பயிர் பாதுகாப்பு :: சோள பயிரைத் தாக்கும் பூச்சிகள்
கதிர் துளைபான்: ஹெலிகோவெர்பா ஆர்மீஜீரா
தாக்குதலின் அறிகுறிகள்:
புழு கதிரை துளைத்து உள்ளே சென்று தின்று சேதம் விளைவிக்கும்
புழுவின் சேதக்கழிவுகள் தாக்கப்பட்ட பகுதியில் காணப்படும்்
பூச்சியின் விபரம்:
முட்டைகள்: உருண்டை வடிவமாக வெள்ளை நிறத்தில் இருக்கும்
புழு: பச்சை கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். உடலின் மேற்பரப்பில் பழுப்பு மற்றும் வெள்ளை நிறக்கோடுகள் காணப்படும்.
கூட்டுப்புழு: பழுப்பு நிறத்தில் இலை, காய் மற்றும் மண்ணினுள் காணப்படும்
அந்துப்பூச்சி: வெளிர் பழுப்பு கலந்த மஞ்சள் நித்தில் சற்று தடித்து காணப்படும். முன் இறகானது பச்சை கலந்த வெளிர் மஞ்சள் நிறத்துடன், இறகின் நடுவில் அடர் பழுப்பு நிறத்தில் வட்ட வடிவ புள்ளிகள் காணப்படும். பின் இறகானது வெளிறிய புகை போன்ற வெள்ளை நிறத்துடனும் இறகின் விளிம்பில் கருப்பு நிறத்திலும் காணப்படும்
ஓரளவு சாப்பிடடபட்ட தானியங்கள்
புழுவின் சேதக்கழிவுகள்
முட்டை
புழு
கூட்டுப்புழு
அந்துப்பூச்சி
கட்டுப்படுத்தும் முறை:
பொருளாதார சேத நிலை: 2/கதிர்
விளக்கு பொறி அமைத்து அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்
ஒரு ஹெக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் இனக்கவர்ச்சி பொறிகளை அமைத்து ஆண் அந்துப் பூச்சிகளை கவர்ந்திழுத்து அழிக்கலாம்
என்.பி.வி @1.5X1012 POB + நாட்டுச்சர்க்கரை 2.5 கிலோ + பருத்தி விதை பொடி 250 கி என்ற அளவில் கலந்து கதிர்களில் படும்படியாக இரண்டு முறை வீதம் 10 நாட்கள் இடைவெளியில் தெளித்து ஹலிகோவெர்பா புழுக்களை கட்டுப்படுத்தலாம்