் அதன் பின் இளம் இலைகளும் வாடி விடுகின்றன.
  • வாடிய செடியை பிடுங்கிப் பார்த்தால் அவற்றின் வேர்கள் வளர்ச்சி குன்றியிருப்பது காணப்படும்.
  • தண்டின் அடிப்பாகம் கருமை நிறத்தில் காணப்படுகின்றது. பட்டையை உரித்துப் பார்த்தால்  தண்டுப் பாகத்தில் கரு நிறக்கோடுகள் காணப்படுகின்றன.
  • வாடிய செடியின் சாற்றக்குழாய்த் தொகுதியைப் பூசண இழைகள் வளர்ந்து அடைத்துவிடுகின்றன. எனவே பயிருணவுச் சத்துக்கள், நீர் ஆகியவை வேர்ப்பாகத்திலிருந்து மேல் நோக்கி எடுத்துச் செல்லுதல் தடைபடுகின்றது.

கட்டுப்பாடு

  • தண்ணீர் நன்றாக வடியும்படி செய்யவேண்டும்.
  • மூன்று - நான்கு வருடங்களுக்கு ஒரு முறை பயிர் சுழற்சி செய்யவேண்டும்.
  • விதையை 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி என்ற அளவில் ஒரு கிலோ விதைக்கு நேர்த்தி செய்யலாம்.
  • பாதிக்கப்பட்ட செடியைப் பிடுங்கி எறியவேண்டும்.
  • 2.5 கிலோ டிரைக்கோடெர்மா விரிடியுடன் 50 கிலோ தொழுஉரத்துடன் கலந்து மண்ணில் போடவேண்டும்.
  • மண்ணில் பொட்டாஷ் போடுவதால் நோயின் தாக்கம் குறைகிறது. பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் இடுவதால் நோயின் தாக்கம் அதிகரிக்கிறது.

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015