இளம் செம்மறியாடுகள் பராமரிப்பு

குட்டிகளுக்கு சீம்பால் கொடுத்தல்

DSC_3651 DSCN3176

 

  • குட்டி ஈன்றவுடன் தாய் ஆட்டிலிருந்து சுரக்கும் முதல் பால் சீம்பால் எனப்படும்
  • சீம்பாலில் இருக்கும் காமாகுளோபலின் எனப்படும் நோய் எதிர்ப்பு புரதங்கள் குட்டிகளுக்கு நோய் எதிர்ப்புச் சத்தியை அளிக்கின்றன.
  • சீம்பால் ஊட்டச்ச்த்து மிக்கதாகும். சாதாரண பாலை விட சீம்பாலில் ஏழு மடங்கு அதிகமாக புரதச்சத்தும், இரண்டு மடங்கு அதிகமாக மற்ற சத்துப் பொருட்களும் இருக்கின்றன.
  • சீம்பாலில் அதிகமாக உள்ள தாது பொருட்களும், உயிர்சத்து ஏம் நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமாக அமைகின்றன. இதனால் குட்டிகளின் வாழும் திறன் அதிகரிக்கின்றது.
  • சீம்பால் மியுகோனியம் எனும் முதல் ஆட்டுச்சாணம் வெளிவர உதவுகின்றன.
  • குட்டிகள் பிறந்து முதல் அரை மணி நேரத்திற்குள் சீம்பால் குடித்துவிட வேண்டும். இல்லையெனில் குட்டிகளின் சிறுகுடல் சீம்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு புரதங்கள் கிரகிக்கும் தன்மையை இழந்து விடுகின்றன.

 அடையாளமிடுதல் - கம்மலிடுதல்

DSC_3651 DSCN3176
  • ஆடுகளை அடையாளம் காண்பதற்காக அலுமினியம், பித்தளை மற்றும் பிளாஸ்டிக்கிலான கம்மல்களில் எண்கள் அல்லது எழுத்துக்களை எழுதி காதில் பொருத்தலாம்.
  • கம்மல்களை காலில் இரத்த நாளங்கள் இல்லாத சவ்வுப் பகுதியில் பொருத்த வேண்டும்.
  • கம்மல்களை தலைக்கு அருகில் பொருத்துவதால் ஆடுகள் கம்மலை கடித்து இழுக்கும் பழக்கத்தினை தவிர்க்கலாம்.
  • கம்மலினுள்ள அடையாள எண்கள் பார்பபதற்கு எளிதாக வெளிப்பக்கத்தில் இருத்தல் வேண்டும்.
  • கம்மல்களை பாலினத்திற்கேற்ப வலது / இடது பக்க காதுகளில் பொருத்துவதன் மூலம் பெரிய மந்தைகளில் ஆடுகளை எளிதாக அடையாளம் காண இயலும்.
  • சில சமயங்களில் கம்மல்கள் பொருத்துவதனால் காதுகள் கிழிந்துவிடுகின்றன. அதனால் உருவாகும் புண்களில் கிருமி தொற்றும் கம்மல் பொருத்துவதன் எதிர்மறை விளைவுகளாகும்.
  • காதுகள் கிழிந்து விடுவதனால் ஆடுகளின் தோற்றம் நன்றாக இல்லாமல் அதன் சந்தை மதிப்பினை இழக்கின்றன. இதனைத் தவிர்க்க சிறிய கம்மலை பயன்படுத்த வேண்டும்.
  • கம்மலை பொருத்தும் முன் கம்மலையும், அதனைப் பொருத்தப் பயன்படும் கருவியினையும் கிருமி நீக்கம் செய்தல் வேண்டும். கம்மலின்  அடையாள எண்ணை எழுத வேண்டும்.  செமமறியாட்டை நேராக நிற்க வைத்து அதன் காதுகளை கிருமி நாசினி கொண்டு துடைத்து கம்மலை பொருத்தும் கருவியினை கொண்டு காதின் இரத்த நாளங்கள் இல்லாத பகுதியில் கம்மலை பொருத்த வேண்டும்.

