வேரழுகல் நோய்: ரைசக்டோனியா பெடடிகோலா
அறிகுறிகள்
- இந்நோய் இளம் செடிகளிலும் வளர்ந்த செடிகளிலும் தோன்றுகிறது. ஆரம்பத்தில் இலைகள் வாடத் தொடங்குகின்றன.
- பின்பு இலைகள் காய்ந்து செடியும காய்ந்து விடுகின்றது. நோய் தீவிரமாகப் பரவினால் தாக்கப்பட்ட செடிகளில் ஆணிவேரைத் தவிர மற்ற வேர்கள் யாவும் அழுகிவிடுகின்றன.
- ஆணி வேரின் மேல் பட்டை அழுகிச் சிதைந்து நார் நாராக உரிந்து விடுகிறது. நோயினால் பாதிக்கப்பட்ட செடியை மெதுவாக இழுத்தாலும் எளிதாகக் கையோடு வந்துவிடும்.
- தாக்கப்பட்ட வேர்ப்பகுதியில் இழை முடிச்சகுள் இணைந்திருக்கும்.
கட்டுப்பாடு
- பருத்தியடன் பனிப்பயிரை ஊடுபயிராக விதைத்தால் இந்நோய் குறையும்.
- விதைக்கும் நேரத்தை மாற்றி அமைத்து (அதாவது வெப்பநிலை அதிகமாக இருக்கும் நேரத்தில்) விதைக்கலாம்.
- விதையை பினோமைல் அல்லது கார்பன்டாசிம் 2 கிராம் / கிலோ என்ற அளவில் நேர்த்தி செய்து விதைக்கலாம்.
- 2.5 கிலோ டிரைக்கோடெர்மா விரிடியுடன் 50 கிலோ தொழு உரத்தை கலந்து மண்ணில் போடலாம்.
|
|