முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: நேரடி விதைப்பு துவரையின் சொட்டு உரப்பாசன முறை
அறுவடை
    80% காய்கள் முதிர்ச்சியடைந்தவுடன் முழு தாவரங்கள் அறுவடை செய்யப்படுகிறது.

அறுவடை செய்த காய்கள்

துவரையில் கதிரடித்தல்
அறுவடை செய்த துவரையில் கதிரடித்தல்

     அறுவடைக்குப் பின்னர், தாவரங்கள் 2- 3 தொகுதிகளாக தொகுக்கப்பட்டு பின்னர் வெயிலில் நன்கு உலர்த்தப்படுகிறது. முழுமையாக உலர்த்திய பிறகு, கதிரடித்தல் மர குச்சிகள் கொண்டு அடிப்பதன் மூலம் செய்யப்படுகிறது. விதைகள் காற்றில் துாற்றி சுத்தம் செய்யப்படுகிறது.

மகசூல்
    சொட்டுநீர் பாசனம் 100 சதவீதம் WRc உரப்பாசனத்துடன் 100 சதவீதம் RDF 7 நாட்களுக்கு ஒரு முறை குறிப்பிடத்தக்க விளைவாக நேரடி விதைப்பு முறையில் மகசூல் 2571 கிலோ/எக்டர் பெறலாம்.
சிகிச்சைகள்

தானிய விளைச்சல்
(கிலோ / எக்டர்)

மேற்பரப்பில் பாசன மீது விளைச்சல் அதிகரிப்பு %
சொட்டு நீர் உரபாசனத்தில் நீரில் கரையக்கூடிய உரங்கள் 2571 39
சொட்டு நீர் உரபாசனத்தில் வழக்கமான உரங்கள் 2069 12
மேற்பரப்பு பாசனத்தில் வழக்கமான உரங்கள் * 1851 -
* அனைத்து உரங்களும் அடித்தள உரமாக பயன்படுத்தப்படுகின்றது
சேமிப்பு
  • குறுகிய கால சேமிப்பில் விதைகள் சணல் பைகள் அல்லது துணி பைகளில் (8-9 மாதங்கள்) 8-9% விதை ஈரப்பதத்துடன் சேமிக்கலாம்.
  • நடுத்தர கால சேமிப்பில் விதைகள் சணல் பைகள் அல்லது துணி பைகளில் (8-9 மாதங்கள்) 8-9% விதை ஈரப்பதத்துடன் சேமிக்கலாம்.
  • நீண்ட கால சேமிப்பில் விதைகள் 700 காஜ் பாலித்தீன் பையில் (15 மாதங்களுக்கு மேல்) 8% க்கும் குறைவாகவே விதை ஈரப்பதத்துடன் சேமிக்கலாம்.
பொருளியல்
     உரபாசனத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று சாகுபடி செலவினை குறைப்பது மற்றும் முடிந்தவரை பொருளாதார உற்பத்தியை அதிகரிப்பதாகும். எனவே நீர் மற்றும் ஊட்டச்சத்து பயன்பாடு முக்கியமானது. சொட்டுநீர் மூலம் வழக்கமான மற்றும் நீரில் கரையக்கூடிய உரங்கள் வழங்குவது தொழில்நுட்ப ரீதியாக வெற்றிகரமானதாகவும் ,பொருளாதார ரீதியில் சாத்தியமானதாகவும் இருக்கும்.
சிகிச்சைகள் சாகுபடி செலவு
(₹ ha1)
நிகர வருமானம்
(₹ ha1)
வரவு செலவு
விகிதம்
சொட்டு நீர் உரபாசனத்தில் நீரில் கரையக்கூடிய உரங்கள் 42499 77839 2.83
சொட்டு நீர் உரபாசனத்தில் வழக்கமான உரங்கள் 32221 64898 3.01
மேற்பரப்பு பாசனத்தில் வழக்கமான உரங்கள் * 26070 48981 2.90
* அனைத்து உரங்களும் அடித்தள உரமாக பயன்படுத்தப்படுகின்றது
முடிவுரை
    ஏழு நாட்களுக்கு ஒரு முறை சொட்டு நீர் உரபாசனம் அதிகபட்ச நிகர வருமானத்தை அளிக்கிறது (₹ 77839 ஹெக்டேர்-1) மற்றும் ரூபாய் ஒன்றுக்கு வருமானம் முதலீடு ஒப்பிடுகையில் நீரில் கரையக்கூடிய உரங்கள்(2.83) மூலம் சொட்டுநீர் உரபாசனம் (3.01).

ஆதாரம்:
டாக்டர் கே.ஆர் லதா,
டாக்டர் எல் விமலேந்திரன்,
விவசாயப் பொருளியல் துறை
பயிர் மேலாண்மை இயக்ககம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் - 641 003
தொலைபேசி: 6611246
மின்னஞ்சல்: agronomy@tnau.ac.in

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016