நூற்புழுவினால் தாக்கப்பட்ட செடியைப் பார்க்கின்ற தென்படுகின்ற அறிகுறிகளாவன:
- உயரத்திலும் பருமனிலும் குறைந்த செடியின் வளர்ச்சி.
- செடியில் குறைந்த பக்க கிளைகளின் எண்ணிக்கை.
- இடைக்கணுவின் நீளம் குறைவுபடுதல்
- இலைகள் பச்சையம் இழந்து பழுப்பு நிறமாக மாறுதல்
- இலை ஓரங்கள் சிவப்பாகி மேற்புறமாக மடிதல்.
- செடிக்கு மேலே கிளைகளெல்லாம் ஒன்று கூடி “காலிபிளவர்” போன்ற அமைப்பு உருவாதல்
- இலை நுனி வெண்மை நிறமாகி கீழ் நோக்கித் தொங்குதல்.
- உரு சிதைந்த மொக்குகள் அல்லது பூக்கள்.
மேற்கூறிய பாதிப்புகளை செடியைப் பார்த்து அறிந்த போதிலும் செடியின் வேரையும் சோதித்துப் பார்க்க வேண்டியது அவசியம். அவற்றில் தென்படும் அறிகுறிகளாவன :
- சல்லி வேர்களற்ற கட்டை வேர்கள்
உதாரணம் : எலுமிச்சை அல்லது நாரத்தை நூற்புழுவினால் தாக்கப்பட்ட கமலா ஆரஞ்சு மரத்தின் வேர்கள்.
- பாசி மணி போன்ற வேர் முடிச்சுகள்
உதாரணம்: வேர் முடிச்சு நூற்புழுவினால் தாக்கப்பட்ட கேரட், மிளகு, இஞ்சி வேர்கள்.
- இளம் சிவப்பு அல்லது கருமையான கீறியது போல உள்ள காயங்கள் அல்லது தழும்புகள். கருகல் நூற்புழுவால் தாக்கப்பட்ட பீன்ஸ் மற்றும் பட்டாணி வேர்கள்.
- வேரின் முனைகள் வளர்ச்சி தடைப்பட்டு உப்பிய தோற்றம் அவற்றின் மேல்புறம் பக்க வேர்கள் உருவாதல். அவையே நாளடைவில் ஹாக்கி ஸ்டிக் போல் வளைந்து காணப்படுதல். இதற்கு உதாரணம் புற வேர் நூற்புழுக்களினால் தாக்கப்பட்ட வெள்ளைப் பூண்டின் வேர்கள்.
- வேரில் மணி போல் வெண்மை நிறமாகவோ மஞ்சள் நிறமாகவோ பெண் நூற்புழுக்கள் ஒட்டியிருத்தல்.
உதாரணம் : முட்டைக் கூட்டு நூற்புழுவினால் தாக்கப்பட்ட உருளைக்கிழங்கு வேர்கள்
- வேர் நூற்புழுவின் தாக்குதலுக்குப் பிறகு, பூசணங்களின் தாக்குதலினால் வேர்கள் அழுகி விடுகின்ற நிலை.
உதாரணம்: நூற்புழுவினால் தாக்கப்பட்ட கருகல் பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு போன்றவற்றின் வேர்கள்.
|