பயிர் பாதுகாப்பு :: தட்டைப் பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
வெள்ளை ஈ : பெமிசியா டேபேசி |
|
அறிகுறிகள்
- இலைகள் பல்வண்ண நிறமாக மாறும் மஞ்சள் நிறத்தில் காணப்படும்
- மஞ்சள் பல்வண்ண நச்சுயிரியின் நோய் பரப்பும் கிருமியாக உள்ளது
கட்டுப்பாடு
- எண்ணெய் மற்றும் நீர் கலந்த பாத்திரம் அல்லது எண்ணெய் தேய்த்த துணியை செடியின் கீழே வைத்து, செடியை உலுக்கவேண்டும்
- மித்தைல் டெமட்டான் 25 இசி. 500 மி.லி. அல்லது டைமெத்தயோயேட் 30 இ.சி. 500 மி.லி. அல்லது பாஸ்போமிடான் 85 WSC 250 மி.லி. எக்டர் தெளிக்க வேண்டும்.
பூச்சியன் விபரம்
- தாய்ப்பூச்சிகள் : சிறியதாக, மஞ்சள் நிற உடலுடன் வெள்ளை நிற இறக்கைகளுடன், உடலைச் சுற்றிலும் மெழுகுப் போன்ற பொடியுடன் காணப்படும்
- இளம்பூச்சிகள் மற்றும் கூட்டுப்புழு கருப்பு நிறத்தில் வட்ட வடிவில் அல்லது கோள வடிவில் இருக்கும். கூட்டுப்புழுவில் விளிம்பில் நிறைய ரோமங்களுடன் காணப்படும்
|
|
|
|