பயிர் பாதுகாப்பு ::குசும்பா பயிரைத் தாக்கும் பூச்சிகள்

3. மொக்கு ஈ: அகன்தோபைலஸ் ஹெலியாந்த்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இளம் புழு இலைகளையும், மொக்குகளையும் உண்டு சேதப்படுத்தும்.
  • தாக்கப்பட்ட மொக்குகளில் சிறிய துளைகள் காணப்படும்
  • சேதம் அதிகமாகும் போது தாக்கப்பட்ட மொக்குகள் அழுகிவிடும்
  • தாக்கப்பட்ட மொக்குகளிலிருந்து துர்நாற்றம் கெரண்ட திரவம் வடியும்

பூச்சியின் அடையாளம்:

  • புழு: வெள்ளை நிறமுடையது.
  • ஈ: சாம்பல் நிறமுடையது, பழுப்பு நிறக் கால்களைக் கொண்டது

கட்டுப்பாடு: 

  • டைமீத்யோயேட் 30 EC @ 600-650 மி.லி/எக்கடர் அல்லது மாலத்தையான் 50 EC @10 மி.லி/எக்கடர் அல்லது பாஸ்போமிடான் 100 EC @150- 200 மி.லி/எக்கடர் என்ற அளவில் 600-650 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு எக்கடருக்கு தெளிக்கவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014