|
அறிமுகம் |
-
துவரை (Cajanus cajan) ஊட்டச்சத்துரீதியில் சரியான அளவுகளும் மற்றும் புரதம் (20-30%), கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ மற்றும் சி –க்கு ஒரு சிறந்த ஆதாரமாக உள்ளது.
-
இந்தியாவில், துவரை 2.65 மில்லியன் டன் உற்பத்தியும், ஒரு பகுதியில் வளரும், சராசரி உற்பத்தித் திறன் 655 கிலோ எக்டர் -1 மற்றும் 4.37 மில்லியன் எக்டர் பரப்பளவிலும் பயிர் செய்யப்படுகிறது.
-
தமிழ்நாட்டில், துவரை 0.31 லட்சம் டன் உற்பத்தியும், சராசரி உற்பத்தித் திறன் 870 கிலோ எக்டர்-1 மற்றும் 0.35 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிர் செய்யப்படுகிறது.
-
பருப்பு வகைகள் குறைந்த மண் வளம் மற்றும் வறட்சி சூழ்நிலைகளுக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் இது மானாவாரி உள்ள காலங்களிலும் பயிரிடப்படுகிறது.
-
ஒழுங்கற்ற மழை, தொழில்மயமாக்கல் அதிகரிப்பு, தீவிர விவசாயம் மற்றும் முறையற்ற நீர் மேலாண்மை காரணமாக நீர் அரிதாகி வருகின்றன.
-
மக்கள் பெருக்கம் மற்றும் பொருளாதார நடவடிக்கையின் காரணமாக பாசன நீர் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
|
உற்பத்தி அதிகரிக்க சாத்தியமான வழிகள் |
-
பருப்பு வகைகள் உற்பத்தி திறன் அதிகரிக்கும் முக்கிய உள்ளீடுகள் அதாவது., நீர், விதைகள் மற்றும் சத்துக்கள் ஆகியவற்றை சரியான அளவில் உற்பத்தி அதிகரிக்க பயன்படுத்துதல் வேண்டும்.
-
85 சதவீத பருப்பு வகைகள் மானாவாரியாக உள்ளதால், அதன் வளர்ச்சியில் உள்ள மிக முக்கியமான கட்டங்களில் நீர், ஊட்டச்சத்துக்கள் மற்றும் முறையான பாசனம் ஆகிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும்.
-
சொட்டு நீர் பாசனம் ஒரு சிறந்த பாசன அமைப்பாக கருதப்படுகிறது இது மண்னை ஈரத்தன்மையுடனும் மற்றும் வேர் பகுதியில் உகந்த ஈரப்பதத்தினை பராமரிக்கவும் உதவுகிறது.
|
சொட்டுநீர் உரப்பாசன நன்மைகள் |
-
சரியான நேரத்தில் நீர் பாசனம் செய்யலாம்
-
நுன் நீர்ப்பாசன பல தனிப்பட்ட வேளாண் செயல்களில் நீர் மற்றும் ஆற்றல் சேமிப்பு நன்மைகள் இப்போது மற்றும் எதிர்காலத்தில் பாசன விவசாயத்திற்கு உதவும்.
-
உரப்பாசனத்தில் நீரில் கரையும் உரங்கள் / ரசாயனங்கள் நேரடியாக பயிரின் வேர்ப்பகுதியில் துல்லியமான அளவில் பயன்படுத்தக்கூடிய ஒரு தொழில்நுட்பம் ஆகும்.
-
உர பயன்பாட்டினை மேம்படுத்த உதவுகிறது.
-
சொட்டு உரப்பாசனத்தில் மேலும் பயிர் பூர்த்தி செய்ய துல்லியமான அளவில் பயிரின் தேவைகளுக்கு ஏற்ப நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை அளிக்கலாம் மற்றும் இது விலையுயர்ந்த சத்துக்களின் இழப்பை குறைக்கிறது.
|
சொட்டுநீரில் உரமாகப் பயன்படுத்தக்கூடிய பொருத்தமான உரங்கள் |
உரங்கள் |
N:P:K |
உரங்கள் |
N:P:K |
யூரியா |
46 – 0 – 0 |
பொட்டாசியம் நைட்ரேட் |
13 – 0 – 46 |
அம்மோனியம் நைட்ரேட் |
34 – 0 – 0 |
MAP |
12 – 61 – 0 |
அம்மோனியம் சல்பேட் |
21 – 0 – 0 |
பொட்டாசியம் குளோரைடு |
0 – 0 – 60 |
கால்சியம் நைட்ரேட் |
16 – 0 – 0 |
பொட்டாசியம் நைட்ரேட் |
13 – 0 – 46 |
மக்னீசியம் நைட்ரேட் |
11 – 0 – 0 |
பொட்டாசியம் சல்பேட் |
0 – 0 – 50 |
யூரியா அம்மோனியம் நைட்ரேட் |
32 – 0 – 0 |
NPK (Polyfeed) |
19 – 19 - 19 |
20 – 20 - 20 |
|
|