 குடற்புழு நீக்கம் செய்தல்

DSC_3651
  • ஆட்டுக்குட்டிகளின் மூன்று வார வயதில் அவற்றுக்கு குடற்புழு நீக்கம் செய்ய ஆரம்பிக்கவேண்டும்.
  • ஆடுகளுக்கு 2 – 3 மாத இடைவேளையில் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.
  • குடற்புழு நீக்கம்  கால்நடை மருத்துவரின் வழிகாட்டுதலின் படி செய்ய வேண்டும்.
  • குடற்புழு மருந்து குறிப்பிட்ட இடைவெளியில் மாற்ற வேண்டும். விலங்கின் எடைக்கு தகுந்தார் போல் குடற்புழு மருந்து அளிக்க வேண்டும். அதிகமாகவோ, குறைவாகவோஅல்லது ஓரே குடற்புழு மருந்தையோ அளித்தால் ‘மருந்து எதிர்ப்புத் தன்மை’ உருவாகும். இவை மருந்தின் தாக்கத்தை குறைக்கும்.  
  • மருந்து குளியல் மூலம் புற ஒட்டுண்ணிகளை நீக்கலாம்.
  • சினை ஆடுகள் மற்றும் நோய்வாய்ப்பட்ட ஆடுகளை மருந்து குளியல் செய்வதை தவிர்கவும்.

தடுப்பூசி அட்டவணை

DSC_3651 DSCN3176

 

தடுப்பூசி வயது
டெட்டனஸ் பிறந்த உடன்.
கோமாரி நோய்   4 மாத வயதில் பின்னர் ஆறு மாதத்திற்கு ஒரு முறை.
ஆட்டம்மை நோய் 3 மாத வயதில் பின்னர் ஆண்டிற்கு ஒரு முறை.
துள்ளுமாரி நோய்

முதல் தடுப்பூசி - குட்டிகளைப் பிரிப்பதற்கு முன்.

இரண்டாம் தடுப்பூசி 6 மாத வயதில் பின்னர் வருடம் ஒருமுறை.

ஆட்டுக்கொள்ளை நோய் 3 மாத வயதில் பின்னர் வருடம் ஒருமுறை.
அடைப்பான் நோய் 6 மாத வயதில் பின்னர் வருடம் ஒருமுறை.
நீலநாக்கு நோய் 3 மாத வயதில் பின்னர் வருடம் ஒருமுறை.

 
ஆண்மை
நீக்கம் செய்தல் 

DSC_3651

  • விலங்குகளை அமைதிப்படுத்தவும், முறையற்ற இனப்பெருக்கத்தினைத் தடுக்கவும், இனப்பெருக்க உறுப்புகளின் மூலம் பரவும் நோய்களைத் தடுக்கவும் அவைகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்படுகிறது.
  • விலங்குகளின் உடல் எடையினை விரைவில்  அதிகரிக்கச்செய்யவும், அவற்றின் இறைச்சியின் தரத்தினை மேம்படுத்தவும் ஆண்மை நீக்கம் செய்யப்படுகிறது.
  • இளம் குட்டிகளில் அவற்றின் 2-3  மாத வயதில் அறுவை சிகிச்சை மூலம் அல்லது எலாஸ்டேட்டர் முறை மூலம் ஆண்மை நீக்கம் செய்யப்படுகிறது.
  • இளம் குட்டிகளின் ஒரு வயது பூர்த்தி அடைவதற்கு முன்பு மூடிய முறை ஆண்மை நீக்கம் பர்டிசோ ஆண்மை நீக்கக் கருவி கொண்டு ஆண்மை நீக்கம் செய்யப்படுகிறது.
  • பர்டிசோ ஆண்மை நீக்கக் கருவி மூலம் ஆண்மை நீக்கம் செய்யும்போது விரைகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஸ்பெர்மாட்டிக் குழாயினை நசுங்கி விடுவதால் விரைகளுக்கு செல்லும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு  விரைகள் சுருங்கி விந்துகளின் உற்பத்தி தடை செய்யப்படுகிறது.
  • குளிர் காலத்தில் மட்டுமே விலங்குகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யவேண்டும். மழைக்காலத்தில் கட்டாயம் ஆண்மை நீக்கம் செய்யக்கூடாது. ஏனெனில் மழைக்காலத்தில் ஈரப்பதம் இருப்பதால் ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட உடற்பகுதியில் ஈக்கள் உட்கார்ந்து அதனால் புண்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
  • ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட குட்டிகளை சில நாட்களுக்கு சுத்தமான, சவுகர்யமான கொட்டகைகளில் கட்டி பராமரிக்கவேண்டும்.
  • பர்டிசோ கருவி மூலம் ஆண்மை நீக்கம் செய்வது பாதுகாப்பான, விரைவான, கிருமிகளின் தாக்கம் குறைவாக ஏற்படக்கூடிய ஆண்மை நீக்க முறையாகும்.
  • எலாஸ்டேட்டர் மூலம் ஆண்மை நீக்கம் செய்வது கன்றுகளுக்கு அல்லது இதர விலங்குகளுக்கு வலியினை அதிகம் ஏற்படுத்தும் என்பதால் இம்முறை பொதுவாக  பின்பற்றப்படுவதில்லை.

