பயிர் பாதுகாப்பு :: கடுகு பயிரைத் தாக்கும் பூச்சிகள்

4. முட்டைகோஸ் துளைப்பான்: ஹெலுலா அன்டாலிஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இளம் புழுக்கள் இலையைத் தின்று சேதப்படுத்தும்
  • வளர்ச்சியடைந்த புழு இலை மற்றும் தண்டுகளைத் துளைத்து உட்சென்று சேதப்படுத்தும்

பூச்சியின் அடையாளம்:

  • புழு: புழுக்கள் பழுப்புநிறத்தில் இருக்கும். உடலின் மேற்பரப்பில் 5 ஊதா வண்ணக்கோடுகள் காணப்படும்.
  • அந்துப்பூச்சி:  அந்துப்பூச்சி மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்திலிருக்கும். முன் இறக்கையில் பழுப்புநிற கோடுகள் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • புழுக்களை சேகரித்து அழிக்கலாம்
  • நன்கு வளர்ச்சியடைந்த புழுவைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 5 சதம் தூளை எக்டர்க்கு 37.5 கிலோ வீதம் துவி தாக்குதலைக் குறைக்கலாம் (அல்லது) கார்பரைல் 50 WP @ 37.5 கி/ 150 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014