முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: நேரடி விதைப்பு துவரையின் சொட்டு உரப்பாசன முறை
வயல் தயார்செய்தல்
நிலம் தயார்செய்தல்
  • விளைச்சலை அதிகப்படுத்த நிலத்தினை நன்றாக உழ வேண்டும் மற்றும் கடைசி உழவு நேரத்தில் 12.5 டன் தொழு உரம் / ஹெக்டேர் அல்லது மட்கிய தென்னை நார்க் கழிவு நிலத்தில் இடவேண்டும்.
இரகங்கள் மற்றும் விதையளவு
  • LRG 41 துவரை வகை மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம், லாம், ஆந்திராவில் இருந்து பெறப்படுகின்றன. விதையளவு 2.5 கிலோ / எக்டர் பரிந்துரைக்கப்படுகிறது.

விதைநேர்த்தி
  • விதைக்கும் முன்பு, விதைகளை கார்பென்டாசிம் அல்லது திரம் @ 2 கிராம்/ கிலோ வீதம் 24 மணி நேரம் சிகிச்சை செய்யவேண்டும் (அல்லது) டிரைக்கோடெர்மா விரிடி @ 4 கிராம்/ கிலோ விதை (அல்லது) சூடோமோனாஸ் @ 10 கிராம் / கிலோ விதை பயன்படுத்தலாம். உயிரி கட்டுப்பாட்டு செயலி உயிர் உரங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
  • முதலில் விதைகளை உயிரி கட்டுப்பாட்டு செயலியில் சிகிச்சை செய்த பின்னர் ரைசோபியம் கொண்டு சிகிச்சை செய்யவேண்டும்.
  • பூஞ்சை கொல்லி மற்றும் உயிர்மகட்டுப்பாடு செயலிக்கு முரணானது.
  • காளான் கொல்லி (அல்லது) உயிர்மகட்டுப்பாடு செயலியில் சிகிச்சை செய்த விதைகளை மீண்டும் 24 மணி நேரம் கழித்து பாக்டீரியா செயலியில் சிகிச்சை செய்ய வேண்டும்.
  • ஒரு ஹெக்டருக்கு விதைகளை சிகிச்சை செய்ய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட ரைசோபியம் CRR 6 / CPR 9, பாஸ்போபாக்டீரியா (பேசில்லஸ் மெகாடேரியம்) மற்றும் PGPR (சூடோமோனாஸ்) ஒவ்வொன்ரும் மூன்று பாக்கெட்டுகள் (600 கிராம்) தேவை.
  • சிவப்பு குறுமண் நிலத்திற்கு, ரைசோபியம் VPR1 பயனுள்ளதாக இருக்கும்.
  • ரைசோபியம் விதை நேர்த்தி செய்யும்போது மட்டுமே அரிசி கஞ்சி சேர்ப்பான் பயன்படுத்த வேண்டும்.
  • விதைநேர்த்தி செய்யவில்லையெனில் பாஸ்போபாக்டீரியா 10 பாக்கெட் (2 கிலோ) (பேசில்லஸ் மெகாடேரியம்) மற்றும் PGPR (சூடோமோனாஸ்) 10 பாக்கெட் (2 கிலோ) 25 கிலோ மண் மற்றும் 25 கிலோ தொழு உரத்துடன் விதைக்கும்முன்பு பயன்படுத்த வேண்டும்.
பயிர் வடிவியல்
இடைவெளி பின்வருமாறு
வகை இடைவெளி (செ.மீ)
LRG 41 150 x 60
பருவகாலம்
நீண்ட கால மற்றும் மத்திய கால இரகங்கள்: விதைப்பிற்கு உகந்த காலம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள்.
    குறிப்பு: விதைப்பு பருவம் பூக்கும் மற்றும் முதிர்ச்சி கால நிலைகள் மழைக் காலங்களில் நிகழாமல் திட்டமிட்டவேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016