பயிர் பாதுகாப்பு :: தட்டைப் பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
புல் நீல வண்ணத்துப்பூச்சி: யூகிரைஸாப்ஸ் நைஜஸ் |
அறிகுறிகள்:
- மொட்டுக்கள், பூக்கள், இளம் காய்கள் துளைக்குழிகளுடன், நத்தைப்புழு இருப்பது போலவே காணப்படும்.
- காய்களில் புழுக்கள் நுழைந்த இடத்தில் புழுவின் கழிவுகளுடன் காணப்படும்.
பூச்சியின் விபரம்:
- புழுக்கள் : மங்கிய பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் சிவப்பு நிற வரியுடன், சிறிய கருப்புநிற ரோமங்கள் உடலின் மீது இருக்கும்
- தாய்ப்பூச்சி : நீல நிறத்தில் , அளவான வடிவில், 5 கருப்பு நிற புள்ளிகள் பின்னிறக்கையிலம், 2 கருப்பு நிறபுள்ளிகள் உள்விளம்பிலும் காணப்படும்
|
|
கட்டுப்பாடு:
- பொருளாதார சேதநிலையை : 10 % பாதிக்கப்பட்ட பகுதிகள்
- ஆழமான கோடை உழவு முதல் 2-3 வருடங்களுக்கு செய்ய வேண்டும்.
- ஆரம்ப விதைப்பு, குறுகிய கால ரகம்.
- நெருக்கமான பயிர் இடைவெளியை தவிர்க்க வேண்டும்.
- உயரமான சோளத்தை பறவை குடிலாக வளர்க்கவும்.
- வளர்ந்த புழுக்கள் மற்றும் தாய்ப்பூச்சிகளை சேகரித்து அழிக்கவும்.
- மயக்கப்பொறியை 50மீ இடைவெளியில் 5 பொறி / ஹெக்டர் என வைக்க வேண்டும்
- எக்டருக்கு 50 பறவைத் தாங்கிகள் என்ற எண்ணிக்கையில் அமைக்கவும்.
- அந்துப்பூச்சியை அழிக்க விளக்குப் பொறிகளை (1 விளக்குப் பொறி / 5 ஏக்கர்) அமைக்க வேண்டும்
- டிரைகோகிரம்மா ச்லிஒனிச் 1.5 லட்சம் / எக்டர் / வாரத்திற்க்கு 4 முறை வெளியிடுவதன் மூலம் கட்டுபாட்டை பெறலாம் .
- பச்சை கண்ணாடி இறக்கை நாவாய்ப் பூச்சி , வேட்டையாடும் கெட்ட நாற்றம் உள்ள நாவாய்ப் பூச்சி, சிலந்தி , எறும்புகள் போன்றவற்றை சேமிக்கவும் .
- டீபால் 0.1% உடன் என் .பி . வி 250 எல் இ / ஹெக்டர் மற்றும் வெல்லம் 0.5% ஐ,10-15 நாட்கள் இடைவெளியில் , 3 முறை இட வேண்டும் (பூச்சிக்கொல்லி /ஹெக்டர் என் பி வி ஐ புழுக்கள் ஆரம்ப நிலையில் இருக்கும்போது தெளிக்க வேண்டும் )
- பிடி 600 கிராம், வேப்ப எண்ணெய் / புங்க எண்ணெய் 80 இசி @ 2 மி.லி / லிட்டர்
- வேப்பங் கொட்டை சாறு 5% இருமுறை தெளித்து தொடர்ந்து டிரையாசோபாஸ் 0.05% தெளிக்க வேண்டும்.
- குயினால்பாஸ் 4டி அல்லது கார்பரில் 5டி ஏதேனும் ஒரு பூச்சிகொல்லியை 25 கிலோ /ஹெக்டர் தெளிக்க வேண்டும்.
- குயினால்பாஸ் பூச்சிக்கொல்லியை 25 இ சி @ 1000 மி லி /ஹெக்டர் தெளிக்க வேண்டும்.
|
|
|