மேக்ரோபோமினா இலைக்கருகல்: மேக்ரோஃபோமினா ஃபேசியேலினா
அறிகுறிகள்
- நெல்லை தொடர்ந்து பயிரிடப்படும் பாசிப்பயிரில் விதைத்த 4 வாரத்தில் இந்நோய் தோன்றுகிறது. கீழ்த் தண்டுப்பகுதியில் வெள்ளை நிறப்பூசண வளர்ச்சி காணப்படும்.
- இவ்வகையான பூசண வளர்ச்சி அதிகமாகி இவை உயர்ந்த வரிக்கோடுகளாக மாறி மேல்நோக்கி பரவுகிறது.
- செடிகள் குட்டையாகவும், இலைகள் அடர்ந்த பச்சை நிறத்திலும், இலையின் அளவு குறைந்தும் காணப்படும்.
- பாதிச் செடிகளில் இலைகள் உதிர்ந்து விடும்.
- செடியில் பூத்தலும், காய்த்தலும் குறைந்துவிடும்.
- நோயினால் பாதிக்கப்பட்ட செடியின் தண்டைப் பிளந்த பார்த்தால் சிவப்பு நிறத்தில் திசுக்களும், உள்திசுக்கள் வெள்ளை நிறத்திலும் காணப்படும்.
- நோய்க்காரணி விதையிலும், மண்ணிலும், நோயுற்ற செடிகளிலும், தங்கியிருக்கும்.
- வெப்பநிலை அதிகரிக்க நோயின் தாக்கம் அதிகரிக்கும்.
- மண்ணின் மேல் தளத்தில் பூசண வித்துக்கள் தங்கியிருக்கும் இவை தண்டின் மூலம் உள்ளே நுழைகின்றன.
கட்டுப்பாடு
- கோடையில் ஆழமாக உழவேண்டும்.
- பயிர் சுழற்சி முறையை கடைப்பிடிக்கவேண்டும்.
- மண்ணில் தொழு உரம் அதிகமாக இருந்தால் நோயின்தாக்கம் குறையும்.
- நோயுற்ற செடியை அழித்தால் நோயின் தாக்கம் குறையும்.
- விதையை டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் / கிலோ அல்லது சூடோமோனஸ் ப்ளூரசன்ஸ் 10 கிராம் / கிலோ அல்லது கார்பன்டாசிம் அல்லது திரம் 2 கிராம் / கிலோ என்ற அளவில் பயன்படுத்தி நேர்த்தி செய்யலாம்.
- கார்பன்டாசிம் 2 கிராம் / லிட்டர் அல்லது சூஃப்ளூரசன்ஸ் அல்லது டி.விரிடியை 2-5 கிலோ / எக்டர் என்ற அளவில் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து மண்ணில் போடலாம்.
|
|