|
கன்று வீச்சு
நோயின் தன்மை |
|
|
- கன்று ஈனும் தேதிக்கு முன்பாகவே முழுமையாக வளர்ச்சியடையாத இறந்து போன அல்லது உயிரோடிருக்கும் கன்றினை வீசிவிடுதல்.
- கன்று வீசுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
|
|
நோய்க்கான காரணங்கள் |
- நுண்ணுயிரி மற்றும் நச்சுயிரிகளால் ஏற்படும் பொவைன் வைரல் டயரியா எனப்படும் மாடுகளில் ஏற்படும் நோய், இன்ஃபெக்சியஸ் பொவைன் ரைனோ டிரக்கியைட்டிஸ், லெப்டோஸ்பைரோசிஸ், புருசெல்லோசிஸ், பூஞ்சைகளால் ஏற்டும் கன்று வீச்சு, ஆக்டினோ மைசிஸ், டிரைக்கோமோனியாசிஸ், கேம்பைளோபேக்டீரியோசிஸ், லிஸ்டிரீயோசிஸ், கிளமீடியோசிஸ், எபிசூட்டிக் பொவைன் அபார்சன் போன்றவை மாடுகளில் கருச்சிதைவினை ஏற்படுத்தி கன்று வீசுதலை ஏற்படுத்தும் நோய்களாகும்.
- கனமாக அடிபடுதல், கர்ப்பப்பை முறுக்கிக்கொள்ளுதல், இரட்டை கன்றுகள் உண்டாதல் போன்றவையும் மாடுகளில் கன்று வீச்சினை ஏற்படுத்தும் இதர நோய்களாகும்.
- நச்சுகளின் தாக்கமும் மாடுகளில் கன்று வீச்சினை ஏற்படுத்துகிறது.
- எலிகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் விஷத்தன்மை வாய்ந்த குமாரின் எனும் பொருளும், பூஞ்சையினால் தாக்கப்பட்ட குளோவர் போன்றவையும் கன்று வீச்சினை மாடுகளில் ஏற்படுத்துகின்றன.
- நைட்ரேட்கள், குளோரினேட்டேட் நாஃப்தலின் பொருள்கள், ஆர்சனிக் போன்ற வேதிப்பொருட்களும் கன்று வீச்சினை ஏற்படுத்துகின்றன.
- லோகோ விதைகள், புரூம் விதைகள், பைன் ஊசிகள் போன்றவையும் மாடுகளில் கருச்சிதைவினை ஏற்படுத்துகின்றன.
- சினை மாடுகளில், கர்ப்பப்பையினை மருந்துகள் கொண்டு கழுவுதல், அல்லது சினையுற்றிருப்பது தெரியாமல் சினை ஊசி போடுதல் போன்றவையும் மாடுகளில் கருச்சிதைவினை ஏற்படுத்துகின்றன.
- வைட்டமின் ஏ, ஐயோடின், மற்றும் செலீனியம் சத்து குறைபாடுகளாலும் மாடுகளில் கருச்சிதைவு ஏற்படுகிறது.
|
|
|
|
|
|
|
மருத்துவ அறிகுறிகள் |
|
- மாடுகள் சினைக்காலம் முடிவதற்கு முன்பாகவே பனிக்குடத்தினை வெளித்தள்ளுதல், அல்லது பிறப்புறுப்பிலிருந்து அதிகப்படியான கோழை போன்ற திரவம் வடிதல்
- தீவனம் எடுக்காமை, மாடுகள் சோர்வாக காணப்படுதல்
- திடீரென கன்றினை ஈனுதல்
|
|
|
|
நோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் |
|
- மாடுகளிலிருந்து வீசப்பட்ட கன்றுகளையும், நஞ்சுக்கொடியினையும் முறையாக அப்புறப்படுத்துதல்
- பண்ணையிலுள்ள உபகரணங்கள், தீவனம் போன்றவற்றை பாதிக்கப்பட்ட மாடுகளின் நஞ்சுக்கொடி மற்றும் கர்ப்பப்பையிலிருந்து வெளியேற்றப்படும் திரவங்களால் மாசடையாமல் பாதுகாத்தல்.
- மாட்டுக்கொட்டகையினை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருத்தல்.
- இன்ஃபெக்சியஸ் பொவைன் ரைனோ டிரக்கியைடிஸ் மற்றும் இன்ஃபெக்சியஸ் வல்வோ வஜைனைட்டிஸ் போன்ற நோய்களுக்கெதிராக சினை மாடுகளுக்குத் தடுப்பூசி அளித்தல். பொதுவாக இத்தடுப்பூசி கிடேரிகளின் 6-8 மாத வயதில் அளிக்கப்படுகிறது.
- லிஸ்டீரியோசிஸ் நோயினால் ஏற்படும் கன்று வீச்சினைக் கட்டுப்படுத்த மாடுகளுக்கு காரத்தன்மை அதிகம் கொண்ட தரம் குறைந்த சைலேஜினை தீவனமாக்க அளிப்பதை தவிர்க்க வேண்டும்.
- புரூசெல்லோசிஸ் நோயினால் மாடுகளில் கன்று வீசுவதைத் தடுக்க, கிடேரிக் கன்றுகளின் 3-7 மாத வயதில் புரூசெல்லா ஸ்டெரியின் 19 என்ற தடுப்பூசியினைப் போடவேண்டும். ஆனால் காளைக் கன்றுகளுக்கு இத்தடுப்பூசியினைப் போடக்கூடாது.
- நோய்க் கிளர்ச்சியின்போது மாடுகளை இனப்பெருக்கம் செய்வது கூடாது.
- நோய்க்கிளர்ச்சியின்போது மாடுகளுக்கு இடையில் தொடர்பு இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
- நோயினால் பாதிக்கப்பட்ட காளைகளை இனப்பெருக்கத்திற்கு உபயோகப்படுத்தக்கூடாது.
- சினை ஊசி போட பயன்படுத்தப்படும் விந்தில் எந்த நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளும் இல்லாமல் இருக்கவேண்டும்
- சினை மாடுகளின் கொட்டகைத் தரை வழுக்காமல் இருக்குமாறு அமைக்கப்படவேண்டும்.
|
|
|
|
|