பயிர் பாதுகாப்பு :: தட்டைப் பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
காய் நாவாய்ப்பூச்சி: ரிப்டோர்டஸ் பெடஸ்டிரிஸ் |
|
அறிகுறிகள்:
- காய்களில் கருப்புநிறப் புள்ளிகள் காணப்படும்
- இளம் பச்சைக் காய் உதிரும்
- காய்கள் மோசமாக வளர்ந்திருக்கும். காயின் உள்ளே வளர்ச்சி இன்றிய பருப்புகள் காணப்படும்
பூச்சியின் விபரம்:
- பழுப்பு கலந்த கருப்பு நிறத்தில், அரை வட்ட வடிவில் இருக்கும்
- இளம் பூச்சிகள் அடர் பழுப்பு நிற எறும்புகள் போன்று தோற்றமளிக்கும்
கட்டுப்பாடு:
- டைமிதோயேட் 30% இசி 500 மிலி / ஹெக்டர்
- மித்தைல் டெமட்டான் 25% இசி. 500 மி.லி. / ஹெக்டர்
- இமிடாகுளோபிரிட் 17.8% SL 100-125 மி.லி /ஹெக்டேர்
- தையமீத்தாக்கம் 25% WG 100 கி /ஹெக்டேர்
|
|
|
|