வேர் தண்டு அழுகல்: பித்தியும் அப்பேனிடெர்மேட்டம்
அறிகுறிகள்:
- பாதிக்கப்பட்ட தாவரத்தின் அடித்தண்டு பகுதியில் நீர் கசிந்து மென்மையாக காணப்படும்.
- வேர் அமைப்பு பெருமளவில் குறைந்து காணப்படும்.
- இலையின் ஓரத்திலிருந்து சிறிது சிறிதாக காயத்தொடங்கும்.
- பாதிக்கப்பட்ட வேர்த்தண்டு, மென்மையாக மாறி பின் அழுகி, பல நிறங்களில் காணப்படும்.
மேலாண்மை:
- நோய் பாதிக்கப்படாத தாவர விதைகளை பயன்படுத்தவும்.
- போதுமான பாசன வசதிகளை செய்யவேண்டும்.
- நடுவதற்கு முன், காப்பர் ஆக்சிகுளோரைடு அல்லது ஜீனாப் 0.3 சததில் வேர்த்தண்டினை 30 நிமிடம் மூழ்கவைக்கவும்.
- பாதிக்கப்பட்ட தாவரத்தை சுற்றியுள்ள மண்ணை, காப்பர் ஆக்சிகுளோரைடு (0.25 சதம்) கொண்டு நனைக்கவும்.
- சூடோமோனாஸ் ஃபுளூரசன்ஸ் (2.5 கிலோ/எக்டர்) மண்ணில் இடவும்.
|