 பிறந்த குட்டிகளின் பராமரிப்பு

DSC_3651
  • குட்டி பிறந்தவுடன் பஞ்சு அல்லது பழைய துணி கொண்டு குட்டியின் வாயையும் மூக்கையும் நன்கு துடைக்கவேண்டும். குட்டி மூச்சுவிட எளிதாகுமாறு வாயைச்சுற்றயுள்ள திரவத்தை அகற்றவேண்டும்.
  • பின்னங்கால்களையும் பிடித்து தலைகீழாக இருக்குமாறு குட்டியை சில நொடிகள் பிடித்திருக்கலாம். இது மூச்சுக் குழல் பாதையை சுத்தம் செய்ய உதவும்.
  • குட்டி பிறந்த அரை மணிக்குள் தானாகவே எழுந்து தாயிடம் பால் குடிக்கவேண்டும். இல்லாவிடில் அது எழுந்து நடக்க உதவி செய்தல் வேண்டும்.
  • தாய் ஆட்டுக்குட்டியை நாக்கினால் தடவி விட அனுமதிக்கவேண்டும்.  தடவி விடுவதால் குட்டியின் மேலுள்ள உறை போன்ற திரவத்தை எடுத்து விடும்.
  • தொப்புள் கொடியின் மறு நுனியை டின்ச்சர் (அ) அயோடின் கொண்டு நனைத்தல் வேண்டும். இவ்வாறு 12 மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு முறை செய்யவேண்டும்.
  • முதல் அரை மணி நேரத்திற்குள் குட்டியை சீம்பால் குடிக்க வைக்க வேண்டும். குட்டி தானாக குடிக்க முடியாவிட்டால் காம்பை எடுத்து வாயில் வைத்துப் பாலை பீய்ச்சி விடுதல் நலம்.
  • புதிதாகப் பிறந்த குட்டிகளைத் தனியே வைத்துப் பராமரிக்க வேண்டும்.
  • தொப்புள் கொடியை சிறிது நேரம் விட்டு நறுக்கிப் பின் உடனே அயோடின் அல்லது டிஞ்சர் போன்ற தொற்று நீக்கிகளைத் தடவி விடவேண்டும்.
  • முதல் இரண்டு மாதங்கள் குளிர் மழை எந்த ஒரு பாதிப்புமின்றி குட்டிகளைக் கவனமாகப் பாதுகாத்தல் வேண்டும்.
  • முதல் இரண்டு வாரங்களில் கொம்பு நீக்கம் செய்தல்.
  • கிடா குட்டிகள் இனச்சேர்கைக்குத் தேவையானவை போக மீதமுள்ள வற்றை காயடித்து விட டவேண்டும்.
  • சரியான தடுப்பூசிகளைத் தவறாமல் தகுந்த நேரம் போடுதல் வேண்டும்.
  • 8 வார வயதில் தாயிடமிருந்து குட்டியைப் பிரித்துத் தனியே வளர்க்கப் பழக்கவேண்டும்.

 தாயிடமிருந்து குட்டிகளைப் பிரித்து பராமரித்தல்

DSC_3651

 

  • 90 நாட்களில் குட்டியைத் தாயிடமிருந்து பிரித்துவிட வேண்டும்.
  • பால் உற்பத்தி தாய் ஆட்டிடம் குறைவாக இருக்கும்பட்சத்தில் 60 நாட்களிலிலேயே பிரித்து விடுதல் நலம்.
  • தாய்ப்பாலுக்குப் பதில் வேறு கலப்புத் தீவனங்கள் அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பால் அளித்தல் அவசியம்.
  • முள், குழி, அதிகக் கற்கள் கொண்ட பகுதிகளில் குட்டிகளை மேய விடுதல் கூடாது.
  • ஏனெனில் அவற்றுக்குக் கண் எரிச்சல், ஒவ்வாமை மற்றும் ரோமம் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.
மேலே செல்க